
Cricket
oi-Yogeshwaran Moorthi
அகமதாபாத்: 2026 டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கும், பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு கிரிக்கெட் ஜாம்பவான் தோனி பாராட்டியுள்ளார். அதிலும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முகத்தில் சிரிப்பை பார்க்கவே அழகாக இருப்பதாக கூறியுள்ள தோனி, அவரின் முகத்தில் இருக்கும் தீவிரம் கலந்த புன்னகை ஒரு கில்லர் காம்போ என்றும் பாராட்டியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அடைந்துள்ள வெற்றி, பலரையும் பிரமிக்க வைத்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்களை குவித்தது.

இதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 19 ஓவர்களில் வெறும் 159 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதனால் 3வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது. இந்தப் போட்டியை நேரில் காண்பதற்காக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான கபில் தேவ், தோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் நேரில் அழைக்கப்பட்டிருந்தனர்.
அதேபோல் இதற்கு முன் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கேப்டன்களான தோனி மற்றும் ரோகித் சர்மா இருவரும் கோப்பையை அறிமுகம் செய்தனர். கபில் தேவ், தோனி, ரோகித் சர்மா ஆகியோர் ஒன்றாக சேர்ந்து போட்டியை பார்த்த வீடியோ இந்திய ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்திய அணியை பாராட்டி தோனி ஒரு பதிவை எழுதி இருக்கிறார்.
இன்ஸ்டாகிராம் தளத்தில் தோனி எழுதியிருக்கும் பதிவு ஜாலியான ஒன்றாக அமைந்துள்ளது. அதுவும் தனது சக டீம் மேட்டான கவுதம் கம்பீரை பாராட்டியதோடு, அவரின் சிரிப்பு தொடர்பாகவும் எழுதி இருக்கிறார். அந்தப் பதிவில் தோனி, அகமதாபாத் மைதானத்தில் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. அதற்காக இந்திய அணிக்கு, பயிற்சியாளர்கள் குழுவுக்கு, ரசிகர்களுக்கும் வாழ்த்துகள்.
அனைவரையும் பார்ப்பதே மகிழ்ச்சியாக உள்ளது. பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அவர்களே.. உங்கள் முகத்தில் சிரிப்பை பார்க்கவே அழகாக இருக்கிறது.. அதிலும் புன்னகையுடன் இருக்கும் தீவிரம் ஒரு கில்லர் காம்போ.. கொண்டாடுங்கள்.. நிச்சயமாக பும்ரா ஒரு சாம்பியன் பவுலர் என்று பதிவிட்டுள்ளார். தோனியின் பதிவு ரசிகர்களிடையே சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/t20-world-cup-2026-coach-sahab-smile-looks-great-on-u-intensity-with-smile-is-a-killer-combo-wrot-779755.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
