
International
oi-Vishnupriya R
டெஹ்ரான்: அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட தனது தந்தை அயத்துல்லா அலி காமேனியைத் தொடர்ந்து, மொஜ்தபா காமேனி ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என ஈரான் அரசு ஊடகங்கள், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளன.
ஈரான் அணு ஆயுத சோதனை நடத்துவதாக கருதிய அமெரிக்கா, அந்த நாட்டின் மீது இஸ்ரேலுடன் சேர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவதால் எண்ணெய் கிடங்குகள் தீப்பற்றி எரிந்து அதில் உள்ள சில விஷ வாயுக்கள் காற்றில் கலந்து பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உள்ளது.

இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான அபயதுல்லா காமேனி கொல்லப்பட்டார். மேலும் ராணுவ தளபதிகள் உள்பட உயர் அதிகாரிகளும் உயிரிழந்தனர். ஒரு வாரத்திற்கு மேலாக ஈரானில் தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்கா- இஸ்ரேல் படைகள், டெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறி வைத்து தாக்குதல் நடத்துகிறது.
காமேனி கொலைக்கு பதிலடி கொடுத்தால் பின்விளைவுகள் வேறு மாதிரி இருக்கும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் ஆயுதங்களை கைவிட்டுவிட்டு சரணடைய வேண்டும் என டிரம்ப் எச்சரித்தார்.
இதற்கு பதிலடியாக அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக அடுத்த 6 மாதங்களுக்கு தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில்தான் ஈரானின் புதிய உச்ச தலைவரை தேர்வு செய்வதற்காக மதகுருமார் கவுன்சில் ஆலோசனை செய்தது. அதன்படி கொல்லப்பட்ட அயதுல்லா காமேனியின் மகன் மொஜ்தபா காமேனி தேர்வு செய்யப்பட்டார்.
56 வயதான தீவிர போக்குடைய, இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் நெருங்கிய மொஜ்தபா, நீண்ட காலமாக தந்தையின் வாரிசாகப் பார்க்கப்பட்டு வந்தார்.
நடுத்தர மதகுருவான மொஜ்தபா காமேனிக்கு, ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் அனைத்து அரசு விவகாரங்களிலும் முழு அதிகாரம் உண்டு. அவரது புதிய பதவி உச்சபட்ச பலத்தைக் கொண்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கோபத்தை மொஜ்தபாவின் நியமனம் வரவழைக்கலாம். “எங்கள் ஒப்புதல் இல்லாவிட்டால், அவர் நீண்ட காலம் பதவி வகிக்க மாட்டார்,” என்று டிரம்ப் கூறினார். இஸ்ரேல், அறிவிப்புக்கு முன்னரே, புதிய தலைவரை இலக்கு வைப்போம் என அச்சுறுத்தியது.
ஈரானின் கொள்கைகள் வாரிசுரிமையை ஏற்காவிட்டாலும், மொஜ்தபாவுக்குப் பாதுகாப்புப் படைகளிலும், மறைந்த தந்தையின் அலுவலகத்திலும் வலுவான ஆதரவுண்டு. “நிபுணர்கள் சபை, அயதுல்லா சையத் மொஜ்தபா ஹொசைனி காமேனியை இஸ்லாமியக் குடியரசின் மூன்றாம் தலைவராக உறுதியான வாக்கெடுப்பின் மூலம் நியமித்தது,” என சபை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
யார் இந்த மொஜ்தபா காமேனி?
மொஜ்தபா 1969 இல் ஷியைட் புனித மஷாதில் பிறந்தார். தந்தை ஷாவைத் தூக்கியெறியப் பங்களித்தபோது வளர்ந்து, இளம் வயதில் ஈரான்-ஈராக் போரில் பணியாற்றினார். கோமின் மதப் பள்ளிகளில் மதக் கல்வியை முடித்தார்.
அரசுப் பதவிகளில் அவர் இடம்பெற்றதில்லை. எனினும், 2019 இல் தடை விதித்த அமெரிக்க கருவூலத் துறை, அரசுப் பதவிக்கு நியமிக்கப்படாமல் “அதிகாரப்பூர்வ திறனில்” அலி காமேனியின் பிரதிநிதியாகச் செயல்பட்டதாகக் குறிப்பிட்டது.
பொதுவெளியில் அரிதாகப் பேசிய மொஜ்தபா, ஆடை விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண் காவலில் மரணமடைந்ததை அடுத்து ஏற்பட்ட அமைதியின்மையின்போது போராட்டக்காரர்களால் விமர்சிக்கப்பட்டார்.
2005 இல் அதிபராக இருந்த மஹ்மூத் அஹ்மதிநெஜாத் உயர்வுக்கு இவரே காரணம் என நம்பப்படுகிறது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/mojtaba-khamenei-reportedly-chosen-as-new-supreme-leader-of-iran-after-death-of-ali-khamenei-779743.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
