
Business
oi-Prasanna Venkatesh
ஈரான் போரால் ஏற்பட்ட பதற்றம் தணியும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள காரணத்தால் அமெரிக்கா, ஜப்பான், சீனா, கொரியா சந்தை முதல் இந்திய பங்குச் சந்தை வரையில் இன்று அதிரடியான உயர்வை பதிவு செய்துள்ளது. 2026-27ஆம் நிதியாண்டின் தொடக்க நாளான இன்று பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது.
புதன்கிழமை காலை வர்த்தகத்தில், சென்செக்ஸ் 2,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 73,964 என்ற உச்சத்தை தொட்டது. அதே நேரத்தில், நிஃப்டி 600 புள்ளிகள் உயர்ந்து 22,941 நிலையை கடந்தது. இந்த அதிரடி இந்த உயர்வின் விளைவாக, மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து 425 லட்சம் கோடியை கடந்துள்ளது.

இதன் மூலம் மார்ச் மாதம் முழுவதும் ரத்தகளறியான இருந்த இந்திய பங்குச்சந்தை ஏப்ரல் 1ஆம் தேதி மிகவும் சிறப்பான நாளாக அமைந்துள்ளது. 10.35 மணியளவில் சென்செக்ஸ் 1,580 புள்ளிகள் உயர்ந்து 73,521.83 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது, இதேபோல் 475 புள்ளிகள் உயர்ந்து 22,809 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய உயர்வுக்கு முக்கிய காரணம், ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் விரைவில் முடிவடையலாம் என்ற சிக்னல்கள் தான். டொனால்டு டிரம்ப் அமெரிக்கா ராணுவ நடவடிக்கைகளை 2 முதல் 3 வாரங்களில் முடிக்கலாம் என தெரிவித்தது சந்தைக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. மேலும் போரை நிறுத்துவதற்கு முன்பு ஈரான் உடன் ஒப்பந்தம் செய்ய தேவையில்லை என்றும், விரைவில் வெளியேறுவோரும் எனவும் டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இதேவேளையில் ஈரான் நாட்டின் அதிபர் Masoud Pezeshkian போரை முடிக்க ஈரான் தயாராக இருப்பதாகவும், எதிர்காலத்தில் மோதல் மீண்டும் ஏற்படாத வகையில் அமெரிக்கா – இஸ்ரேல் உறுதி அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இரு தரப்பினரின் கருத்துகள் தான் முதலீட்டு சந்தையில் நம்பிக்கையை அதிகரித்துள்ளன.
டிரம்ப்-ன் பேச்சுக்கு பின்பு அமெரிக்காவில் S&P 500 சுமார் 3% உயர்ந்துள்ளது. நாஸ்டாக் காம்போசிட் குறியீடு 4% உயர்வு கண்டுள்ளது. டாவ் ஜோன்ஸ் 2.5% உயர்ந்துள்ளது. இந்த உயர்வு ஆசிய சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது. ஜப்பானின் Nikkei 225 4% க்கும் மேல் உயர்ந்துள்ளது. தென் கொரியாவின் KOSPI சுமார் 7% உயர்ந்துள்ளது. தைவான் மற்றும் ஹாங்காங் சந்தைகளும் வலுவான ஏற்றத்தை பதிவு செய்துள்ளன.
இந்திய சந்தைக்கு இன்றைய வர்த்தகம் மிகவும் முக்கியமானதாக திகழ்கிறது. தினமும் பல லட்சம் கோடியை இழக்கும் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை மதிப்பு உயர்வு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த அதிரடி உயர்வு, மார்ச் மாதத்தில் ஏற்பட்ட பெரிய சரிவுக்கு பின் ஏற்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் நிஃப்டி சுமார் 11% வீழ்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது.
சென்செக்ஸ் குறியீட்டின் 30 நிறுவன பங்குகள் அனைத்தும் லாபத்தில் வர்த்தகமாகி வருகிறது. இதில் குறிப்பாக இண்டிகோ நிறுவன பங்குகள் 9.20 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது, விமான எரிபொருள் விலை உயர்வை டிக்கெட் விலை உயர்வின் மூலம் கட்டுப்படுத்தப்படும் என நம்பிக்கை முதலீட்டாளர்களுக்கு இருந்தாலும், புதிய சிஇஓ-வாக வில்லியம் வால்ஷ் நியமிக்கப்பட்டது முக்கிய காரணமாக உள்ளது.
டாடா-வின் டிரென்ட் அதிரடியாக 6.63 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் முக்கியமாக டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், டெக் மஹிந்திரா அனைத்தும் 3-2 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/sensex-jumps-2000-points-adds-rs-10-lakh-crore-in-one-day-as-iran-war-de-escalation-hopes-rise-786167.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
