சிதறும் மம்தாவின் வாக்குகள்.. குறிவைத்து அடிக்கும் பாஜக.. இனி ஆட்சி மாற்றத்தை தடுக்கவே முடியாதாம்! | BJP plan for West Bengal election: Mamata is Losing Narrative and her vote base begin to crack

India

oi-Vigneshkumar

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்குகிறது. கடந்த 3 தேர்தல்களாக அங்குத் தொடர்ச்சியாக வென்று மம்தா ஆட்சியைப் பிடித்து வரும் நிலையில், இந்த முறை அது நடக்காது என்று பாஜக உறுதியாக சொல்கிறது. மம்தாவின் வாக்கு வங்கியில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாகவும் இதனால் மம்தாவின் வீழ்ச்சியைத் தடுக்கவே முடியாது என்றும் பாஜக நம்பிக்கை தெரிவித்துள்ளது!

தமிழ்நாட்டைப் போலவே மேற்கு வங்கத்திலும் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. அங்கு திரிணாமுல் மற்றும் பாஜக இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. இதைத் தாண்டி காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இருந்தாலும் கூட நேரடி போட்டி என்னவோ திரிணாமுல் மற்றும் பாஜக இடையே தான் இருக்கிறது.

BJP plan for West Bengal election Mamata is Losing Narrative and her vote base begin to crack

கண்ட்ரோலை இழக்கும் மம்தா

இதற்கிடையே மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கட்டுப்பாட்டை இழக்க ஆரம்பித்துவிட்டதாக பாஜக உறுதியாக நம்புகிறது. “தவறான ஆட்சி” மீதான மக்களின் கோபம், இந்துக்கள் வாக்குகள் பாஜகவுக்கு வருவது ஆகியவற்றைக் காரணமாகச் சொல்கிறது. மேலும், எப்போதுமே அதிரடி அரசியலையே செய்யும் மம்தா, இந்த முறை தற்காப்பு பிரச்சாரத்தைக் கையில் எடுத்துள்ளதே திரிணாமுல் வீழ்ச்சிக்கு முக்கிய ஆதாரம் என்றும் பாஜகவினர் சுட்டிக்காட்டுகிறார்கள்.

கடந்த மார்ச் 14ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கொல்கத்தாவில் நடந்த பேரணி ஒன்றில் கலந்து கொண்டார். அதன் பிறகு பாஜக இறங்கி அடிக்க ஆரம்பித்துவிட்டது. தொடர்ந்து பிரம்மாண்ட பொதுக் கூட்டங்கள், வாக்குறுதிகள் என மேற்கு வங்க தேர்தல் தன்னை சுற்றி இருக்கும்படி பாஜக பார்த்துக் கொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் நலத்திட்டங்களை அள்ளி வீசும் பாஜக, மற்றொரு பக்கம் திரிணாமுலின் வன்முறை, அடையாள அரசியல் போன்ற கூர்மையான பிரச்சனைகளையும் எழுப்புகிறது. இத்தோடு சேர்த்து இந்துக்களின் வாக்கும் தங்கள் பக்கம் வரும் என பாஜக நம்புகிறது.

பாஜகவின் நம்பிக்கை

கடந்த 2024 லோக்சபா தேர்தலில் இடங்கள் குறைந்தாலும், மேற்கு வங்கத்தில் அதன் வாக்கு சதவீதம் சீராக உயர்ந்து வருகிறது. அதன்படி பார்த்தால் இந்த முறை திரிணாமுலை வீட்டு அனுப்ப முடியும் என்ற நம்பிக்கை பாஜகவுக்கு அதிகமாகவே இருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் தீவிர கண்காணிப்பு, புதிய நிர்வாக நியமனங்கள், மத்திய படைகளின் நிலைநிறுத்தும் ஆகியவை வாக்குச்சாவடி முறைகேடுகளைக் கட்டுப்படுத்தும் என பாஜக நம்புகிறது..

மாநில அளவில் பெரிய பெரிய பிரச்சார கூட்டங்கள் மட்டுமின்றி, உள்ளூர் அளவிலும் பாஜக தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறது. திரிணாமுலை ஊழல் மற்றும் வன்முறை நிறைந்த ஆட்சியாக முன்னிறுத்தும் பாஜக தலைவர்கள், தங்கள் ஆட்சியில் நல்லாட்சி கிடைக்கும் எனச் சொல்கிறார்கள். 2011ஐ போலவே இதுவும் மேற்கு வங்கத்திற்குத் திருப்புமுனை தேர்தலாக இருக்கும் என்கிறார்கள்.

திருப்புமுனை தேர்தல்

கடந்த 2011ல் மேற்கு வங்கத்தில் சுமார் 33 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த இடதுசாரிகள் தோல்வியைச் சந்தித்தது. திரிணாமுல் முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. 2011 தேர்தல் இடதுசாரிகளை எப்படி ஆட்சியில் இருந்து அகற்றியதோ.. அதேபோல 2026 தேர்தல் மம்தாவை ஆட்சியில் இருந்து அகற்றும் என்கிறார்கள் பாஜக தலைவர்கள்.

சிதறும் மம்தா வாக்குகள்

மம்தாவின் ஆதரவு வட்டாரத்திலும் பிரச்சனை விரிசல் ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது. மம்தா பானர்ஜியின் நீண்டகால ஆதரவாளர்களாகக் கருதப்படும் முஸ்லிம் வாக்காளர்களிடையே ஒரு நுட்பமான மாற்றத்தை பாஜக கவனிக்கிறது. சிஏஏ, வாக்காளர் பட்டியல் திருத்தம், வக்பு வாரிய மசோதா, முத்தலாக் ஒழிப்பு போன்ற விவகாரங்களில் மம்தாவால் எதையும் செய்ய முடியவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் தீர்வாக எதையும் மம்தாவால் பெற்றுத் தர முடியவில்லை. இதனால் முஸ்லீம் வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடைசிக் கட்ட முயற்சியாகக் கோவில் பூசாரிகள் மற்றும் மதரஸா இமாம்களுக்கும் ஊதிய உயர்வு, பென்சான் சார்ந்த அறிவிப்பானை மம்தா வெளியிட்டார். இதன் மூலம் ஓரளவுக்கு வாக்குகளை மீண்டும் தன்வசப்படுத்த முடியும் என நம்புகிறார். ஆனால், பாஜக அதை காலி செய்யத் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முடிந்த வரை மம்தாவை பவானிபூர் தொகுதியில் முடக்கிவிடவே அங்கு சுவேந்து அதிகாரியை வேட்பாளராக பாஜக களமிறக்கியுள்ளது. இதை எல்லாம் வைத்தே அங்கு வெல்ல முடியும் என்று பாஜக உறுதியாக நம்புகிறது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/india/bjp-plan-for-west-bengal-election-mamata-is-losing-narrative-and-her-vote-base-begin-to-crack-783507.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo