‘குட்டி இந்தியா’வை தாக்கிய ஈரான்.. திடீர் கோபம் ஏன்? இஸ்ரேல் டிமோனோ அட்டாக்கின் பின்னணி | Iran – Israel War: Why Dimona city is called little India? Why Iran target with missile this city? details here

International

oi-Nantha Kumar R

ஜெருசலேம்: நம் நாட்டுக்கும் ஈரானுக்கும் நல்ல நட்பு உள்ளது. இந்நிலையில் தான் திடீரென்று ஈரான் ‘குட்டி இந்தியா’ மீது கொடூரமாக தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேலின் டிமோனோ நகரில் அதிகமான இந்தியர்கள் வசித்த வரும் நிலையில் அங்கு ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி உள்ளது. இந்நிலையில் தான் ஈரான் ஏன் இஸ்ரேலின் ‘குட்டி இந்தியா’வை தாக்கியது? பின்னணி என்ன? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் போர் புரிந்து வருகிறது. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில் தான் நேற்று கடும் கோபமடைந்த ஈரான் ‘குட்டி இந்தியா’ என அழைக்கப்படும் டிமோனா நகரின் மீது மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.

Dimona city

ஈரானுக்கும், நம் நாட்டுக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. அதேபோல் இஸ்ரேலுக்கும், நம் நாட்டுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் கூட பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு சென்று நெதன்யாகுவை சந்தித்து பேசினார். நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

‘குட்டி இந்தியா’ மீது அட்டாக்

இப்படியான சூழலில் தான் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் இடமான இஸ்ரேலின் டிமோனா நகரில் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஏனென்றால், டிமோனா நகருக்கும், நம் நாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நம் நாட்டில் இருந்து இடம்பெயர்ந்து சென்ற ஏராளமான இந்தியர்கள் டிமானோ நகரில் தான் வசித்து வருகின்றனர். அதாவது இஸ்ரேல் யூத நாடாக உள்ளது. நம் நாட்டில் இருக்கும் யூதர்கள் ஏராளமானவர்கள் இதற்கு முன்பு இருந்தே இஸ்ரேல் குடியுரிமை பெற்று இடம்பெயர்ந்து வருகின்றனர்.

நகரில் 30 சதவீதம் பேர் இந்தியர்கள்

இந்தியாவில் இருந்து இஸ்ரேலுக்கும் இடம்பெயர்ந்த இந்திய பூர்வீக யூத மக்கள் டிமோனா நகரில் அதிகம் வசிக்கின்றனர். சரியாக சொல்ல வேண்டும் என்றால் நகரில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 7,500 பேர் வரை வசித்து வருகின்றனர். இது அந்த நகரின் மக்கள் தொகையில் சுமார் 30 சதவீதமாகும்.
மேலும் அங்குள்ள மக்கள் சர்வசாதாரணமாக மராத்தி மொழியை பேசுவதை கேட்க முடியும். இதற்கு மகாராஷ்டிராவில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் தான் முக்கிய காரணமாகும்.

கிரிக்கெட் மிகவும் பிரபலம்

மேலும் இந்தியர்கள் அதிகளவில் கடைகள் நடத்தி வருகின்றனர். சோன்பப்டி, குலாப் ஜாமூன், பாப்ரி சாட், பேல்பூரி உள்ளிட்டவற்றை மக்கள் ரசித்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்னர்.நம் நாட்டை போல் டிமோனா நகரில் கிரிக்கெட் மிகவும் பிரபலம். இந்நிலையில் தான் தற்போதைய ஈரானின் தாக்குதல் அங்குள்ள மக்களை அச்சப்பட வைத்துள்ளது.

தாக்குதலின் பின்னணி

மேலும் இந்தியர்கள் அதிகமுள்ள டிமோனா நகரை குறிவைத்து ஈரான் தாக்கியதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த டிமோனா நகரில் தான் ஈரானின் முக்கி அணுசக்தி ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. அதன் பெயர் நெகேவ்.

நேற்றைய தினம் இஸ்ரேல், ஈரானில் உள்ள அணுசக்தி நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதனால் கோபமடைந்த ஈரான், இஸ்ரேலின் அணுசக்தி ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள டிமோனா நகரில் பாலிஸ்டிக் ஏவுகணையை வைத்து தாக்குதல் நடத்தி உள்ளது.

47 பேர் காயம் – தொடரும் பீதி

இந்த தாக்குதலில் டிமோனா நகரில் அணுசக்தி ஆராய்ச்சி மையத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. கதிர்வீச்சு வழக்கம்போல் தான் உள்ளது. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.இருப்பினும் கூட சில வீடுகள் இடிந்தள்ளதோடு, சிறுவர், சிறுமிகள், பெண்கள் உள்பட 47 பேர் வரை காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தாக்குதல் நிறுத்தப்பட்டாலும் கூட மீண்டும் ஈரான் இந்த இடத்தை குறிவைக்கலாம் என்பதால் அங்குள் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-israel-war-why-dimona-city-is-called-little-india-why-iran-target-with-missile-this-city-783367.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo