
India
-Nantha Kumar R
டெல்லி: அதானி டிஃபென்ஸ் & ஏரோஸ்பேஸ் நிறுவனம், குவாலியரில் உள்ள தனது ஆலையிலிருந்து 2,000 பிரஹர் 7.62 மி.மீ இலகு ரக இயந்திர துப்பாக்கிகளை (LMG) இந்திய இராணுவத்திடம் ஒப்படைத்துள்ளது.

நம் நாட்டின் முன்னணி தொழிலதிபராக கவுதம் அதானி உள்ளார். இவரது அதானி குழுமம் பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் அதானி டிஃபென்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலை இந்திய ராணுவம் மற்றும் விண்வெளி துறைக்கு சேர்ந்த பொருட்களை உற்பத்தி செய்து வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
இந்திய பாதுகாப்பு துறையின் தற்சார்பு இலக்கை எட்டும் வகையில் இந்த நிறுவனம் உதவி வருகிறது. இந்நிலையில் தான், இலகு ரக இயந்திர துப்பாக்கிகளை உள்நாட்டில் பெரிய அளவில் இந்த நிறுவனம் தயாரித்து சாதனை படைத்துள்ளது.
அதன்படி முதற்கட்டமாக 2,000 பிரஹர் 7.62 மிமீ இலகு ரக இயந்திர துப்பாக்கிகள் இந்திய ராணுவத்துக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இந்த டெலிவரி என்பது குறிப்பிட்ட காலக்கெடு முடிவைடைவதற்கு 7 மாதங்களுக்கு முன்னதாகவே வழங்கப்பட்டுள்ளது. அதாவதுFirst-of-Production Model) திட்டமிடப்பட்ட 18 மாதங்களுக்குப் பதிலாக ஆறு மாதங்களுக்குள் உருவாக்கப்பட்டது. இது நிறுவனத்தின் வேகமான உற்பத்தி மற்றும் செயல்படுத்துதல் திறனைத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஆயுதப் படைகளின் மூத்த உறுப்பினர்கள் இந்த விநியோக நிகழ்வில் பங்கேற்றனர். இது உள்நாட்டு பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்தும் முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. பிரஹர் LMG ராணுவ வீரர்களுக்கு போர்க்களத்தில் நவீன தொழில்நுட்பத்தை வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது வீரர்களுக்கு பெரிய அளவில் உதவி செய்யும். துல்லியத்தன்மை, நம்பகத்தன்மை மற்றும் நீண்டகாலம் உழைக்கும் வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இது Semi Automatic மற்றும் Automatic முறைகளில் இயங்கும். இந்த துப்பாக்கி, சவாலான சூழலிலும் திறம்பட செயல்படும் திறன் கொண்டது.
இத்துப்பாக்கிகள் மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் உள்ள 100 ஏக்கர் பரப்பளவிலான அதானி டிஃபென்ஸ் சிறிய ரக ஆயுத உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்பட்டன. குவாலியர் ஆலையில் இருந்து ஆண்டுக்கு ஒரு லட்சம் வரை தயாரிக்க முடியும். இந்த ஆயுதங்களுக்குத் தேவையான 90 சதவீதத்திற்கும் அதிகமான பாகங்கள் உள்நாட்டிலேயே பெறப்படுகின்றன. இம்முயற்சி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், பாதுகாப்பு விநியோகச் சங்கிலியில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பெரிய அளவில் உதவும்.
இந்த ஆலையில் இங்கு சிஎன்சி இயந்திரங்கள், ரோபோடிக்ஸ், Precision Metrology, Metallurgy Laps,அண்டர்கிரவுண்ட் துப்பாக்கி சுடும் தளம் போன்ற அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. இது இந்தியாவின் முதல் முழு ஒருங்கிணைந்த தனியார் சிறிய ஆயுத உற்பத்தி மையமாகும்.
அதேபோல் உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் 2024ல் Adani Ammunition Complex தொடங்கப்பட்டது. இது தோட்டாக்கள் தயாரிக்கும் வளாகமாகும். ஆண்டுக்கு சுமார் 300 மில்லியன் வரையிலான சிறிய ரக தோட்டாக்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இந்த ஒட்டுமொத்த வளர்ச்சியும், இறக்குமதி ஆயுதங்களை இந்தியா சார்ந்திருப்பதை குறைத்து, சுயசார்பு இந்தியாவின் இலக்கிற்கு பெரிய அளவில் உதவும்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/india/adani-defence-delivers-to-indian-army-for-the-first-batch-of-indigenous-prahar-light-machine-guns-011-785225.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
