
India
oi-Prasanna Venkatesh
ஹரியானா: ஹரியானா அரசு கணக்குகளில் பல வங்கி மோசடிகள் அடுத்தடுத்த வெளிச்சத்திற்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த வங்கி மோசடியில் மொத்தம் ரூ.750 கோடிக்கு மேல் அரசின் பணம் மோசடி செய்யப்பட்டு உள்ளது.
இதில் IDFC ஃபர்ஸ்ட் வங்கியில் ரூ.590 கோடி மோசடியும், கோடக் மஹிந்திரா வங்கியில் ரூ.160 கோடி ஃபிக்ஸ்ட் டெபாசிட் (FD) மோசடியும் முக்கியமானவை. இரண்டு வழக்குகளிலும் போலி ஆவணங்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் – அரசு அதிகாரிகள் இடையேயான சதி இருப்பது முதல் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளன.

IDFC மோசடி வழக்கு
நாட்டையே உலுக்கிய IDFC ஃபர்ஸ்ட் வங்கியில் ரூ.590 கோடி மோசடி கண்டறியப்பட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு, ஹரியானா அரசு இந்த வழக்கை மத்திய குற்றப் புலனாய்வு அமைப்பான CBIக்கு மாற்ற முடிவு செய்துள்ளது.
IDFC ஃபர்ஸ்ட் வங்கி பங்குகள் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி முதல் தொர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. 83 ரூபாய் அளவில் வர்த்தகம் செய்யப்பட்ட இவ்வங்கி பங்குகள் தற்போது 60 ரூபாய் அளவில் வர்த்தகமாகி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 15.23 சதவீதம் சரிந்த IDFC ஃபர்ஸ்ட் வங்கி பங்குகள் இன்று 3.40 சதவீதம் உயர்வுடன் 60.85 ரூபாயில் அளவில் வர்த்தகமாகி வருகிறது. 2026ஆம் ஆண்டில் இவ்வங்கி பங்குகள் சுமார் 28.93 சதவீதம் சரிந்துள்ளது.
கோடக் மஹிந்திரா வங்கி மோசடி
இதை தொடர்ந்து கடந்த வாரம் வெளிச்சத்திற்கு வந்த ஹரியானா மாநிலத்தின் பஞ்ச்குலா நகராட்சியின் ரூ.150 கோடிக்கு அதிகமான தொகையை கோடக் மஹிந்திரா வங்கி மோசடி செய்யப்பட்ட வழக்கில், இவ்வங்கியின் டெபுடி வைஸ் பிரசிடெண்ட் புஷ்பேந்தர் சிங் முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார். தற்போது புஷ்பேந்தர் சிங் தலைமறைவாக உள்ளார். மேலும் இக்கிளையின் ரிலேஷன்ஷிப் மேனேஜப் தீலீப் குமார் ராகவ், விசாரணை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்.
இந்த மாபெரும் மோசடி செக்டார் 11 வங்கி கிளையில் நடந்துள்ளது. பஞ்ச்குலா நகராட்சியின் கோட்டாக் மஹிந்திரா வங்கியில் சுமார் 145.03 கோடி ரூபாய் அளவிலான நிதியை 16 வைப்பு நிதியில் முதலீடு செய்திருந்தது. இந்த வைப்பு நிதி முதிர்வு அடைந்தால் சுமார் 158.02 கோடி கிடைக்கும் என கணக்கில் பஞ்ச்குலா நகராட்சி முதலீடு செய்தது.
இதில் 11 வைப்பு நிதி பிப்ரவரி 16ஆம் தேதி முதிர்வு அடைந்த நிலையில் பஞ்ச்குலா நகராட்சி அதிகாரிகள் கோட்டாக் மஹிந்திரா வங்கியிடம் விபரங்களை கேட்டுள்ளனர். வங்கி தரப்பில் கொடுக்கப்பட்ட முதலீட்டு தொகைக்கும் பஞ்ச்குலா நகராட்சி முதலீடு செய்த தொகைக்கும் பெரிய வித்தியாசம் இருந்தது தெரிய வந்தது. இதுதான் மோசடி நடந்துள்ளது தெரிய வந்த தருணம்.
