துபாய் சல்லி சல்லியா நொறுங்க போகுது.. அமீரகம் அவசரப்பட்டா அடி தாங்காது! அமெரிக்காவிலிருந்து வார்னிங் | US Economist Warns UAE Over Iran Conflict Threat To Dubai

International

oi-Rajkumar R

துபாய்: கடந்த சில வாரங்களாக இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பதற்றம் தீவிரமடைந்து வருகிறது. இந்த மோதலின் தாக்கம் தற்போது வளைகுடா நாடுகளுக்கும் பரவி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக அமெரிக்க படைகளுக்கு அடைக்கலம் கொடுத்த சில வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில், ஈரானுக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகம் நேரடியாக போரில் ஈடுபட்டால், துபாய் போன்ற முக்கிய நகரங்களுக்கு பெரிய ஆபத்து ஏற்படும் என்று அமெரிக்காவின் முன்னணி பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானுக்கு எதிராக பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பதிலடியாக, அமெரிக்க இராணுவ தளங்கள் உள்ள பகுதிகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் வளைகுடா பகுதியில் உள்ள பல நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. குறிப்பாக அமெரிக்க வான் படைத தளங்களுக்கு அனுமதி அளித்து வரும் கத்தார் உள்ளிட்ட சில நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் வளைகுடா பகுதியில் உள்ள பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் பதற்றத்தில் உள்ளன.

US Economist Warns UAE

ஐக்கிய அரபு அமீரகம்

இந்த சூழ்நிலையில், ஈரானுக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகம் நேரடியாக போரில் ஈடுபட்டால், துபாய் போன்ற முக்கிய நகரங்களுக்கு பெரிய ஆபத்து ஏற்படும் என்று அமெரிக்காவின் முன்னணி பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னணி ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர்,” ஐக்கிய அரபு அமீரகம் தற்போது மிக ஆபத்தான சூழ்நிலைக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நெருங்கிய உறவை பேணுவதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் தன்னைத்தானே ஆபத்துக்குள் தள்ளிக் கொண்டுள்ளது.

ஜெஃப்ரி சாக்ஸ் எச்சரிக்கை

இந்த மோதலில் நேரடியாக ஈடுபடுவது அந்த நாட்டிற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஐக்கிய அரபு அமீரகம் போரில் இறங்கும் சூழ்நிலை ஏற்பட்டால், துபாய் மற்றும் அபுதாபி போன்ற முக்கிய நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. இந்த நகரங்கள் பெரும்பாலும் சுற்றுலா மற்றும் முதலீடுகளை மையமாகக் கொண்டு வளர்ந்த நகரங்கள் என்பதால், ஏவுகணை தாக்குதல்களை தாங்கும் வகையில் முழுமையாக பாதுகாப்பு அமைப்புகள் வடிவமைக்கப்படவில்லை.

துபாய்

துபாய் போன்ற நகரங்கள் உலகம் முழுவதும் இருந்து முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் போர் சூழ்நிலையில் இத்தகைய நகரங்கள் பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடு. ஒரு போர் சூழ்நிலைக்குள் இத்தகைய நகரங்கள் இழுக்கப்படுவது, அதன் பொருளாதார நோக்கத்தையே சிதைக்கும் நடவடிக்கையாக மாறும். மேலும், அமெரிக்காவுடன் நெருங்கிய பாதுகாப்பு உறவு வைத்திருப்பது சில நேரங்களில் அந்த நாடுகளுக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வளைகுடா நாடுகள்

குறிப்பாக வெளிநாட்டு பாதுகாப்பை அதிகமாக நம்புவது, எதிர்காலத்தில் பெரிய சிக்கல்களை உருவாக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வளைகுடா பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, அங்கு உள்ள நாடுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றன. இந்த மோதல் மேலும் தீவிரமடைந்தால், துபாய் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால், உலக நாடுகள் இந்த நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/us-economist-warns-uae-over-iran-conflict-threat-to-dubai-786181.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo