
International
oi-Halley Karthik
பாரிஸ்: ஈரானுக்கு எதிராக, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தங்கள் போர் கப்பல்களை ஹர்முஸ் நீரிணைக்கு அனுப்ப வேண்டும் என்று டிரம்ப் கேட்டிருந்தார். ஆனால், அப்படியெல்லம் அனுப்ப முடியாது என்று பிரான்ஸ் அதிபர் கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டார்.
பிரான்ஸ் இப்படி சொல்லும் என்று, டிரம்ப் கனவில் கூட நினைத்து பார்த்திருக்கவில்லை. பிரான் அதிபரின் இந்த பதில், அமெரிக்காவை மொக்கை வாங்க வைத்திருக்கிறது.

டிரம்ப் கேட்டது என்ன?
அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது ட்ரூத் சோஷியல் மீடியாவில், “ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை (Hormuz Strait) மூடுவதற்கு முயற்சிப்பதால் பாதிக்கப்பட்டுள்ள பல நாடுகள், அந்தப் பாதையைத் திறந்து வைக்கவும் பாதுகாப்பாக வைத்திருக்கவும் அமெரிக்காவுடன் இணைந்து போர்க்கப்பல்களை அனுப்பவுள்ளன. நாங்கள் ஏற்கனவே ஈரானின் ராணுவத் திறனை 100% அழித்துவிட்டோம்.
பிரான்ஸிடம் கெஞ்சல்
ஆனால், அவர்கள் எவ்வளவு மோசமாகத் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், இந்த நீர்வழிப் பாதையில் ட்ரோனை அனுப்புவதோ, கண்ணிவெடியை போடுவதோ அல்லது ஏவுகணையை ஏவுவதோ அவர்களுக்கு எளிதான காரியம். இந்தச் செயற்கைத் தடையால் பாதிக்கப்பட்டுள்ள சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா, பிரிட்டன் மற்றும் பிற நாடுகள் இந்தப் பகுதிக்குத் தங்கள் கப்பல்களை அனுப்பும் என்று நம்புகிறேன்.
ஹர்முஸ் ஜலசந்தி
இதன் மூலம் ஹார்முஸ் ஜலசந்தி இனி அச்சுறுத்தலாக இருக்காது. இதற்கிடையில், அமெரிக்கா ஈரானின் கடற்கரைப் பகுதிகளில் மிகக் கடுமையான குண்டுவீச்சை நிகழ்த்தும் மற்றும் ஈரானியப் படகுகள் மற்றும் கப்பல்களைச் சுட்டு வீழ்த்தும். எப்படியாவது, விரைவில் நாங்கள் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்து, பாதுகாப்பான மற்றும் சுதந்திரமான பாதையாக மாற்றுவோம்” என்று பதிவிட்டிருந்தார்.
மொக்கை வாங்கிய டிரம்ப்
இதற்குதான் பிரான்ஸ் மறுப்பு தெரிவித்திருக்கிறது. பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம், “ஹர்முஸ் ஜலசந்திக்கு கூடுதல் போர்க்கப்பல்களை அனுப்பும் எண்ணம் எங்களுக்கு இல்லை” என்று தெரிவித்திருக்கிறது. பிரான்ஸின் போர்க்கப்பல்கள் தற்போது கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இதுவும் பாதுகாப்பு மற்றும் தற்காப்பு நோக்கத்திற்காகத்தான் என்று பிரான்ஸ் தெளிவுப்படுத்தியிருக்கிறது. டிரம்பின் கோரிக்கையை பிரான்ஸ் மறுத்துள்ளதால், அவர் மொக்கை வாங்கியிருக்கிறார்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/france-rejects-trumps-request-paris-refuses-to-send-warships-to-strait-of-hormuz-amid-iran-tension-781635.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
