
Cricket
oi-Yogeshwaran Moorthi
சென்னை: சிஎஸ்கே ரீயூனியன் நிகழ்ச்சியில் தோனி கையில் ஒரு குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் டிரெண்டாகியது. இதனையடுத்து தோனிக்கு 2வது மகன் பிறந்துள்ளதாக சோசியல் மீடியாவில் விவாதமாகியது. ஆனால் அது சர்ஃபராஸ் கானின் மகன் என்பது தெரிய வந்துள்ளது.
அண்மையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியின் ரீயூனியன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர்களான முத்தையா முரளிதரன், டுவைன் பிராவோ, அம்பாதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, முரளி விஜய், மைக் ஹசி, ஹர்பஜன் சிங், ஜகாட்டி, பத்ரிநாத் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். முன்னாள் வீரர்களுடன் இந்நாள் வீரர்கள் விளையாடியது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

அதேபோல் தோனியும் புதிய உற்சாகத்துடன் காணப்பட்டார். அதுமட்டுமல்லாமல் ஏஆர் ரஹ்மானின் இசை கச்சேரியும் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இதில் சிஎஸ்கே வீரர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். ஏஆர் ரஹ்மானின் இசை கச்சேரியை தோனி தனது மகள் ஸிவாவை மடியில் அமர வைத்து ரசித்தார். இதனை தோனி மனைவி சாக்ஷி பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.
தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் தோனி ஒரு ஆண் குழந்தைகளுடன் சிஎஸ்கே ஓய்வறையில் இருக்கும் புகைப்படம் பரவியது. இதனால் தோனிக்கு 2வது குழந்தை பிறந்துள்ளதாக ஒரு சிலர் பேசத் தொடங்கினர். இது தோனி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின் விசாரித்த போது, அது சிஎஸ்கே அணியின் இளம் வீரரான சர்ஃபராஸ் கானின் மகன் என்பது தெரிய வந்துள்ளது.
சிஎஸ்கே அணியின் ரீயூனியன் நிகழ்ச்சியில் பங்கேற்க சர்ஃபராஸ் கானின் குடும்பத்தினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் ஐபிஎல் தொடரின் போது வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இருக்க சிஎஸ்கே அணி நிர்வாகம் எப்போதும் கட்டுப்பாடு விதித்ததில்லை. இதனால் சர்ஃபராஸ் கானின் மகனை தோனி தூக்கி வைத்து கொஞ்சி இருக்கிறார்.
அந்த புகைப்படங்களை சர்ஃபராஸ் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனால் சில ரசிகர்கள் உண்மை தெரியாமல் தோனியின் குழந்தை என்று பேச தொடங்கிவிட்டனர். வழக்கமாக தோனி குழந்தைகளுடன் அதிகம் செலவிடுவார். 2 ஆண்டுகளுக்கு முன் நடராஜனின் குழந்தையுடனும் தோனி நேரம் செலவிட்டது குறிப்பிடத்தக்கது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/ms-dhoni-csk-legend-ms-dhoni-spents-time-with-sarfaraz-khan-son-and-the-video-is-trending-in-social-783975.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
