
Cricket
oi-Yogeshwaran Moorthi
அகமதாபாத்: இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் சஞ்சு சாம்சனின் பேட்டிங்கில் இருந்த புத்திசாலித்தனத்தை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். சஞ்சு சாம்சனுக்கு யாரை அட்டாக் செய்ய வேண்டும், யாரை அட்டாக் செய்யக் கூடாது என்பது நன்றாக தெரிந்திருப்பதாக கூறிய சச்சின் டெண்டுல்கர், இஷான் கிஷனின் ஷாட்கள் நம்ப முடியாத வகையில் அற்புதமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்களை குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 8 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 89 ரன்களையும், இஷான் கிஷன் 54 ரன்களையும், அபிஷேக் சர்மா 52 ரன்களையும் குவித்தனர்.

கடைசி நேரத்தில் களமிறங்கிய சிவம் துபே 8 பந்துகளில் 2 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 26 ரன்களை விளாசினார். இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சனின் பேட்டிங் மிகவும் புத்திசாலித்தனமாக அமைந்தது. ஏனென்றால் மேட் ஹென்றி மற்றும் மிட்சல் சான்ட்னர் ஆகியோரை அட்டாக் செய்யாமல் நிதானம் காட்டினார். தனது ஜோனில் இருந்த பந்துகளை மட்டுமே அட்டாக் செய்தார்.
அதேபோல் ஜேக்கப் டஃபி, ரச்சின் ரவீந்திர, ஃபெர்குசன் உள்ளிட்ட பவுலர்களையும் முதல் பந்தில் இருந்தே அட்டாக் செய்தார். கடந்த 2 அரைசதங்களை விடவும் இந்த அரைசதம் அடிக்க கொஞ்சம் கூடுதல் பந்துகளை சஞ்சு சாம்சன் எடுத்து கொண்டார். ஆனாலும் அரைசதத்திற்கு பின் சஞ்சு சாம்சன் அதற்கும் சேர்த்து வைத்து சிக்சர்களை விளாசினார்.
இதற்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில், சஞ்சு சாம்சனின் பேட்டிங் மிகவும் ஸ்மார்ட்டாக இருந்தது. யாரை அட்டாக் செய்ய வேண்டும், யாரின் பவுலிங்கில் டிஃபென்ஸ் விளையாட வேண்டும் என்பதை நன்றாக அறிந்து வைத்திருந்தார்.
அதேபோல் இஷான் கிஷனின் பேட் ஸ்பீட் சிறப்பாக அமைந்தது. அவர் சில நம்ப முடியாத ஷாட்களை அற்புதமாக விளையாடினார். ஒருவேளை 275 ரன்களை விளாசினால், இது சிறந்த ஸ்கோராக அமையும் என்று பதிவிட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கரின் பேட்டிற்கு பின் ஹர்திக், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், இந்திய அணியால் அந்த ஸ்கோரை எட்ட முடியவில்லை.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/sachin-tendulkar-sachin-tendulkar-said-sanju-samson-is-batting-very-smartly-knowing-whom-to-attack-779713.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