பஞ்ச்குலா நகராட்சி கொடுத்த தொகையில் பெரும் தொகை வங்கி கணக்கிற்குள் வரவில்லை என்பது வங்கி கண்டுப்படித்துள்ளது. இதை விசாரிக்கும் போது செக்டார் 11 வங்கி கிளையின் மேனேஜராக இருந்த புஷ்பேந்தர் சிங் முக்கிய குற்றவாளியாக அறியப்பட்டார், இவருடன் தீலீப் குமார் ராகவ் ஈடுப்பட்டது தெரிய வந்தது. இந்த பிரச்சனையை சரி செய்ய வங்கி தரப்பில் தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் படி பஞ்ச்குலா நகராட்சிக்கு, கோட்டாக் மஹிந்திரா வங்கி சுமார் ரூ.127 கோடி அளவிலான தொகையைத் திருப்பி அளித்துள்ளது. இருப்பினும், நகராட்சியின் உண்மையான இழப்பு இதைவிட அதிகம் என்று பஞ்ச்குலா நகராட்சி தரப்பில் கூறப்படுகிறது. இந்த வங்கி வைப்பு நிதி மோசடி தொடர்பான FIR-இல், 16 வைப்பு நிதிகள் மூலம் ரூ.145.03 கோடி முதலீடு செய்யப்பட்டிருந்ததாகவும், அவற்றின் முதிர்வு மதிப்பு ரூ.158.02 கோடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வங்கி தரப்பில் 127 கோடி ரூபாய் மட்டுமே வந்துள்ளது.
கோடாக் மஹிந்திரா வங்கி பங்குகள் பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி முதல் தொர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. சுமார் 430 ரூபாய் அளவில் வர்த்தகம் செய்யப்பட்ட இவ்வங்கி பங்குகள் தற்போது 360 ரூபாய் அளவில் வர்த்தகமாகி வருகிறது. கடந்த ஒரு மாத்த்தில் மட்டும் சுமார் 13.01 சதவீதம் சரிந்த கோடாக் மஹிந்திரா வங்கி பங்குகள் இன்று 1.68 சதவீதம் உயர்வுடன் 360 ரூபாய் அளவில் வர்த்தகமாகி வருகிறது. 2026ஆம் ஆண்டில் இவ்வங்கி பங்குகள் சுமார் 19.01 சதவீதம் சரிந்துள்ளது.
இந்த மோசடிக்கு விரைவாக தீர்வு காணப்பட்டது மூலம் பங்கு சரிவை கோடாக் மஹிந்திரா வங்கி குறைத்துள்ளது.
HPGCL ரூ.25 கோடி மீட்டெடுப்பு
ஹரியானா பவர் ஜெனரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPGCL) AU ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் இருந்து ரூ.25 கோடியை மீட்டுள்ளது. இதனுடன் IDFC வங்கியிலிருந்து மீதமிருந்த அனைத்து நிலுவைத் தொகையும் திருப்பிப் பெறப்பட்டுவிட்டதாக ஹரியானா அரசு அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மீட்டெடுப்புகளுக்குப் பிறகு, ஹரியானா அரசுக்கு எந்த வங்கியிலும் நிலுவைத் தொகை இல்லை. இது பொது நிதி மேலாண்மையில் மிகப் பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி, அதிகாரிகள் மற்றும் வங்கிகளுக்கு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், ஹரியானா அரசு பொது நிதியைப் பாதுகாக்க அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/india/kotak-mahindra-bank-shares-bounce-back-today-on-haryana-rs-150-crore-fd-fraud-case-cbi-to-probe-rs-786197.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
