
International
oi-Halley Karthik
தெஹ்ரான்: ஈரானின் தலைவராக இருந்த காமெனி சமீபத்தில் கொல்லப்பட்டார். இதனையடுத்து அவரது மகன் ‘மொஜ்தபா காமெனி’, புதிய தலைவராக பொறுப்பேற்றிருந்த நிலையில், தற்போது முதல் முறையாக நாட்டு மக்களிடையே உரையாற்றியுள்ளார். தனது உரையில், அமெரிக்காவின் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் தொடரும் என்று கூறியிருக்கிறார்.
ஈரானின் பக்கத்து நாடுகளில் அமெரிக்காவின் ராணுவ நிலைகள் இருக்கின்றன. இதனை குறி வைத்தும், அமெரிக்க ராணுவத்திற்கு உதவும் பொருளாதார நிலைகள் மீதும் ஈரான் சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதல், பக்கத்து நாடுகளின் மீதான நேரடி தாக்குதலாக பார்க்கப்பட்டது. இப்படி இருக்கையில், இது குறித்து ‘மொஜ்தபா காமெனி’ விளக்கமளித்திருக்கிறார். விளக்கத்தில், நாங்கள் பக்கத்து நாடுகளை தாக்கவில்லை. மாறாக, அங்கு இருக்கும் அமெரிக்காவின் ராணுவ நிலைகள் மீதுதான் தாக்குதல் நடத்தி வருகிறோம். இந்த தாக்குதல் மேலும் தொடரும் என்று கூறியிருக்கிறார்.
மேலும் அவர் கூறியதாவது, “மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அனைத்து ராணுவ தளத்தையும் அமெரிக்கா உடனடியாக மூட வேண்டும். எங்களின் எதிரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, ஹர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். அதேபோல போரில் கொல்லப்பட் ஈரானிய அப்பாவி மக்களுக்காக பழி வாங்கப்படும். அமெரிக்காவிடமிருந்து இழப்பீடு பெறும் வரை இந்த போர் தொடரும்” என்று கூறியிருக்கிறார்.
பிப்ரவரி 28 அன்று தெஹ்ரானில் நடைபெற்ற அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில், மொஜ்தபா காமெனியின் தந்தை கொல்லப்பட்டபோது, மொஜ்தபா காமெனி காயமடைந்ததை ஈரானிய அதிகாரிகள் கூறியிருந்தனர். இதனையடுத்து 88 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர்கள் சபையால் மோஜ்தபா தலைமைப் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-new-supreme-leader-mojtaba-khamenei-vows-to-continue-attacks-on-us-military-bases-amid-escalati-780845.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
