மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள் | BJP advantage for West Bengal election: What are the 7 points that has become issue for Mamata

India

oi-Vigneshkumar

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இப்போது மம்தா vs பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. மம்தாவின் இமேஜ் அங்கு மிகப் பெரியதாக இருந்தாலும் கூட இந்த முறை அதை காலி செய்ய பாஜகவுக்கு வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. அங்கு பாஜகவுக்குச் சாதகமாக மொத்தம் 7 பாயிண்டுகள் உள்ளன. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. அங்கு மம்தாவை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்பதில் பாஜக தெளிவாக இருக்கிறது. இதற்கிடையே அங்கு பாஜகவுக்கு ஆதரவாக இருக்கும் 7 முக்கியமான பாயிண்டுகள் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

BJP advantage for West Bengal election What are the 7 points that has become issue for Mamata

ஏழு பிரச்சனைகள்

1. மம்தா இப்போது வரையிலும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளைத் தான் எதிர்த்து வருகிறார். பாஜகவை எதிர்த்து நேரடியாக அரசியல் செய்வதை விட்டுவிட்டு, தேர்தல் ஆணையத்திற்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகிறார். முதலில் எஸ்ஐஆர் இப்போது அதிகாரிகள் பணியிட மாற்றம். பாஜகவை விமர்சிப்பதை விட்டுவிட்டு, தேர்தல் ஆணையத்தை விமர்சித்து வருகிறார். இது கிராமப்புற வாக்காளர்களிடையே ஓரளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என்றாலும் உறுதியாகச் சொல்ல முடியாது. மேலும், உச்ச நீதிமன்றமும் உச்ச நீதிமன்றம் தலையிட மறுத்துவிட்டதால் ஆரம்பமே பிரச்சனையாகிவிட்டது.

2. அடுத்து முந்தைய தேர்தலைப் போல இல்லாமல்.. பாஜக இந்த முறை தேவையற்ற தவறுகளைத் தவிர்த்துள்ளது. திரிணாமுல் ஆட்சி மீதே நேரடி குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. மம்தாவின் வயது அல்லது அவரது உடல்நிலை என பெர்சனலாக எதுவும் போகவில்லை. திரிணாமுல் ஆட்சி மிரட்டி பணம் பறிக்கும் அரசியலை நடத்துகிறது, ஆட்சியில் ஊழல் என நிர்வாகத்தில் இருக்கும் பிரச்சினைகளையே முன்வைக்கிறது. இதன் மூலம் மம்தாவால் அனுதாப அலையைத் தேட முடியாமல் போகிறது.

நேரடி போட்டி

3. அடுத்து முதல்வர் மம்தாவின் பவானிபூர் தொகுதியில் சுவேந்து அதிகாரியை களமிறக்குவது.. 2021ல் இப்படி தான் நந்திகிராம் தொகுதியில் மம்தாவுக்கு எதிராக சுவேந்து அதிகாரி போட்டியிட்டு வென்றார். இது மம்தாவின் இமேஜை கடுமையாகப் பாதித்தது. மீண்டும் இதுபோல நடந்துவிடக்கூடாது என்பதில் மம்தா தெளிவாக இருக்கிறார். இந்தச் சூழலில் மீண்டும் சுவேந்து அதிகாரி அங்கு இறங்கியுள்ளதால் மம்தா பவானிபூரில் கூடுதலாகப் பிரச்சாரம் செய்ய வேண்டி இருக்கிறது. இதனால் மாநிலம் தழுவிய பிரச்சாரங்களுக்கான நேரம் குறையலாம்.. இதன் மூலம், பாஜக அவரை உடல் மற்றும் மனரீதியாக முடக்குகிறது.

இந்த யுக்தியைத் தேர்தலில் அறிமுகப்படுத்தியதே ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் தான். கடந்த 2015ல் அப்போதைய முதல்வர் ஷீலா தீட்சித்திற்கு எதிராக புது டெல்லியில் களமிறங்கிய கெஜ்ரிவால், அவரை தோற்கடித்தார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, பாஜகவும் அதே உத்தியை கெஜ்ரிவாலுக்கு எதிராகப் பயன்படுத்தியது தனிக்கதை. இப்போது மேற்கு வங்கத்திலும் இதையே பாஜக கையில் எடுத்திருக்கிறது.

பாஜகவின் மெசேஜ்

4. திரிணாமுலின் கோட்டையான கொல்கத்தா மையப்பகுதியில் சுவேந்து அதிகாரி போட்டியிடுவது, “பத்ரலோக்” சமூகத்தினர் உட்பட வாக்காளர்களுக்கு ஒரு வலுவான செய்தியை அனுப்புகிறது.. திரிணாமுலுக்கு ஒரு நம்பகமான மாற்று உள்ளது அது பாஜக தான்.. எனவே தைரியமாக எங்களுக்கு வாக்களிக்கலாம் என்கிறது. இங்கு திரிணாமுலின் கோட்டையை பாஜகவால் உடைக்க முடிந்தால், அந்த உத்வேகத்தை வட மற்றும் தென் மாவட்டங்களுக்கும் பாஜக கொண்டு செல்லும்.

5. கருத்துக்கணிப்புகளை முழுமையாக நம்ப முடியாது என்றாலும் கூட தற்போது வரை வந்துள்ள செய்திகள் பாஜகவுக்கு நல்ல செய்திகளாகவே உள்ளன. IANS-Matrize கருத்துக் கணிப்பின்படி, திரிணாமுல் காங்கிரஸ் 43-45% வாக்குகளையும் பாஜக 41-43% வாக்குகளையும் பெறும் எனத் தெரிவிக்கின்றன. அதாவது இரு தரப்பிற்கும் இடையே மிக கடுமையான போட்டியே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 43% வாக்குகள் என்பது பாஜகவிற்கு 120க்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்றுத்தரும் என்பதைக் காட்டுகிறது. இந்த கடும் போட்டியே கூட திரிணாமுலின் தோல்வி எனச் சொல்லலாம்.

தேர்தல் ஆணையம்

6. அடுத்துத் தேர்தல் கட்டங்கள். கடந்த முறை மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. ஆனால், தேர்தலில் மிகப் பெரிய வன்முறை நடந்தது. மீண்டும் அதுபோல நடந்துவிடக்கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் கவனமாக இருக்கிறது. இதன் காரணமாகவே இரண்டு கட்டங்களில் வாக்குப்பதிவை முடிக்கத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதை சுமுகமாக நடத்தப் பல ஆயிரம் பாதுகாப்புப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

7. அதேபோல மம்தாவின் அதீத செயல்பாடுகள் இந்த முறை தேர்தல் ஆணையத்திடமோ அல்லது உச்ச நீதிமன்றத்திடமோ எடுபடவில்லை என்பதை வாக்காளர்கள் உணர ஆரம்பித்துவிட்டனர்.. வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான அவரது கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. மேலும், பெயர் விடுபட்ட வாக்காளர்களின் மேல்முறையீடுகளை நீதித்துறை அதிகாரிகளே தீர்ப்பார்கள், இந்த விவகாரத்திலும் அவரது அரசியல் எடுபடாமல் போய்விட்டது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/india/bjp-advantage-for-west-bengal-election-what-are-the-7-points-that-has-become-issue-for-mamata-783191.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo