அமெரிக்க தூதரகம் நோக்கி பாய்ந்த ராக்கெட்.. ஈராக்கில் உச்சக்கட்ட பதற்றம்! ஆட்டத்தை தொடங்கிய ஈரான் | Iran Backed Suicide Drones Hit US Embassy Baghdad; Helipad Fireballed Amid Escalating Conflict

International

oi-Halley Karthik

பாக்தாத்: ஈராக் தலைநகர், பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் நோக்கி, ஈரான் ஆதரவு அமைப்புகள் தாக்குதலை நடத்தியிருக்கின்றன. இதில் தூதரகம் சேதமடைந்திருக்கிறது.

அமெரிக்காவுக்கு ஆதரவாக வளைகுடா நாடுகள் இருக்கின்றன. இந்த நாடுகளில் உள்ள அமெரிக்காவின் சொத்துக்கள் மீது ஈரான் சரமாரியாக தாக்குதலை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த தாக்குதலும் நடந்திருக்கிறது.

Iran Backed Suicide Drones Hit US Embassy

ஈரானின் பதிலடி

ஈரானை அடிபணிய வைக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சிக்கிறது. ஆனால், பிடி கொடுக்காமல் ஈரான் நழுவவே.. இஸ்ரேலுடன் சேர்ந்துக்கொண்டு அந்நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர், காமெனி கொல்லப்பட்டார். இதற்கு ஈரான் வரிசையாக ஏவுகணைகளை வீச பதிலடி கொடுக்க தொடங்கியிருக்கிறது. இந்த தாக்குதலில் அமெரிக்காவின் சொத்துக்கள் குறி வைக்கப்பட்டிருக்கின்றன.

ஈரான் ஆதரவு படைகள் தாக்குதல்

குறிப்பாக ஈரான் ஆதரவு படைகள், இன்று காலை பாக்தாத்தின் ‘கராடா’ பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி ஏவுகணைகளை வீசியிருக்கின்றன. ‘பாப்புலர் மொபிலைசேஷன் ஃபோர்ஸ்’ எனும் அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறது. சமீபத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் இந்த அமைப்பின் முக்கிய தளபதிகள் இருவர் கொல்லப்பட்டனர். எனவே, இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

ஜர்க் ஆன அமெரிக்கா

இந்த தாக்குதலை ஈரான் செய்தி ஊடகமான பிரஸ் டிவி உறுதி செய்திருக்கிறது. தற்கொலை டிரோனை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், தாக்குதலில் தூதரகத்தின் ஹெலிபேட் பாதிக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தூதரகத்திலிருந்து தீ பிழம்பு மற்றும் கரும் புகை வரும் வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகின்றன.

பாதுகாப்பான பகுதி

விஷயம் என்னவெனில், தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி ‘கிரீன் ஜோன்’ ஆகும். அதாவது இந்த பகுதிக்குள் எந்த ஏவுகணையும் தாக்குதல் நடத்த முடியாது. உலகின் மிகவும் பாதுகாப்பான பகுதிகளில் இது ஒன்றாக இருக்கிறது. அப்பேற்பட்ட பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது, பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

நல்வாய்ப்பாக தாக்குதலில் யாரும் உயிரிழக்கவோ, காயமடையவோ இல்லை. ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து, தூதரகத்திற்கு லெவல் 4 பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-backed-suicide-drones-hit-us-embassy-baghdad-helipad-fireballed-amid-escalating-conflict-781331.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo