ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கேவிடம் வம்பு செய்த காவ்யா மாறன்.. இப்படியொரு பவுலிங் அட்டாக்கை உருவாக்கதானா! | Kavya Maran: CSK Fans trolling Kavya Maran after SRH lost against RCB due to the Evil Laugh after increasing the price of Karthik Sharma and Prashant Veer in the IPL Auction

Cricket

oi-Yogeshwaran Moorthi

மும்பை: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி மோசமான தோல்வியை பெற்றதையடுத்து, காவ்யா மாறனை ரசிகர்கள் கிண்டல் செய்ய தொடங்கியுள்ளனர். இப்படியொரு பவுலிங் அட்டாக்கை உருவாக்குவதற்காக தான், ஐபிஎல் ஏலத்தின் போது சிஎஸ்கே அணியின் திட்டங்களில் குறுக்கிட்டீர்களா என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி படுதோல்வியை சந்தித்தது. ஐதராபாத் அணி நிர்ணயித்த 202 ரன்கள் என்ற இலக்கை 15.4 ஓவர்களில் ஆர்சிபி அணி விரட்டியது. ஐதராபாத் அணியின் தோல்விக்கு அந்த அணியின் பவுலர்களே முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றனர். உனாத்கட், நிதிஷ் ரெட்டி, சிவம் துபே, இஷான் மலிங்கா என்று சொல்லிக் கொள்ளும்படி எந்த பவுலரும் இல்லை.

Kavya Maran

அதேபோல் ரன்களை வாரி வழங்கும் வள்ளலான ஹர்சல் படேல் மிடில் ஓவர்களிலேயே அட்டாக்கில் வந்துவிடுகிறார். இதனால் கம்மின்ஸ் வரும் வரை ஐதராபாத் அணியை யாராலும் காப்பாற்ற முடியாது என்று சொல்லப்படுகிறது. இதனால் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் ரசிகர்கள் கிண்டல் செய்ய தொடங்கியுள்ளனர். ஏற்கனவே அனிருத் பாடல்களை பயன்படுத்தியதால், சிஎஸ்கே வீடியோவுக்கு சிக்கல் வந்தது.

காவ்யா மாறன் தரப்பில் நீதிமன்றம் வரை சென்றதால், சிஎஸ்கே அணி சோசியல் மீடியாவில் எந்த இசையையும் பயன்படுத்தவில்லை. அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் மினி ஏலத்தின் போதும் சிஎஸ்கே அணி வாங்க திட்டமிட்டிருந்த வீரர்களின் விலையை ஏற்றிவிடுவதில் காவ்யா மாறன் குறியாக இருந்தார். பிரசாந்த் வீர் விலையை ஏற்றிவிட்டு காவ்யா மாறன் நக்கலாக சிரித்தது சர்ச்சையாகியது.

அதேபோல் கார்த்திக் சர்மாவின் விலையை ஏற்றிவிட்ட காவ்யா மாறன், சலீல் அரோராவை வாங்கி சென்றார். இளம் வீரர்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டதால், ஜேசன் ஹோல்டரை திட்டமிட்டபடி சிஎஸ்கே அணியால் வாங்க முடியவில்லை. இது ஐபிஎல் ஏலத்தின் ஒரு அங்கம் என்றாலும், சிஎஸ்கே அணியை காவ்யா மாறன் தொடர்ச்சியாக வம்புக்கு இழுத்தார்.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியை திட்டமிட்டபடி வீரர்களை வாங்கவிடாத காவ்யா மாறன், இப்படியொரு பவுலிங் அட்டாக்கை உருவாக்கி இருப்பது விவாதமாகியது. இப்படியொரு மோசமான பவுலிங் அட்டாக்கை உருவாக்கிவிட தான் சிஎஸ்கே அணியை வம்பிழுத்து வந்தாரா என்றும் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/kavya-maran-csk-fans-trolling-kavya-maran-after-srh-lost-against-rcb-due-to-the-evil-laugh-after-in-785423.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo