“ஃபாலோவர்ஸ் போயிடுவாங்கனு பயமா?” சேவாக் vs அஸ்வின்.. ஐபிஎல் கமண்டரியில் மோதி கொண்ட வீரர்கள்.. | IPL 2026: Sehwag vs Ashwin Spark Fun Banter During RCB vs SRH Hindi Commentary Debut, What happened

Cricket

oi-Vigneshkumar

சென்னை: ஐபிஎல் தொடர் நேற்றைய தினம் தொடங்கிய சூழலில், முதல் போட்டியிலேயே களத்திற்கு உள்ளேயும் சரி களத்திற்கு வெளியேயும் சரி பல சுவாரசிய சம்பவங்கள் நடந்தன. அப்படி தான் டிவி கமண்டரியில் சேவாக் மற்றும் அஸ்வின் இடைய ஒரு சிறு கருத்து மோதல் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

2026ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நேற்று ஆரம்பித்தது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 9 விக்கெட்களை இழந்து 201 ரன்களை எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த பெங்களூர் வெறும் 15.4 ஓவர்களில் 203 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

IPL 2026 Sehwag vs Ashwin Spark Fun Banter During RCB vs SRH Hindi Commentary Debut What happened

சேவாக் vs அஸ்வின்

இந்த போட்டியில் களத்திற்கு உள்ளே எந்தளவுக்கு ஆட்டம் அனல் பறந்ததோ.. அதே அளவுக்கு கமண்டரியிலும் அனல் பறந்தது. இந்த போட்டியில் இந்தி வர்ணனையில் முன்னாள் இந்திய வீரர்களான வீரேந்திர சேவாக், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இருந்தனர். சேவாக் பல ஆண்டுகளாகவே கமண்டரி செய்து வரும் நிலையில், அஸ்வின் முதல்முறையாக டிவி கமண்டரியில் இறங்கியுள்ளார். இதன் மூலம் ஏற்கனவே யூடியூப் சேனல்களை சிறப்பாக நடத்தி வரும் அஸ்வின் முதல்முறையாக இந்தி டிவி கமண்டரியில் களமிறங்கியுள்ளார்.

மோதல்

இதற்கிடையே நேற்றைய தினம் முதல் போட்டி தொடங்குவதற்கு முன்பு சேவாக் மற்றும் அஸ்வின் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இரு தரப்பிற்கும் இடையே சிறு வாக்குவாதம் ஏற்பட்டது. இது தான் இப்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.. அஸ்வின் வந்தபோது சேவாக், “இன்று நாம் ஒவ்வொரு விஷயத்தையும் யோசித்து யோசித்துப் பேசப்போவதில்லை.. மனதிலிருந்து பேசுவோம்” என்ற கூறினார். அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும், இந்த கருத்தால் அஸ்வின் அதிருப்தி அடைந்ததாகத் தெரிகிறது.

யோசித்து யோசித்து பேசுவார்கள்

உடனடியாக அஸ்வின், “என் பெற்றோர் கற்றுக் கொடுத்ததற்கு நீங்கள் முற்றிலும் எதிராகச் சொல்கிறீர்கள். யோசித்துப் பேச வேண்டும்.. யோசிக்காமல் எதையும் பேசக்கூடாது என்றனர்” என அவர் பதில் கொடுத்தார். அதற்குச் சற்றும் யோசிக்காமல் அஸ்வினை நேரடியாகவே விமர்சிக்கும் வகையில் பேசினார். அவர் மேலும், “சிலர் எப்போதும் யோசித்துப் பேசுவார்கள்.. அதாவது இந்த வீரருக்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் தவறாகப் பேசினால் ஃபாலோவர்ஸ் குறைவார்கள், நல்லதாகப் பேசினால் கூடுவார்கள் என்று நினைத்துப் பேசுவார்கள்” என்றார்.

சேவாக் இதிலும் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும் கூட அஸ்வினையே குறிப்பிடுவதாகவே நெட்டிசன்கள் பலரும் கருதுகிறார்கள். இரு தரப்பிற்கும் இடையே இது போல மாறி மாறி நடந்த வார்த்தை மோதல் தான் இப்போது இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது. இது தொடர்பான வீடியோவையும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

பிசிசிஐ

இந்தச் சம்பவத்தால் பிசிசிஐ அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கிரிக்கெட் கமண்டரி செய்யும் வல்லுநர்கள், ஆட்ட நுணுக்கங்கள், வீரர்களின் திறமை உள்ளிட்டவை குறித்தே பேச வேண்டும். ஆனால், தனிப்பட்ட கருத்துகள் தொடர்பாக விவாதிப்பது ஏற்க முடியாது என்பதே பிசிசிஐ நிலைப்பாடாக இருக்கிறது. இதனால் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

அதேநேரம் இன்னும் சில நெட்டிசன்கள் இதில் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்கிறார்கள். இரு பெரும் ஜாம்பவான்வகள் பேசும்போது இது போன்ற சம்பவங்கள் சாதாரணம் தான் என்றும், நிலைமை மோசமாகச் செல்லாதபோது நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என்கிறார்கள். அதேநேரம் வரும் போட்டிகளிலும் இருவரும் ஒன்றாக கமண்டரி செய்யலாம் என்பதால் வார்த்தை மோதல்கள் மேலும் அதிகரிக்கும் என்றே நெட்டிசன்கள் குறிப்பிடுகிறார்கள்.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2026-sehwag-vs-ashwin-spark-fun-banter-during-rcb-vs-srh-hindi-commentary-debut-what-happened-785317.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo