
International
-Mani Singh S
பீஜிங்: ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய்யுடன் சீனாவுக்கு புறப்பட்ட கப்பல், நடுக்கடலில் திடீரென ரூட்டை மாற்றி இந்தியாவை நோக்கி வரத்தொடங்கியுள்ளது. இன்னும் மூன்று நாட்களில் இந்தியாவுக்கு இந்த கப்பல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எண்ணெய் கப்பல் திடீரென இந்தியாவுக்கு திரும்பியது சீனாவுக்கு அதிர்ச்சி அளிக்க கூடிய ஒன்றாக அமைந்து இருக்கிறது
சீனாவுக்குச் சென்று கொண்டிருந்த ரஷ்ய எண்ணெய் கப்பலான ‘அக்வா டைட்டன்’, தென் சீனக் கடலில் தனது பாதையை மாற்றிக்கொண்டு தற்போது இந்தியாவை நோக்கி விரைந்துள்ளது. ஜனவரி இறுதியில் பால்டிக் கடலில் இருந்து ஏற்றப்பட்ட ‘யூரல்ஸ்’ கச்சா எண்ணெயுடன், இக்கப்பல் வரும் 21 ஆம் தேதி நியூ மங்களூரை வந்தடைய உள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் ராணுவ கட்டமைப்புகளை ஈரான் தாக்கி வருகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ கட்டமைப்புகளில் நடத்தப்படும் தாக்குதலால், அங்கு உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது. உலககின் 20 சதவீத எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் இதனால், கடும் பாதிப்பினை சந்தித்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை அதிகரிக்க அமெரிக்கா அனுமதி அளித்தது. ஏற்கனவே ரஷ்யாவிடம் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வந்த இந்தியா, அமெரிக்காவின் அழுத்தத்தால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்தது.
ரிஷாவோ துறைமுகம் நோக்கி
தற்போது அமெரிக்கா அனுமதி அளித்து இருக்க கூடிய சூழலில் மீண்டும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா அதிகரித்துள்ளது. இந்த நிலையில்தன், சீனாவுக்கு சென்ற ரஷ்ய கப்பல் நடுக்கடலில் யுடேர்ன் அடித்து இந்தியாவை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. அஃப்ராமாக்ஸ்’ என்ற இந்த கப்பல் முதலில் சீனாவின் ரிஷாவோ துறைமுகத்தை நோக்கி பயணித்தது.
பின்னர், மார்ச் மாத நடுப்பகுதியில் தென்கிழக்கு ஆசியக் கடல் பகுதியில் தனது திசையை மாற்றி இந்தியாவை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் சலுகையைத் தொடர்ந்து, இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் 30 மில்லியன் பீப்பாய்கள் ரஷ்ய எண்ணெயை வாங்கியுள்ளன. அண்மையில், இந்தியா தனது கொள்முதல்களைக் குறைத்ததால், ரஷ்யாவிடம் இருந்து சீனாதான் அதிக அளவில் வாங்கி வந்தது.
கச்சா எண்ணெய் கொள்முதல்
தற்போது, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் மீண்டும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து இருப்பதால், சர்வதேச எண்ணெய் விலைகள் உயரும் வாய்ப்புள்ளது. இதற்கிடையில், ‘ஸூஸூ என்’ (Suezmax Zouzou N) என்ற கப்பல், மார்ச் 25 அன்று இந்தியாவின் சிக்கா துறைமுகத்தை அடையவுள்ளது.
கசாக் CPC பிளெண்ட் கச்சா எண்ணெயுடன் ரஷ்யாவின் நோவோரோஸிய்ஸ்க் பகுதியிலிருந்து புறப்பட்ட இக்கப்பல், ஆரம்பத்தில் ரிஷாவோவை நோக்கிச் சென்று, மார்ச் மாத தொடக்கத்தில் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/russia-caspian-oil-shipments-shift-route-toward-india-and-asia-011-782375.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
