சிஎஸ்கேவை பாலோ செய்யும் காவ்யா மாறன்.. இஷான் கிஷனுக்கு அடித்த ஜாக்பாட்.. இதை கவனிச்சீங்களா! | Kavya Maran: Kavya Maran is following the footsteps of CSK for the Players Branding video with a mix of Cinema Songs and Scenes ahead of IPL 2026

Cricket

oi-Yogeshwaran Moorthi

மும்பை: சிஎஸ்கே அணியை போலவே ஐதராபாத் அணியின் வீரர்களையும் பிராண்டிங் செய்ய அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் முடிவு எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதற்கேற்ப நட்சத்திர வீரராக இஷான் கிஷன் உருவாகிவிட்ட சூழலில், நானி ஸ்டைலில் பக்கா மாஸ் வீடியோவை இஷான் கிஷனை வைத்து ஐதராபாத் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் தொடருக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், அத்தனை அணிகளும் விளம்பரப் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். வழக்கமாக பிராண்டிங்கில் உச்சத்தில் இருக்கும் அணி என்றால் அது சிஎஸ்கே தான். ஏனென்றால் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு ஸ்டைலில் பிராண்ட் செய்வார்கள். உதாரணமாக தோனியை தல என்றும், ஜடேஜாவை தளபதி என்றும் பிராண்ட் செய்தனர்.

Kavya Maran

அதேபோல் சுரேஷ் ரெய்னாவை சின்னதல என்றும், சிவம் துபேவை ஆறுச்சாமி என்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றனர். அதேபோல் தோனியின் அறிமுக வீடியோவுக்கு லியோ காட்சிகளை மீள் உருவாக்கம் செய்தது. சஞ்சு சாம்சனுக்கு கூலி காட்சியை மீள் உருவாக்கம் செய்தது. அதுமட்டுமல்லாமல் தோனியின் என்ட்ரிக்கு ரஜினி, விஜய், விஜயகாந்த் பாடல்களை ஒலிக்கவிட்டு அலப்பறை செய்வார்கள்.

இன்னும் சொல்லப்போனால் சேப்பாக்கம் மைதானத்தில் இருக்கும் “வைப்” வேறு எந்த மைதானத்திலும் இருக்காது. மும்பை, கொல்கத்தா, பெங்களூர் மைதானங்களில் கரகோஷம் எழும் என்றாலும், நடிகர்களோடு ஒப்பிட்டு வீரர்களை பிராண்ட் செய்வதில் சிஎஸ்கே கிங்காக இருந்து வருகிறது. அந்த வழியை ஐதராபாத் அணி பின்பற்ற தொடங்கி இருக்கிறது.

பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐதராபாத் அணியின் கேப்டனாக இஷான் கிஷன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இஷான் கிஷனை கேப்டனாக அறிமுகம் செய்யும் வீடியோவை ஐதராபாத் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் நானியின் சாட்டர்டே திரைப்படத்தின் காட்சியை மீள் உருவாக்கம் செய்து இஷான் கிஷன் அறிமுகமாகி இருக்கிறார்.

அப்போது ஒலிக்கப்படும் சிவ தாண்டவம் பாடலும் பக்கா மாஸாக அமைந்திருக்கிறது. ஏற்கனவே காவ்யா மாறன் சிஎஸ்கே அணி சன் பிக்சர்ஸ் படத்தின் பாடல்களை பயன்படுத்த கூடாது என்று வழக்கு தொடர்ந்தார். இதனால் சிஎஸ்கே அணியின் வீடியோக்கள் அவ்வளவு மாஸாக இல்லை. சிஎஸ்கே அணியின் வீடியோக்கள் ரசிகர்களிடையே பெரிதாக எடுபடவில்லை.

தற்போது சிஎஸ்கே அணியின் பாணியை பின்பற்றி ஐதராபாத் அணியை பிராண்ட் செய்ய தொடங்கி இருக்கிறார் காவ்யா மாறன். தெலுங்கு மாநிலங்களை குறி வைத்து தெலுங்கு சினிமா நாயகர்களின் பக்கா மாஸ் காட்சிகளையும், பாடல்களையும் வரும் காலங்களில் ஐதராபாத் அணி பின்பற்றும் என்று பார்க்கப்படுகிறது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/kavya-maran-kavya-maran-is-following-the-footsteps-of-csk-for-the-players-branding-video-with-a-mix-783195.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo