அணு அட்டாக் நடக்கும்.. பல லட்சம் கோடி பெட்டிங்.. அணு பேரழிவு வரலாம்.. உலக சுகாதார மையம் வார்னிங் | WHO officials prepare for a “nuclear catastrophe” amid the Iran – USA – Israel war: Polymarket bets

International

oi-Shyamsundar I

டெஹ்ரான்: உலகமே ஒரு நூலிழையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா – ஈரான் இடையேயான மோதல் முற்றி, ஈரான் அணுசக்தி மையங்களுக்கு அருகே வெடிச்சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாக வெளியாகும் செய்திகள், “அணு பேரழிவு” (Nuclear Catastrophe) குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. உலக சுகாதார நிறுவனம் (WHO) கதிர்வீச்சு பாதிப்புகளை எதிர்கொள்ள இப்போதே தயாராகி வரும் நிலையில், இன்னொரு பக்கம் இந்த மரண பயத்தை வைத்து கோடிகளில் கல்லா கட்டிக் கொண்டிருக்கிறது ஒரு கும்பல்.

USA Iran

என்ன நடக்கிறது போர்க்களத்தில்?

கடந்த பிப்ரவரி இறுதியில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல், தற்போது ஒரு பிராந்திய போராக உருவெடுத்திருக்கிறது. உள்கட்டமைப்புகள் சிதைந்து, கதிர்வீச்சு பரவும் அபாயம் இருப்பதாக WHO எச்சரித்துள்ளது. ஆனால், இந்த பதற்றமான சூழலை ‘பாலிமார்க்கெட்’ (Polymarket) போன்ற பிரிடிக்ஷன் மார்க்கெட் (Prediction Market) தளங்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.

மரணத்தை வைத்து பந்தயம்!

“2026-க்குள் அணு ஆயுதத் தாக்குதல் நடக்குமா?” – இதுதான் அந்தத் தளத்தில் வைக்கப்பட்ட பந்தயம். கேட்கவே அதிரவைக்கும் இந்த விவகாரம், தற்போது உலகளவில் அறநெறி சார்ந்த விவாதங்களை எழுப்பியுள்ளது.

பிரிடிக்ஷன் மார்க்கெட் என்பது ஒரு வினோதமான உலகம். இங்கே எதை வைத்து வேண்டுமானாலும் பந்தயம் கட்டலாம்.

ஒரு குறிப்பிட்ட போனின் விலை எவ்வளவு உயரும்?

எலான் மஸ்க் ஒரு மாதத்தில் எத்தனை முறை ‘X’ தளத்தில் பதிவிடுவார்?

ஆஸ்கர் விருது யாருக்கு கிடைக்கும்?

ஏன், 2027-க்குள் இயேசு கிறிஸ்து மீண்டும் பூமிக்கு வருவாரா என்பது கூட இங்கே ஒரு பெட்டிங் தான்!

கோடிகள் புரளும் சந்தை

அமெரிக்காவின் ‘கல்ஷி’ (Kalshi) மற்றும் ‘பாலிமார்க்கெட்’ ஆகியவை முறையே 11 பில்லியன் மற்றும் 9 பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனங்களாக வளர்ந்து நிற்கின்றன. 2024 அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டைம்ஸ் ஸ்கொயர் விளம்பரப் பலகைகளில் நேரலையாக இந்த பெட்டிங் நிலவரங்கள் காட்டப்பட்ட போதே இதன் வீச்சு உணரப்பட்டது. சமீபத்தில் வெனிசுலா அதிபர் மதுரோ பதவியிறக்கப்படுவார் எனப் பந்தயம் கட்டிய நபர் ஒருவர், அது நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே 4 லட்சம் டாலர்களை (சுமார் 3.3 கோடி ரூபாய்) வென்றார்.

இது வெறும் அதிர்ஷ்டமா? அல்லது ‘இன்சைடர் டிரேடிங்’கா?

இங்கேதான் சிக்கல் ஆரம்பிக்கிறது. அரசு ரகசியங்கள் தெரிந்த அதிகாரிகளே தங்களுக்குத் தெரிந்த தகவலை வைத்து இப்படி பந்தயம் கட்டி லாபம் ஈட்டுகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கல்ஷி (Kalshi): இதில் விதிமுறைகள் கடுமையாக உள்ளன. இன்சைடர் டிரேடிங் தடை செய்யப்பட்டுள்ளதுடன், பயனர்களைக் கண்காணிக்கவும் முடியும்.

பாலிமார்க்கெட் (Polymarket): இது அமெரிக்காவில் அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்படவில்லை என்றாலும், VPN மூலம் உலகம் முழுவதிலிருந்தும் மக்கள் இதில் பந்தயம் கட்டுகிறார்கள். இங்கே பயனர்களைக் கண்காணிப்பதோ, தணிக்கை செய்வதோ கடினம்.

உலக சுகாதார மையம் வார்னிங்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அது ஒரு “அணு பேரழிவாக” (Nuclear Catastrophe) மாறக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் (WHO) மிகுந்த எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்படுவதால் ஏற்படக்கூடிய கதிர்வீச்சு பாதிப்புகள் மற்றும் அதன் தொடர்ச்சியாக நிகழ வாய்ப்புள்ள சமூகக் கட்டமைப்பு சீர்குலைவுகளை எதிர்கொள்ள WHO அதிகாரிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றனர். குறிப்பாக, ஹனான் பல்கி (Hanan Balkhy) உள்ளிட்ட உயர் அதிகாரிகள், இத்தகைய மோதல் ஒரு பிராந்திய அளவிலான பாதிப்பைத் தாண்டி உலகளாவிய ரீதியில் பல தசாப்தங்களுக்கு நீடிக்கக்கூடிய சுகாதாரச் சீர்கேடுகளை உருவாக்கும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.

கதிர்வீச்சு மேலாண்மை, அவசரகால மருத்துவ உதவிகள் மற்றும் பொதுமக்களுக்கான பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் புதுப்பித்து வரும் அதே வேளையில், எவ்வளவுதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாலும் ஒரு அணு ஆயுதத் தாக்குதல் அல்லது அணு உலைகள் மீதான தாக்குதல் ஏற்படுத்தும் பேரழிவைத் தடுப்பது இயலாத ஒன்று என்பதையும் அவர்கள் கவலையுடன் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/who-officials-prepare-for-a-nuclear-catastrophe-amid-the-iran-usa-israel-war-polymarket-bets-782537.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo