
Cricket
oi-Yogeshwaran Moorthi
சென்னை: சிஎஸ்கே ஜாம்பவான் தோனி சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்கினால், 25 கிமீ தள்ளி இருக்கும் ஈசிஆர் அதிரும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் பேசி இருக்கிறார். சிஎஸ்கே ஒரு எமோஷன் என்று கூறியுள்ள சிவகார்த்திகேயன், தோனி மீது வைத்துள்ள நம்பிக்கையை ருதுராஜ் கெய்க்வாட் மீது ரசிகர்கள் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே அணியின் ரீயூனியன் நிகழ்ச்சி சேப்பாக்கம் மைதானத்தில் கொண்டாட்டமாக நடந்து முடிந்திருக்கிறது. சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரர்களுடன் தற்போதைய வீரர்களின் பயிற்சி, ஏஆர் ரஹ்மானின் இசை கச்சேரி நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது. இதன்பின் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்றார்.

அப்போது சிவகார்த்திகேயன் பேசுகையில், தோனி சார்.. உங்களை தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன்.. மைதானத்தில் இருந்து பார்த்துள்ளேன்.. முதல்முறையாக நேரில் சந்திக்கிறேன்.. கொஞ்சம் பதற்றமாக உள்ளது சார்.. கோடிக்கணக்கான ரசிகர்களை போல் உங்களின் கிரிக்கெட்டை நானும் ரசிக்கிறேன்.. உங்களின் தலைமைப் பண்புக்கு மிகப்பெரிய ரசிகன்.. இப்போது ஒரு குழந்தையை போல் இங்கு நிற்கிறேன்.
வெற்றி, தோல்வியை கடந்து சிஎஸ்கே அணியுடன் ரசிகர்கள் எப்போதும் இருக்கிறோம்.. ஐபிஎல் எண்டர்டெயின்மெண்ட் தான்.. ஆனால் சிஎஸ்கே எப்போதும் ஒரு எமோஷன்.. அந்த எமோஷனுக்கு ஒரு எடுத்துக்காட்டு தான் தோனி களமிறங்கும் போது வரும் கரகோஷம்.. தோனி சேப்பாக்கத்தில் களமிறங்கினால், ஈசிஆர் அதிரும்.. இதுதான் மாஸ்..
சிஎஸ்கே மீது வைத்துள்ள நம்பிக்கை தான் அது.. சென்னை அணி எப்போதும் வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு இருக்கும்.. அதற்கு இந்த காட்டின் ராஜாவாக இருக்கும் முஃபாசா.. தற்போது அந்த நம்பிக்கையை இப்போது சிம்பா மீதும் வைத்துள்ளோம்.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்க்கு 2 ஆதரவு இருக்கிறது.. இன்று தோனி.. மற்றொன்று ரசிகர்கள்..
நீங்கள் எங்களுக்கு 6வது கோப்பையை வென்று கொடுத்தாலே போதும்.. அதேபோல் சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சன் இணைந்திருக்கிறார்.. சென்னை அணியில் ஏராளமான திறமை மிகுந்த வீரர்கள் இருக்கிறார்கள். பிரெவிஸ்க்கு நான் யாரென்றே தெரியாது.. தோனியிடம் ஒரு விஷயம் மட்டும் கேட்க விரும்புகிறேன்.. ஒருமுறை தோனியிடம் இதுதான் உங்களின் கடைசி சீசனா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு தோனி, Definitely Not என்று பதில் அளித்தார். அந்த பதிலை தான் ஒவ்வொரு சீசனிலும் கேட்க விரும்புகிறோம்.. அதற்கு தோனி, அதற்கு ஃபிட்னஸ் இருக்க வேண்டும்.. அது மிகவும் கடினம்.. என்னுடைய ஃபிட்னஸ் நாளுக்கு நாள் இறங்கி கொண்டே செல்கிறது.. இருந்தாலும் முயற்சிக்கிறேன் என்று தெரிவித்தார். அதே;போல் அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் ஒன்றை சொல்லி கொள்கிறேன்.. ஓஜி இஸ் பேக் என்று கூறி சென்றார்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/sivakarthikeyan-if-ms-dhoni-walks-down-in-chepauk-we-hear-the-sound-in-ecr-says-actor-sivakarthike-783595.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
