
International
-Nantha Kumar R
டெஹ்ரான்: ஈரான் இன்று குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் சிட்டி மீது அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது. அங்குள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளதாக கூறியுள்ள ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியான் அரபு நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக துபாயில் உள்ள அமெரிக்காவின் 2 பதுங்கு குழிகள் மீது ஈரான் துல்லியமாக தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில் கொத்து கொத்தாக அமெரிக்க வீரர்கள் பலியானார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் தொடங்கி உள்ளது. இந்த போர் இன்றுடன் ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ளது. தற்போது வரை போர் நிறுத்தம் செய்வதற்கான அறிகுறி இல்லை. இதற்கு முக்கிய காரணம் ஈரான் கொடுக்கும் பதிலடி தான்.
அமெரிக்கா தங்களை தாக்கியதில் இருந்து ஈரான் அண்டை நாடுகளாக உள்ள சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், குவைத் உள்பட பல நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நாடுகள் அமெரிக்காவின் நட்பு நாடு என்பதோடு, அங்கு அமெரிக்காவின் ராணுவ தளங்கள் உள்ளன.
ஈரான் அதிபர் வார்னிங்
இந்நிலையில் தான் இன்றும் ஈரான் குவைத் மற்றும் ஐக்கிய அரபு நாட்டின் துபாய் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இப்படியான சூழலில் தான் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், அமெரிக்க-இஸ்ரேல் ஆதரிக்கும் அரபு நாடுகளுக்கு கடும் வார்னிங் விடுத்தார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
அரபு நாடுகளுக்கு எச்சரிக்கை
” தங்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை விரும்பினால், ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா-இஸ்ரேலை தங்கள் நிலத்தைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம். ஏனென்றால் எங்கள் அடிப்படை வசதிகள் அல்லது பொருளாதார மையங்கள் குறிவைக்கப்பட்டால், நாங்கள் கடுமையாகப் பதிலடி கொடுப்போம்” என வார்னிங் செய்துள்ளார். ஈரான் மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்கா அரபு நாடுகளை பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனால் தான் ஈரான் அரபு நாடுகளை குறிவைத்து தாக்கி வருகிறது.
அமெரிக்க வீரர்களின் பதுங்கு குழிகள் குறி
அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் பதுங்கு குழிகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஈரானின் புரட்சிகர ராணுவ பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளதாவது: ”துபாயில் அமெரிக்காவின் 2 ராணுவ பதுங்கு குழிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
500க்கும் மேற்பட்ட அமெரிக்கப் படையினர் இருந்த இந்த இடங்கள் மீது துல்லியமான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தி உள்ளோம். மேலும் இந்த தாக்குதலுக்கு பிறகு துபாயில் சம்பவம் நடந்த இடத்துக்கு ஆம்புலன்ஸ்கள் விரைந்தன. பல மணிநேரமாக மீட்பு பணி நடந்தது. இறந்த மற்றும் காயமடைந்த அமெரிக்கர்களை மீட்கும் பணி நடந்தது.
அடிபணிவதை தவிர வேறு வழியில்லை
அமெரிக்க வீரர்கள் இப்பகுதியின் கல்லறை பகுதியாக மாறுவார்கள் என்பதை டிரம்ப்பும், அமெரிக்க இராணுவத் தளபதிகளும் முழுமையாகப் புரிந்துகொண்டிருக்க வேண்டும். வீரமிக்க ஈரான் மக்களுக்கும், இஸ்லாத்தின் துணிச்சலான வீரர்களுக்கும் அடிபணிவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை” என கூறியுள்ளார். இது பதற்றத்தை ஏற்படுத்தியது.
அமெரிக்கா மறுப்பு
இருப்பினும் ஈரானின் இந்த தகவலை அமெரிக்கா மறுத்துள்ளது. அமெரிக்காவின் மத்திய கட்டளைப்படை (US Central Command), ”துபாயில் அமெரிக்க படையினர் தாக்கப்படவில்லை. இது போலியான செய்தி . ஈரான் அரசு சமூக வலைதளங்களில் பொய்களை பரப்வி வருகிறது. ஈரானின் ராணுவ வலிமை பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளது. இதனை மறைக்கவே இதுபோன்ற முயற்சிகளில் ஈரான் ஈடுபட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி ஈரான் – அமெரிக்கா -அரபு நாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-president-issues-warning-to-gulf-neighbours-includign-kuwait-and-uae-011-785233.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
