140 கிமீ வேகத்துல வீசுவாரு.. சிஎஸ்கே முன்னாள் வீரரை தூக்கும் கேகேஆர்.. பிராவோ கொடுத்த ஐடியா! | IPL 2026: Ex CSK bowler to replace the injured Harshit Rana in KKR Squad who impressed the team officials in the Final Trails

Cricket

oi-Yogeshwaran Moorthi

மும்பை: ஐபிஎல் தொடரில் இருந்து கேகேஆர் அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் ராணா காயம் காரணமாக விலகி இருக்கும் சூழலில், அவரது இடத்தை நிரப்ப பல்வேறு வீரர்களையும் அந்த அணி நிர்வாகம் தேடி வருகிறது. அந்த வகையில் கேகேஆர் அணியின் ஆலோசகராக இருக்கும் பிராவோ, சிஎஸ்கே முன்னாள் வீரர் சிமர்ஜீத் சிங்கை பரிந்துரைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

ஐபிஎல் தொடருக்கு இன்னும் 2 வாரங்கள் கூட முழுமையாக இல்லாத சூழலில், அத்தனை அணிகளும் பயிற்சிகளை தொடங்கிவிட்டன. இன்னும் வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே பயிற்சி முகாமில் பங்கேற்கவில்லை. அதேபோல் பயிற்சியாளர் இன்னும் ஒரு சில நாட்களில் அந்தந்த அணிகளுடன் இணைய இருக்கின்றனர். இதனால் ஐபிஎல் அணி நிர்வாகங்கள் விளம்பர பணிகளில் தீவிரமாக உள்ளது.

IPL 2026

இதனிடையே கேகேஆர் அணிக்கு அடி மேல் அடி விழுந்து வருகிறது. முதலில் வங்கதேச அணியின் முஸ்தஃபிகுர் ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த சூழலில், திடீரென அரசியல் பிரச்சனை காரணமாக அவருக்கு இந்தியாவில் விளையாட எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கேகேஆர் அணியில் இருந்து முஸ்தாஃபிகுர் ரஹ்மான் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் டென்ஷனான வங்கதேச கிரிக்கெட் வாரியம், டி20 உலகக்கோப்பை தொடரிலும் பங்கேற்கவில்லை. இதனால் முஸ்தாஃபிகுர் ரஹ்மானுக்கான மாற்று வீரரை கேகேஆர் அணி நிர்வாகம் தேடி வந்தது. இப்படியான சூழலில் டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட முசாரபானியை ஒப்பந்தம் செய்திருக்கிறது.

இந்த நிலையில் திடீரென நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஹர்சித் ராணா காயம் காரணமாக விலகுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கான மாற்று வீரரை ஒப்பந்தம் செய்ய கேகேஆர் அணி ட்ரையல்ஸ் நடத்தி வருகிறது. ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே உள்ளிட்ட தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை டிரையல்ஸ்க்கு அழைத்துள்ளது.

மொத்தமாக 6 பவுலர்களை கேகேஆர் அணி டிரையல்ஸ் பார்த்த சூழலில், சிஎஸ்கே அணிக்காக ஆடிய சிமர்ஜீத் சிங் அந்த அணி நிர்வாகத்தை கவர்ந்திருக்கிறார். இதன் மூலமாக கேகேஆர் அணியின் ஆலோசகரான பிராவோவின் பரிந்துரை காரணமாக சிமர்ஜீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. இவர் கடந்த சீசனில் ஐதராபாத் அணிக்காக விளையாடியவர்.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2026-ex-csk-bowler-to-replace-the-injured-harshit-rana-in-kkr-squad-who-impressed-the-team-offi-781885.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo