
International
oi-Shyamsundar I
தெஹ்ரான்: “எங்கள் எல்லைக்குள் நுழைந்தால் சும்மா விடமாட்டோம்” – இது ஈரான் கடற்படை அமெரிக்காவுக்கு விடுத்திருக்கும் லேட்டஸ்ட் வார்னிங். இதில் கவனிக்க வேண்டிய அமெரிக்காவின் ராட்சசனையே நாங்கள் முடித்துவிட்டோம் என்று மார்தட்டிக்கொள்கிறது ஈரான்.. அப்படி என்ன செய்தது?
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய அதிரடித் தாக்குதலுக்குப் பிறகு, மத்திய கிழக்கு பிராந்தியம் ஒரு எரிமலைக்குழம்பாகவே தகித்துக் கொண்டிருக்கிறது.

என்ன நடந்தது?
மார்ச் 25-ம் தேதியான நேற்று, ஈரானிய அரசு ஊடகங்கள் ஒரு அதிரடிச் செய்தியை வெளியிட்டன. அரபிக் கடலில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்காவின் பிரம்மாண்டமான ‘யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன்’ (USS Abraham Lincoln) விமானம் தாங்கிப் போர்க்கப்பலை நோக்கி ஈரான் கடற்படை ‘காதர்’ (Qader) ரக கடலோர க்ரூஸ் ஏவுகணைகளை வீசித் தாக்கியதாகத் தெரிவித்துள்ளது.
இது அமெரிக்காவின் வலிமையான போர்கப்பல்களில் ஒன்று. உலக நாடுகளே இந்த போர் கப்பலை பார்த்து ஷாக் ஆகும். முக்கியமாக சீனா, ரஷ்யா போன்ற நாடுகளே இந்த கப்பலுடன் மோதுவதற்கு அஞ்சும். ஆனால் இந்த போர் கப்பல்களை நாங்கள் தாக்கிவிட்டோம் என்று ஈரான் கூறி உள்ளது. அதாவது யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் மீது தாக்குதல் நடத்தி அதை கடுமையாக சேதப்படுத்திவிட்டோம் என்று ஈரான் கூறி உள்ளது.
இந்தத் தாக்குதல் காரணமாக, அமெரிக்காவின் அந்தப் பிரம்மாண்ட போர்க்கப்பல் தனது நிலையை மாற்றிக்கொண்டு பின்வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதாக ஈரான் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ஷாராம் இரானி மார்தட்டியுள்ளார்.
பழிக்குப் பழி?
ஈரான் ஏன் இந்தத் தாக்குதலை நடத்தியது என்பதற்கு அவர்கள் சொல்லும் காரணம் ‘சென்டிமென்ட்’ பிளஸ் ‘சாவரின்டி’.
ஈரானியப் பெருமை: சமீபத்தில் ஈரானின் ‘ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா’ (IRIS Dena) என்ற போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டதற்குப் பழிவாங்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாம்.
கடல் எல்லை: பாரசீக வளைகுடா பகுதியில் தங்கள் நாட்டின் இறையாண்மையை நிலைநாட்டவும், அமெரிக்காவின் ஆதிக்கத்தைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஈரான் தரப்பு கூறுகிறது.
இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த வாரத்தில் மட்டும் ஆபிரகாம் லிங்கன் கப்பலை ஈரான் குறிவைப்பது இது இரண்டாவது முறை! ஏற்கனவே ஒருமுறை கடுமையாக அதை சேதப்படுத்தியாக ஈரான் கூறியது.
அமெரிக்கா சொல்வது என்ன?
வழக்கம்போல அமெரிக்காவின் சென்ட்ரல் கமாண்ட் (CENTCOM) இந்தத் தகவலை அடியோடு மறுத்துள்ளது. “ஆபிரகாம் லிங்கன் கப்பலுக்கு எந்தச் சேதமும் இல்லை; அது முழு வீச்சில் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஈரானுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்களுக்கான விமானப் போக்குவரத்து அங்கிருந்து தங்குதடையின்றித் தொடர்கிறது” என அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.
“ஈரான் சொல்வது வெறும் ‘மீடியா ஸ்டண்ட்’. எங்கள் கப்பல் எங்கும் பின்வாங்கவில்லை” என்கிறது பென்டகன் தரப்பு.
அமெரிக்கா ‘மறுப்பு’ தெரிவித்தாலும், ஈரான் ‘தாக்குதல்’ எனத் தொடர்ந்து முழங்கி வருவதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை முதல் விமானப் போக்குவரத்து வரை அனைத்தும் கலக்கத்தில் இருக்கின்றன. வல்லரசு நாடுகளின் இந்த மோதல் எங்கே போய் முடியுமோ என்பதுதான் உலக நாடுகளின் இப்போதைய கவலை!
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-claims-it-has-attacked-the-uss-abraham-lincoln-for-the-second-time-784469.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
