இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! | US flight accident: Air Canada Plane Rams Truck at LaGuardia: Multiple Injuries Reported in Collision

International

oi-Vigneshkumar

வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க் ஏர்போர்ட்டில் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது. இதில் விமானம் இரண்டாகப் பிளந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மோசமான விபத்து காரணமாகப் பலர் மிக மோசமாகக் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.

பொதுவாகவே விமானங்களில் மற்ற போக்குவரத்து முறைகளைக் காட்டிலும் உயர் பாதுகாப்பு தான் இருக்கும். ஆனால், அதையும் தாண்டி சில நேரங்களில் அரிதாக விபத்துகள் நடந்துவிடும். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

US flight accident Air Canada Plane Rams Truck at LaGuardia Multiple Injuries Reported in Collision

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள லா க்வார்டியா விமான நிலையத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. விமானப் போக்குவரத்து கண்காணிப்பு வலைத்தளமான FlightRadar24 இது குறித்த தகவலைப் பகிர்ந்துள்ளது. அதாவது விமான நிலையத்தில் இருந்த ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்றும் தீயணைப்பு வாகனமும் மோதியுள்ளது.

விமான நிலையத்தின் ஓடுபாதை 4ல் ஏற்பட்ட இந்த விபத்தில் விமானம் இரண்டாகப் பிளந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த விபத்தின் காரணமாகப் பலருக்குக் காயம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து தொடர்பான அதிர்ச்சி தரும் வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது.

விபத்து காரணமாக விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/us-flight-accident-air-canada-plane-rams-truck-at-laguardia-multiple-injuries-reported-in-collisio-783689.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo