
Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: சிஎஸ்கே அணியின் பவுலிங்கில் பெரிய சிக்கல் இருப்பதாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். 2023 ஐபிஎல் தொடரில் தற்போதைய பவுலிங் லைன் அப்பை விடவும் மோசமாக இருந்ததாக சொல்லும் ரசிகர்கள், இந்த பவுலிங் லைன் அப்பை வைத்து எளிதாக கோப்பையை வெல்ல முடியும் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
2026ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடங்குவதற்கு இன்னும் 9 நாட்களே இருக்கிறது. சிஎஸ்கே அணி தொடர்ந்து 2 சீசன்களாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. இதனால் இம்முறை மரண மாஸ் கம்பேக் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் தீவிரமாக உள்ளனர். அதற்கேற்ப இளம் வீரர்களை கொண்ட அணியை சிஎஸ்கே பயிற்சியாளர் ஃபிளமிங் உருவாக்கி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் அனுபவம் இருக்கும் சஞ்சு சாம்சன், சிவம் துபே ஆகியோரும் அணியில் இருக்கின்றனர். சிஎஸ்கே அணியில் என்னதான் பேட்டிங் வலிமையாக இருந்தாலும், பவுலிங் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. நூர் அஹ்மத், கலீல் அஹ்மத், அன்சுல் கம்போஜ், பிரசாந்த் வீர், மேட் ஹென்றி, நேதன் எல்லீஸ், அகீல் ஹொசைன், ராகுல் சஹர், குர்ஜப்னீத் சிங், ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோர் இருக்கின்றனர்.
இதில் கலீல் அஹ்மத், பிரசாந்த் வீர், நேதன் எல்லீஸ், நூர் அஹ்மத் ஆகியோர் விளையாடப் போவது உறுதி. இம்பேக்ட் பிளேயராக அன்சுல் கம்போஜ், மேட் ஹென்றி ஆகியோர் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் சிவம் துபேவும் ஓரிரு ஓவர்களை வீச முடியும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் சிஎஸ்கே பவுலர்கள் கொஞ்சம் லைன் மற்றும் லெந்தில் கன்சிஸ்டன்ட்டாக இருந்தாலே போதுமானது.
இருப்பினும் மற்ற அணிகளை ஒப்பிடும் போது சிஎஸ்கே அணியின் பவுலிங் பயப்படும் அளவிற்கு இல்லை என்று விமர்சிக்கப்படுகிறது. இதற்கு சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த பவுலிங் லைன் அப்பை விடவும் 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை வென்ற போது இருந்த சிஎஸ்கே பவுலிங்கை பாருங்கள் என்று பதில் அளித்து வருகின்றனர்.
அப்போது காயத்தில் தொடர்ந்து சிக்கும் தீபக் சஹர், ஒய்டுகளை வீசும் பதிரானா, துஷார் தேஷ்பாண்டே மற்றும் தீக்சனா ஆகியோரே பவுலர்களாக இருந்தனர். அவர்களை வைத்தே சிஎஸ்கே அணி அபார வெற்றியை பெற்றது. இதனால் அந்த பவுலிங் லைன் அப்பை ஒப்பிடும் போது, இது தரமான பவுலிங் அட்டாக் என்று நம்பிக்கை கொடுத்து வருகின்றனர்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/csk-csk-bowling-line-up-is-much-better-comparing-with-ipl-2023-csk-bowling-line-up-who-becomes-the-782739.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
