
International
oi-Nantha Kumar R
டெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகின்றன. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வரும் நிலையில் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் வங்கிகள், நிதி நிறுவனங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படம். என்று ஈரான் வார்னிங் செய்துள்ளது. அதோடு பொதுமக்கள் இந்த இடங்களை விட்டு விலகியே இருக்க வேண்டும் என்று ஈரான் அறிவித்துள்ளது. இதனால் போர் மீண்டும் உக்கிரமாகி உள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல், அமெரிக்காவின் பாதுகாப்பு படை தளங்கள் உள்ள சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன் உள்பட பல நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் அமெரிக்கா கடும் கோபமடைந்துள்ளது. ஈரான் மீதான தாக்குதலை வலுவாக்கி .ள்ளது. இந்நிலையில் தான் தற்போது ஈரானில் உள்ள முக்கிய வங்கியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தலைநகர் டெஹ்ரானில் ‘பேங்க் செபா’ என்ற வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி அந்த நாட்டின் பொதுத்துறை வங்கியாகும். மேலும் ஈரானின் ராணுவத்துடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தான் ராணுவ தளவாடங்களுக்கு பணம் அனுப்பப்படுவதாக கூறப்படகிறத. இந்த வங்கியை குறிவைத்து நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் வங்கியுடன் இணைந்த நிர்வாக கட்டடம் சேதமடைந்துள்ளது.
இதனால் ஈரான் கடும் சினம் கொண்டுள்ளது. இந்நிலையில் தான் தற்போது ஈரான் பரபரப்பான வார்னிங்கை கொடுத்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ‘காதகம் அல் அன்பியா’ என்ற பெயரில் ராணுவ தலைமையகம் செயல்பட்டு வருகிறது. இந்த தலைமையகத்தின் செய்தி தொடர்பாளர் இப்ராஹிம் ஸோல்ஃபாகரி அமெரிக்கா, இஸ்ரேல் மட்டுமின்றி அரபு நாடுகளுக்கு கடும் வார்னிங் செய்துள்ளார்.
இதுபற்றி இப்ராஹிம் ஸோல்ஃபாகரி கூறுகையில், ” ஈரானின் வங்கி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த பிராந்தியத்தில் (மத்திய கிழக்கு பிரந்தியம்) உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய வங்கிகள், நிதி நிறுவனங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும்.
தங்களின் தோல்வியடைந்த பிரச்சாரத்தை தொடர்ந்து பயங்கரவாத அமெரிக்க இராணுவமும், கொடுங்கோல் சியோனிச ஆட்சியும் (இஸ்ரேல்) நாட்டின் வங்கிகளில் ஒன்றை இலக்காக கொண்டு தாக்கி உள்ளது.
இது சட்டவிரோதமானது. அதுமட்டுமின்றி வழக்கத்துக்கு மாறானது. இதனால் இந்த பிராந்தியத்தில் அமெரிக்கா, இஸ்ரேலுடன் தொடர்புடைய வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும். இதனால் பொதுமக்கள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து 1,000 மீட்டர் தொலைவிலேயே இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-war-tehran-target-banks-and-financial-instritutions-in-middel-east-780489.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
