
International
oi-Halley Karthik
தெஹ்ரான்: அமெரிக்காவின் போர் ஒரு பக்கம் ஈரானுக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. இது தவிர, தீவிரமான பொருளாதார பிரச்சனையில் ஈரான் இப்போது சிக்கியிருக்கிறது. இதனை சமாளிக்க 1 கோடி கரன்சி நோட்டை ஈரான் அச்சடித்துள்ளது. ஆனால், அதன் மதிப்பு மிக மிக குறைவு.
அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்துக்கொண்டு ஈரானுக்கு தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், இதைவிட பெரிய தலைவலியில் ஈரான் மாட்டியிருக்கிறது.

என்ன பிரச்சனை?
அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி காரணமாக, ஈரான் பல ஆண்டுகளாக கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வந்திருந்தது. அந்நாட்டுக்கு இருக்கும் ஒரே வருவாய் ஆப்ஷன், சீனாவிடம் எண்ணெய் விற்று அதன் மூலம் வருமானம் ஈட்டுவதுதான். இந்த வாய்ப்பையும் அமெரிக்கா முடக்கிவிட்டது. எனவே தற்போது ஈரான் முன்பை விட பெரிய நெருக்கடியில் விழுந்து கிடக்கிறது. இதனை சமாளிக்க புதிய முயற்சியை ஈரான் மேற்கொண்டிருக்கிறது.
ஈரான் எடுத்த முயற்சி
ஈரான் தற்போது 1 கோடி மதிப்பிலான ரியால் நோட்டை அச்சடித்துள்ளது. ரியால் என்பது ஈரான் நாட்டு கரன்சி. சரி அதிக மதிப்பிலான கரன்சியை அச்சடித்தால் பிரச்சனை சரியாகிவிடும் என்று அந்நாடு நினைத்திருந்தது. ஆனால், அது உண்மை கிடையாது. என்னதான் அந்த ஊர் மதிப்பில் புதிய நோட்டு 1 கோடி மதிப்பு இருந்தாலும், இந்திய மதிப்பில் அதன் மதிப்பு வெறும் ரூ.600 தான்.
கரன்சி வீழ்ச்சி
ஈரானுக்கும் இஸ்ரேல்-அமெரிக்காவுக்கும் இடையே நடந்து வரும் போரினால், ஈரானிய நாணயத்தின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. தற்போது ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரானிய ரியால் மதிப்பு சுமார் 1.6 மில்லியன் ஆக உள்ளது.
பெரிய பிரச்சனை
ஈரானில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடந்த ஓராண்டில் இருமடங்காக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் அன்றாடத் தேவைகளுக்கே அதிகப்படியான காகிதப் பணத்தைக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் முடங்கும் என்ற அச்சத்தில் மக்கள் வங்கிகளிலும் ஏடிஎம்களிலும் வரிசையில் நிற்கின்றனர். இந்தத் தட்டுப்பாட்டைப் போக்கவே இவ்வளவு பெரிய மதிப்புள்ள நோட்டை அரசு வெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்த நோட்டை வெளியிட்டாலும் பிரச்சனை தீராது என்பதுதான் யதார்த்தம்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-economic-crisis-iran-issues-record-breaking-10-million-rial-banknote-amid-war-783285.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
