லைவ் ஓடிக்கொண்டிருக்கும்போது.. கோட் சூட்-ஐ கழற்றிய பெண் செய்தியாளர்! தாய்லாந்து ஊடகம் செய்த சம்பவம் | Thai TV Anchors Ditch Suits on Air to Support Government’s Energy-Saving Drive

International

oi-Halley Karthik

பாங்காக்: தாய்லாந்து செய்தி வாசிப்பாளர்கள், லைவ் ஓடிக்கொண்டிருந்தபோது திடீரென தங்களது கோட் சூட்களை கழற்றிய சம்பவம் பரபரப்பாகியிருக்கிறது. போர் காரணமாக தாய்லாந்து அரசு எரிபொருள் தட்டுப்பாட்டை அறிவித்திருக்கிறது. இதனையடுத்து இந்த விநோத சம்பவம் நடந்திருக்கிறது.

ஈரான்-அமெரிக்கா போர் உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக ஆசிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.

Thai TV anchors

இந்தோனேசியாவில், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிசக்தி சேமிப்பு நடவடிக்கையை அறிவித்திருக்கிறது. அதாவது நம்மூரை போலவே, தாய்லாந்திலும் எரிபொருள் இறக்குமதிதான் செய்யப்படுகிறது. எனவே எரிபொருள் விலை அதிகரித்திருக்கிறது. மின்சார கட்டணமும் உச்சத்தை தொட்டிருக்கிறது. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

குறிப்பாக அரசு அலுவலகங்களில், ஏசி-ஐ 26-27 டிகிரியில் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பொதுவாக 24 டிகிரியில் வைத்தால் அடிக்கிற வெயிலுக்கு ஜில்லென்று இருக்கும். ஆனால், 27ல் வைத்தால் மின்சாரம் குறைவாகவே செலவாகும். எனவேதான் இப்படி மாற்றி வைக்க அறிவுறுத்தப்படுகிறது. அரசின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் செய்தியாளர்கள் இப்படி செய்திருக்கின்றனர்.

வெப்பநிலை அதிகரிக்கப்பட்டதால் வழக்கமான கனமான கோட்சூட்களை அணிய முடியாது. புழுக்கம் அதிகமாக இருக்கும். எனவே கோட் சூட்டை பெண் செய்தியாளர் ஒருவர் உட்பட, 3 செய்தியாளர்கள் கோட் சூட்டை கழற்றியுள்ளனர்.

தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளன. அதேபோல அலுவலகங்களில் ஒன்றிரண்டு மாடிகளை ஏற லிப்ட் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு, நடந்தே செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது, அவசியம் எனில் இரவு 10 மணிக்கு மேல் பெட்ரோல் பங்குகளை மூடவும் அரசு ஆலோசித்து வருகிறது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/thai-tv-anchors-ditch-suits-on-air-to-support-government-s-energy-saving-drive-781111.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo