1 சொட்டு விஷம்.. 100 உயிர்கள் பலி: உலகின் காடுகளின் நிழலில் ஒளிந்திருக்கும் ஆபத்தான 10 விஷ பாம்புகள் | 1 Drop of Venom, 100 Lives at Risk! The 10 Most Dangerous Snakes on the Hunt in the World’s Shadowy Forests

International

oi-Hema Vandhana

வாஷிங்டன்: விஷப்பாம்புகள் என்றாலே மனிதர்களுக்கு உடனே ஒரு பயமும் அதே நேரத்தில் ஒரு ஆச்சரியமும் தோன்றும்.. இயற்கையில் இருக்கும் அதிசயமான உயிரினங்களில் பாம்புகளும் முக்கியமானவை.. உலகம் முழுவதும் பல வகையான பாம்புகள் வாழ்ந்து வருகின்றன.. அவற்றில் சில பாம்புகள் விஷம் இல்லாதவை.. ஆனால் சில பாம்புகள் மிகவும் ஆபத்தான விஷத்தைக் கொண்டிருக்கின்றன.. தங்களை காப்பாற்றவும் இரையை பிடிக்கவும் இந்த விஷத்தை பயன்படுத்துகின்றன.. உலகிலேயே மிகவும் ஆபத்தான விஷப்பாம்புகள் பற்றி தெரிந்துகொண்டால் அவற்றின் சக்தி எவ்வளவு அதிகம் என்பதை புரிந்துகொள்ளலாம்.

இந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் இருப்பது ஆஸ்திரேலியாவில் காணப்படும் இன்லேண்ட் தைப்பான் பாம்பு.. உலகிலேயே மிகவும் விஷம் அதிகமாக உள்ள பாம்பாக இதை பலர் குறிப்பிடுகிறார்கள்..

Venomous Snakes Dangerous Snakes Lethal Venom

உலகின் விஷப்பாம்பு

இந்த பாம்பு ஒருமுறை கடித்தால் வெளியேறும் விஷம் மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும்.. சில விஞ்ஞானிகள் கூறுவதுபோல், அதன் விஷம் பல மனிதர்களின் உயிரைக் கூட பறிக்கக்கூடிய அளவுக்கு ஆபத்தானதாக இருக்கலாம்..

இதற்கு அடுத்தபடியாக கடலில் வாழும் பெல்ச்சர் கடல் பாம்பு மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது.. இது கடலில் வாழும் ஒரு சிறிய பாம்பு என்றாலும், இதன் விஷம் மிகவும் சக்திவாய்ந்ததாக உள்ளது.. மிகவும் குறைந்த அளவு விஷம் வெளியேறினாலும் கூட அதன் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன..

இந்தியாவின் பிக்ஃபோர்

ஆப்பிரிக்காவின் காடுகளில் வாழும் பிளாக் மாம்பா உலகம் முழுவதும் மிகவும் பயங்கரமான பாம்புகளில் ஒன்றாக அறியப்படுகிறது.. இது மிகவும் வேகமாக நகரும் தன்மை கொண்டது.. ஒருமுறை கடித்தால் அதன் விஷம் மனித உடலில் உள்ள நரம்பு மண்டலத்தை வேகமாக பாதிக்கக்கூடும்..

ஆசியாவில் பரவலாக காணப்படும் ராஜநாகம் உலகிலேயே மிக நீளமான விஷப்பாம்பாக அறியப்படுகிறது.. இது ஒரே நேரத்தில் அதிக அளவு விஷத்தை செலுத்தக்கூடிய திறன் கொண்டது.. மேலும் மற்ற பாம்புகளையே உணவாக சாப்பிடும் வித்தியாசமான பழக்கமும் இதற்கு உள்ளது..

இந்தியாவில் “பிக் ஃபோர்” என்று அழைக்கப்படும் நான்கு முக்கிய விஷப்பாம்புகளில் சுருட்டைப் பாம்பு ஒன்றாகும்.. இந்தியாவில் ஏற்படும் பாம்பு கடி மரணங்களில் இதுவும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.. இதன் விஷம் உடலில் இரத்த ஓட்டத்தை கடுமையாக பாதித்து உடல்நிலையை மோசமாக்கும்..

ஈஸ்டர்ன் பிரவுன் ஸ்நேக்

ஆஸ்திரேலியாவில் காணப்படும் ஈஸ்டர்ன் பிரவுன் ஸ்நேக் மற்றும் புலிப்பாம்பு போன்றவை மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு அருகில் அதிகமாக காணப்படுவதால் ஆபத்து அதிகமாக இருக்கும்.. இதுபோல் தென் அமெரிக்காவில் உள்ள காடுகளில் வாழும் பெர்-டி-லான்ஸ் பாம்பு விவசாய நிலங்களில் வேலை செய்யும் மக்களுக்கு பெரும் அச்சமாக உள்ளது..

பிலிப்பைன்ஸ் பகுதியில் காணப்படும் சில நாகப்பாம்புகள் தூரத்தில் இருந்தே விஷத்தைத் துப்பும் திறன் கொண்டவை என்பதால் அவையும் மிகவும் ஆபத்தானவையாக கருதப்படுகின்றன.. இதேபோல் டெத் ஆடர் என்ற பாம்பு மின்னல் வேகத்தில் தாக்கும் திறன் கொண்டது..

இவை அனைத்தும் இயற்கையின் சமநிலையை காக்கும் முக்கியமான உயிரினங்கள் என்றாலும், மனிதர்கள் அவற்றின் வாழும் இடங்களுக்கு அருகில் சென்றால் அவை தங்களை காப்பாற்றுவதற்காக தாக்கும்.. அதனால் காடு போன்ற இடங்களுக்கு செல்லும்போது மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.. இயற்கையை புரிந்து கொண்டு அதனை மதிப்பதே மனிதர்களுக்கு பாதுகாப்பான வழியாகும்…!!!

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/1-drop-of-venom-100-lives-at-risk-the-10-most-dangerous-snakes-on-the-hunt-in-the-world-s-shadowy-780909.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo