“கண்ணீர் கதவு..” ஹார்முஸை விட முக்கியம்.. இன்னொரு ஜலசந்தியை மூட ஹவுதி மிரட்டல்.. உலகமே கூட முடங்கும் | After Strait of Hormuz, Houthis Threaten Bab-el-Mandeb closure: What does it meant for Global Trade

International

oi-Vigneshkumar

டெல்லி: ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே “கண்ணீர்க் கதவு” எனப்படும் பாப் அல்-மண்டெப் ஜலசந்தியும் கூட மூடப்படும் ஆபத்து உருவாகியுள்ளது. அந்த ஜலசந்தியும் மூடப்பட்டால் அது மத்திய கிழக்கின் சரக்கு போக்குவரத்தை மிக மோசமாகப் பாதிக்கப்படும் என்றே அஞ்சப்படுகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் மூன்றாவது வாரமாக நீள்கிறது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் கப்பல்கள் அடைக்கின்றன. இதனால் உலகளாவிய எண்ணெய் போக்குவரத்து 20% குறைந்துள்ளது. இதன் காரணமாக ஒரு பேரல் எண்ணெய் விலை 100 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இது இந்தியா உட்பட உலகெங்கும் கேஸ் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது.

After Strait of Hormuz Houthis Threaten Bab-el-Mandeb closure What does it meant for Global Trade

மிரட்டல்

இது ஒரு பக்கம் இருக்க.. தற்போது, ஈரானின் முக்கிய ஆதரவுப் படைகளான ஏமன் ஹவுத்தி, பாப் அல்-மண்டெப் ஜலசந்தியையும் மூடுவதாக அச்சுறுத்தியுள்ளனர். இது உலக கடல்வழி எரிசக்தி மற்றும் வர்த்தகத்தில் 30% முடக்கி, ஒரு பேரழிவுகரமான இரட்டை தடங்கலை உருவாக்கும் அபாயம் உள்ளது.

கண்ணீர்க் கதவு

ஈரான் மற்றும் ஓமன் இடையே 33 கி.மீ. அகலம் கொண்ட ஹார்முஸ் ஜலசந்தி, பெர்சியன் வளைகுடா எண்ணெய் மற்றும் எல்பிஜி எரிவாயுவை சந்தைகளுக்குக் கொண்டு செல்கிறது. “கண்ணீர்க் கதவு” என்று பொருள்படும் பாப் அல்-மண்டெப் ஜலசந்தி, ஏமன், ஜிபூட்டி மற்றும் எரிட்ரியா இடையே சுமார் 29 கி.மீ. அகலம் கொண்டது. இது செங்கடலை இந்தியப் பெருங்கடலுடன் இணைத்து, சூயஸ் கால்வாய் வழியாக ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான சரக்கு போக்குவரத்திற்கு முக்கியப் பாலமாக விளங்குகிறது.

என்ன நடக்கும்

இந்த இரண்டு ஜலசந்திகளும் மூடப்பட்டால், ஆசிய ஐரோப்பா வர்த்தகக் கப்பல்கள் தென் ஆப்பிரிக்காவின் கேப் ஆப் குட் ஹோப் வழியாகச் செல்ல 10 முதல் 15 நாட்கள் கூடுதலாகப் பயணிக்க நேரிடும். இதனால் எரிபொருள் செலவுகள் அதிகரித்து கச்சா எண்ணெய் விலை உயரும். சில ஆண்டுகளுக்கு முன்பு எவர் கிவன் சம்பவம் நினைவிருக்கும். அதாவது கப்பல் ஒன்று நடுவில் மாட்டிக் கொண்டது. அப்போதே பல பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்ட நிலையில், மீண்டும் அதுபோல ஒரு பேரழிவு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது

ஏமன் நாட்டின் பெரும் பகுதியை கண்ட்ரோலில் வைத்துள்ள ஹவுத்திகள் இப்போது ஈரானுக்கு ஆதரவாக இறங்கியுள்ளனர். இந்த ஹவுதிக்கள், கடல்வழி தாக்குதல்களில் திறமையானவர்கள். ஈரான் வழங்கிய ட்ரோன்கள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் சிறிய படகுகள் மூலம் அவர்கள் பலத்தை நிரூபித்துள்ளனர். 2023 காசா தாக்குதல்களையடுத்து, மார்ஸ்க் நிறுவனம் தனது கப்பல்களை சூயஸ் கால்வாய்க்குப் பதிலாக மாற்றுப் பாதைகளில் அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாதிப்புகள் மிக மோசம்

இதுபோல ஒரே நேரத்தில் இரண்டு ஜலசந்திகள் மூடப்பட்டால், நாளொன்றுக்கு 8.8 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் மற்றும் 12% கண்டெய்னர் போக்குவரத்து பாதிக்கப்படும். கப்பல் காப்பீடு செலவுகள் பலமடங்கு உயர்ந்து, மின்னணு பொருட்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் அனைத்தும் சீர்குலையும். சவுதி அரேபியாவின் செங்கடல் ஏற்றுமதிகள் மிகவும் பாதிக்கப்படும். இந்தியாவின் 90% சமையல் எரிவாயு விநியோக நெருக்கடி மோசமடையும். ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் பணவீக்கம் அதிகரித்து, கடன் நெருக்கடிகள் ஏற்படும் அச்சுறுத்தல் உள்ளது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/after-strait-of-hormuz-houthis-threaten-bab-el-mandeb-closure-what-does-it-meant-for-global-trade-781461.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo