
Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த பின் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்வாட்டின் பேச்சு ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்று வருகிறது. 150, 160 ரன்கள் முதல் பேட்டிங் ஆடும் போது பாதுகாப்பானதா என்று ருதுராஜ் கெய்க்வாட் கேள்வி எழுப்பியுள்ளதோடு, சிஎஸ்கே அணியின் திட்டம் அதிரடி மட்டும்தான் என்பதையும் கூறி இருப்பதாக தெரிகிறது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 19.4 ஓவர்களில் 127 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் ராஜஸ்தான் அணி 12.1 ஓவர்களில் 128 ரன்கள் என்ற இலக்கை எட்டி பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இதனால் சிஎஸ்கே அணி மீண்டும் கடைசி இடத்திலேயே இருக்கிறது.

சிஎஸ்கே அணியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்களின் பொறுப்பில்லாத ஆட்டமே காரணமாக அமைந்துள்ளது. ஏனென்றால் அத்தனை பேட்ஸ்மேன்களும் கொஞ்சம் கூட பொறுப்பின்றி நிதானமாக விளையாடவில்லை. முதல் பந்தில் இருந்தே அட்டாக் செய்ய வேண்டும் என்று பேட்ஸ்மேன்களுக்கு திட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் அத்தனை பேட்ஸ்மேன்களும் சிக்கி இருக்கின்றனர்.
இந்த தோல்விக்கு பின் ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், இந்த தோல்வியால் உடைந்துபோகவில்லை. ஏனென்றால் வெகப்பந்துவீச்சாளர், மீடியம் ஃபாஸ்ட் பவுலர்கள், ஸ்பின்னர்களுக்கு கூட பிட்ச் நன்றாக உதவியது. எங்களின் பேட்டிங்கில் தவறுகள் இருந்தது உண்மை தான். கொஞ்சம் நிதானமாக விளையாடி கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி இருக்கலாம்.
ஆனால் இந்தப் போட்டியில் 150, 160 ரன்கள் எடுத்தால் வெல்ல முடியுமா என்ற கேள்வி உள்ளது என்று தெரிவித்தார். ருதுராஜ் கெய்க்வாட்டின் இந்த பேச்சு ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்று வருகிறது. ஏனென்றால் இம்பேக்ட் பிளேயர் ரூல் இருக்கும் போது எந்த இலக்கு பாதுகாப்பானது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதன் காரணமாகவே சிஎஸ்கே பேட்ஸ்மேன்களுக்கு நிதானமாக விளையாடக் கோரி அறிவுறுத்தப்படவில்லை என்று தெரிகிறது. இதன் மூலமாக எத்தனை விக்கெட்டுகள் சென்றாலும், அதிரடியாக விளையாடுவது ஒன்றே திட்டம் என்பதில் சிஎஸ்கே அணி தெளிவாக இருக்கிறது. இந்த திட்டத்தை முதல் சில போட்டிகளுக்கு பின்பற்ற ருதுராஜ் கெய்க்வாட் – ஃபிளமிங் கூட்டணி தீவிரமாக இருப்பதும் புரிந்து கொள்ள முடிகிறது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/csk-following-the-defeat-against-the-rajasthan-royals-the-remarks-made-by-csk-captain-ruturaj-gaik-785937.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
