ஈரான் அணுசக்தி மையத்தை குறி வைத்த அமெரிக்கா! ருத்ர தாண்டவம் ஆடிய டிரம்ப்! | Natanz Nuclear Facility Hit In Airstrike, No Radiation Leak: Iran

International

-Halley Karthik

தெஹ்ரான்: ஈரானின் நடான்ஸ் அணுசக்தி செறிவூட்டும் நிலையம் மீது அமெரிக்கா இன்று வான்வழித் தாக்குதலை நடத்தியிருக்கிறது. நல்வாய்ப்பாக இந்தத் தாக்குதலில் எந்தவிதமான கதிர்வீச்சு கசிவும் ஏற்படவில்லை.

கதிர்வீச்சு கசிவு இல்லை என்பதை, ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான மிசான் தெரிவித்திருக்கிறது. ஈரான்-இஸ்ரேல் போர் 4வது வாரமாக நடந்து வரும் நிலையில், மோதல்கள் தீவிரமடைந்து வருகின்றன.

Natanz Nuclear

தெஹ்ரானிலிருந்து சுமார் 220 கிலோமீட்டர் தென்கிழக்கே அமைந்துள்ள நடான்ஸ், ஈரானின் முதன்மை யுரேனியம் செறிவூட்டும் தளமாகும். இத்றகு முன்னரும், இந்த மையம் பலமுறை குறி வைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இந்தப் புது தாக்குதல், அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டுக்கு மத்தியில் நடந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை அன்று, இப்பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை குறைத்து வருவதாக அறிவித்தார். அதேசமயம், அமெரிக்கா தனது படைகளை அதிகரித்து, மூன்று கூடுதல் கடற்படை தாக்குதல் கப்பல்களுடன் சுமார் 2,500 கடற்படையினரையும் இப்பகுதிக்கு அனுப்பியுள்ளது.

ஒருபுறம் போரை முடித்துக்கொள்ளலாம் என்று கூறுவதும், மறுபுறம் ஈரானை நோக்கி கூடுதல் படைகளை அனுப்புவதும், அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது. இந்த நிலைப்பாடு, பரவலான போர் விரிவாக்கம் குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் நோக்கி ஈரான் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் அனுப்பியிருந்தது. இவற்றில் சிலவற்றை சவுதி அரேபியா இடைமறித்ததாகக் கூறியது.

இந்த போர் காரணமாக, உலகளாவிய சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து, அமெரிக்கப் பங்குகளில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தி வருவதால், எரிசக்தி சந்தைகளில் அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில், கப்பல்களில் ஏற்றப்பட்ட ஈரானிய எண்ணெய் மீதான சில பொருளாதாரத் தடைகளை அமெரிக்க நிர்வாகம் நீக்கியுள்ளது.

அதாவது ஏற்கெனவே பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்காக கப்பலில் லோட் செய்யப்பட்டிருக்கிறது. இந்த எண்ணெய்யை மட்டும் உலக நாடுகளுக்கு விற்பனை செய்துக்கொள்ளவும், இதை வாங்க உலக நாடுகளுக்கு எந்த தடையும் இல்லை என்று அமெரிக்கா அறிவித்திருக்கிறது. இப்படி சொல்லிக்கொண்டே ஈரான் மீதான தாக்குதலையும் அமெரிக்கா அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/natanz-nuclear-facility-hit-in-airstrike-no-radiation-leak-iran-011-783263.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo