டிரம்புக்கு மூக்குடைப்பு. ஈரானை தாக்க தயாரான. அமெரிக்கா போர் விமானங்களை விரட்டியடித்த இலங்கை! | Sri Lanka refused landing request of US’s 2 fighter jets with anti ship missile

International

oi-Nantha Kumar R

கொழும்பு: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகின்றன. இந்த போருக்கு மத்தியில் ஆயுதங்களுடன் 2 போர் விமானங்களை இலங்கையில் தரையிறங்க அமெரிக்கா அனுமதி கோரிய நிலையில் அதனை அந்த நாட்டு அதிபர் அநுர குமார திஸாநாயக்க ஏற்காமல் புறக்கணித்தார். இதனால் இலங்கை மீது அமெரிக்காவு கடும் கோபமடைந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 28 ம் தேதி அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரானை தாக்கியது. இது போராக மாறி 3 வாரங்களை கடந்துவிட்டது. ஈரான் மீது ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. பதிலுக்கு ஈரானும் அமெரிக்காவின் போர் விமானங்களையும், இஸ்ரேல் நாட்டையும் தாக்கி வருகிறது.

us donald trump srilanka

அதுமட்டுமின்றி அண்டை நாடுகளான சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்பட பிற நாடுகளில் உள்ள அமெரிக்காவின் படை தளங்களை குறிவைத்து ஈரான் தாக்கி வருகிறது.

அமெரிக்க போர் விமானங்கள்

அமெரிக்கா தனது நட்பு நாடுகளின் விமானப்படை தளங்களை பயன்படுத்தி ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் தான் அரபு நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் ஏவுகணைகளுடன் வந்த 2 அமெரிக்க போர் விமானங்களை இலங்கையின் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கோரப்பட்டது. அதற்கு இலங்கை அனுமதி மறுத்துள்ளது.

ஏவுகணைகளுடன் வந்த விமானங்கள்

இதனை இலங்கை அதிபர் அநுர குமார திஸாநாயக்க உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர் இலங்கை நாடாளுமன்றத்தில், ”கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியில்(Djibouti) இருந்து 2 போர் விமானங்கள் ஆயுதங்களுடன் வந்தது. இந்த போர் விமானங்களை மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்க அமெரிக்கா விரும்பியது. விமானங்களில் 8 கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள்(8 Anti Ship Missiles) இருந்தன. ஆனால் நாம் அனுமதி கொடுக்கவில்லை.

அனுமதி வழங்காத இலங்கை

இந்த போர் விமானஙகள் முறையே மார்ச் 4, மார்ச் 8 ஆகிய தேதிகளில் அனுமதி கோரியது. இரண்டு கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டது. பல அழுத்தங்கள் இருந்தபோதிலும் போர் விஷயத்தில் நடுநிலைமையை பேண நாங்கள் விரும்புகிறோம். மத்திய கிழக்கில் நடக்கும் போர் நமக்கு சவால்களை ஏற்படுத்தினாலும் நடுநிலையாக இருக்க வேண்டிய அனைத்து விஷயங்களையும் செய்வோம்” என்றார்.

காரணம் என்ன?

மேலும் அவர் கூறிய தேதியான மார்ச் 4, மார்ச் 8 என்பது அமெரிக்கா, ஈரான் போர்க்கப்பல்களை குறிவைத்து உக்கிரமாக தாக்கிய காலமாகும். போர் தொடங்கிய முதல் 10 நாளில் 20க்கும் மேற்பட்ட ஈரானின் போர்க்கப்பல்களை அமெரிக்கா மூழ்கடித்துள்ளது. அதுமட்டுமின்றி ஈரான் போர், அரபு நாடுகளை ஈரான் தாக்குவது என்று மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் பதற்றத்தில் உள்ளது.

இந்த பதற்றம் நம்முடைய இந்திய பெருங்கடல் பகுதி வரை வந்துவிட்டது. ஈரானின் ‘ஐஆர்ஐஎஸ் டெனா’ என்ற போர்க்கப்பல் போர் பயிற்சியை முடித்துவிட்டு இந்திய பெருங்கடலில் இலங்கையின் அருகே இந்த மாத தொடக்கத்தில் சென்றது. அப்போது அந்த போர்க்கப்பல் மீது அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. இதில் 84 கடற்படையினர் உயிரிழந்தனர்; 32 பேர் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டனர்.

டிரம்பின் மூக்குடைப்பு

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, 219 கடற்படையினரை கொண்ட மற்றொரு ஈரானியக் கப்பலான IRINS Bushehr பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கை கிழக்கு துறைமுகமான திருகோணமலைக்குள் அனுமதித்து ஈரானியர்களை பத்திரமாக தங்க வைத்துள்ளனர். இதுபோன்ற தாக்குதல்களை மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டு போர் விமானங்களில் ஏவுகணைகளை கொண்டு வந்ததால் இலங்கை அனுமதி அளிக்கவில்லை. இதன்மூலம் டிரம்பின் மூக்கை, இலங்கை உடைத்துள்ளது.

மேலும் ஈரான் போரால் இலங்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. அரபு நாடுகளிடம் இருந்து கிடைக்க வேண்டிய கச்சா எண்ணெய் முழுமையாக இலங்கைக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் கூட போரில் யாருக்கும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்க வேண்டும். நடுநிலைமை என்ற நிலைப்பாட்டில் இலங்கை உறுதியாக உள்ளது. இதனால் ஈரானின் போர்க்கப்பல்களை ஏவுகணை வீசி தாக்க தயாராக வந்த அமெரிக்காவின் 2 போர் விமானங்களுக்கு அவர் அனுமதி மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/sri-lanka-refused-landing-request-of-uss-2-fighter-jets-with-anti-ship-missile-783047.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo