20 நாள் பொறுமையா இருந்தா ரூ.70 லட்சம் தள்ளுபடி கிடைக்கும்..!! | Jaguar Land Rover Models in India to Get Up to Rs.70 Lakh Cheaper After April 20 – Jaguar Land Rover Passes on UK FTA Duty Benefits

Business

oi-Prasanna Venkatesh

இந்தியா – இங்கிலாந்து மத்தியில் செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின் (FTA) பலன்கள் மெல்ல மெல்ல இந்திய மக்களுக்கு கிடைக்க துவங்கியுள்ளது. இந்திய ஆடம்பர கார் சந்தையில் FTA ஒப்பந்தத்தின் பலன்கள் வருகிற ஏப்ரல் 20ஆம் தேதி முதல் கிடைக்க உள்ளது.

இதன் ஒரு பகுதியாக, ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட லேண்ட் ரோவர் மாடல்களின் விலையை குறைக்கத் டாடா மோட்டார்ஸ். இந்த விலை மாற்றம் ஏப்ரல் 20க்குப் பிறகு அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

UK FTA Jaguar Land Rover Car Automobile UK FTA Rs 70 Land Rover Price Cut India Jaguar Land Rover FTA Benefit UK India Trade Agreement Rs 70 Lakh Discount Land Rover Luxury SUV Price Reduction Land Rover models to become cheaper in India Jaguar Land Rover price cut April 2026 Rs 70 lakh discount on Range Rover India India UK FTA duty benefits luxury vehicles Land Rover SV 4 4 price reduction Range Rover Sport SV cheaper by Rs 40 lakh import duty on UK cars drops to 30 rupee depreciation offsets FTA benefit quota limit on UK vehicle imports India Jaguar Land Rover passes on duty savings luxury SUV price revision India April 2026 UK built vehicles cheaper after April 20 Tata owned Jaguar Land Rover India pricing high-end Land Rover models discount FTA impact on premium car market India FTA UK 70 SV FTA UK 20 SUV SV 40 UK

FTA ஒப்பந்தம் வாயிலாக ஜாகுவார் லேண்டு ரோவர் கார்களின் விலை சுமார் 13% முதல் 15% வரை குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, கார் மாடல்களுக்கு ஏற்ப 40 லட்சம் முதல் 70 லட்சம் வரை விலைக் குறைப்பு கிடைக்கலாம்.

டாப் மாடல்களான ரேஞ்ச் ரோவர் SV 4.4 தற்போது சுமார் 4.25 கோடி ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின்பு இதன் விலையில் 63-75 லட்சம் வரை குறைப்பு இருக்கலாம். அதேபோல் ரேஞ்ச் ரோவர் Sport SV மாடல் சுமார் 40 லட்சம் ரூபாய் வரை மலிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விலை குறைப்பின் முக்கிய காரணம், இந்தியா – இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இறக்குமதி வரி குறைக்கப்பட்டதுதான். வெளிநாட்டில் முழுமையாக தயாரிக்கப்பட்ட ஆடம்பர வாகனங்களுக்கு இருந்த சுமார் 110% இறக்குமதி வரி, 30% ஆக குறைக்கப்படுகிறது. மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இது 10% வரை குறையும். இது இந்தியா – இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தத்தில் முக்கியமான விஷயமாக பார்க்கப்பட்டது.

இந்த சலுகை, 3000cc க்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட பெட்ரோல் வாகனங்கள், 2500cc க்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட டீசல் வாகனங்களுக்கு பொருந்தும்.

இருப்பினும், இந்த வரிச் சலுகைகள் முழுமையாக எல்லா வாகனங்களுக்கும் கிடைக்காது. முதல் ஆண்டில் 20,000 வாகனங்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும். ஐந்தாவது ஆண்டில் இது 37,000 ஆக அதிகரிக்கும். இந்த வரம்பை தாண்டி இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 95% வரை வரி விதிக்கப்படும். இதனால், விலை குறைப்பின் முழு பயன் எல்லா வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஆடம்பர கார் வாங்க விரும்பும் மக்கள் முன்கூட்டியே புக்கிங் செய்வது நல்லது.

UK FTA Jaguar Land Rover Car Automobile UK FTA Rs 70 Land Rover Price Cut India Jaguar Land Rover FTA Benefit UK India Trade Agreement Rs 70 Lakh Discount Land Rover Luxury SUV Price Reduction Land Rover models to become cheaper in India Jaguar Land Rover price cut April 2026 Rs 70 lakh discount on Range Rover India India UK FTA duty benefits luxury vehicles Land Rover SV 4 4 price reduction Range Rover Sport SV cheaper by Rs 40 lakh import duty on UK cars drops to 30 rupee depreciation offsets FTA benefit quota limit on UK vehicle imports India Jaguar Land Rover passes on duty savings luxury SUV price revision India April 2026 UK built vehicles cheaper after April 20 Tata owned Jaguar Land Rover India pricing high-end Land Rover models discount FTA impact on premium car market India FTA UK 70 SV FTA UK 20 SUV SV 40 UK

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
இந்திய ரூபாய் மதிப்பு, 2026 நிதியாண்டு தொடக்கத்திலிருந்து பிரிட்டிஷ் பவுண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 13% வரை குறைந்துள்ளது. இதனால் இறக்குமதி வரி குறைப்பால் கிடைக்கும் விலை சலுகையில் பாதிப்பு உருவாகியுள்ளது.

FTA ஒப்பந்தம் மூலம் கொண்டு வரப்பட்டுள்ள வரி மாற்றங்கள் இந்தியாவில் ஆடம்பர கார் சந்தைக்கு புதிய வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குகின்றன. குறிப்பாக உயர்ந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு, ஆடம்பர் கார் வாங்கும் வாய்ப்பு மாறலாம், முன்பு விலை அதிகம் என்பதால் ஜாகுவார் லேண்ட் ரோவர், ரேஞ்ச் ரோவர் கார்களை வாங்காமல் தவிர்த்த மக்கள் இந்த 70 லட்சம் வரையிலான விலை குறைப்பை பயன்படுத்தி எளிதாக வாங்க முடியும்.

இதன் மூலம் மற்ற ஆடம்பர பிராண்டுகளுக்க வர்த்தக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

வர்த்தக ஒப்பந்தம்
இந்தியா மற்றும் பிரிட்டன் (UK) இடையில் 2025ஆம் ஆண்டு ஜூலை 24ல் செய்யப்பட்ட விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CETA) ஒப்பந்தம் வரும் ஏப்ரல் 2026-ல் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் 99% ஏற்றுமதிப் பொருட்களுக்கு பிரிட்டன் சந்தையில் பூஜ்ஜிய வரி (zero-duty) வசதி கிடைக்கும். ஜவுளி, தோல் பொருட்கள், கடல் உணவுகள், காலணிகள், விளையாட்டு உபகரணங்கள், பொம்மைகள் மற்றும் ஆபரணங்கள் போன்ற துறைகள் பெரும் பயனடையும்.

இதேபோல் பிரிட்டன் கார்கள் மற்றும் விஸ்கி மீதான இறக்குமதி வரிகள் இந்தியாவில் குறைக்கப்படும். 2030 ஆம் ஆண்டிற்குள் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை 120 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/jaguar-land-rover-models-in-india-to-get-up-to-rs-70-lakh-cheaper-after-april-20-jaguar-land-rover-786413.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo