
Business
oi-Velmurugan P
சென்னை: வாழ்க்கையில் யார் எப்போது என்ன முடிவு எடுக்கிறார்கள். அந்த முடிவுகளின் போது உலகலாவிய சூழல் எப்படி இருந்தது. அன்றைக்கு அங்கு நிலைமை எப்படி இருந்தது என்பதை பொறுத்து அவரது வாழ்க்கையே மாறும். இதனை அதிர்ஷ்டம் என்று கூறலாம்… ஆனால் அதிர்ஷ்டம் மட்டுமல்ல.. சரியாக கணிக்க தெரிந்தவர்களும் அதிர்ஷ்டசாலிகள் தான்.. 2020 மார்ச்சில் இந்தியன் வங்கி பங்குகளை 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று மதிப்ப்பு 17 மடங்கு உயர்ந்துள்ளது. இன்றைக்கு அவர் கையில் 1.7 கோடி ரூபாய் கிடைத்திருக்கும். நம்ப முடியவில்லையா.. வாருங்கள் பார்ப்போம்.
பணக்காரன் ஆக, கோடீஸ்வரன் ஆக கஷ்டப்பட்டு உழைத்தால் தான் முடியும். அது உண்மை தான். அதேநேரம் அந்த உழைப்பு உடல் உழைப்பு மட்டுமல்ல.. மூளையை பயன்படுத்தியும் இருக்கலாம்.. உங்களால் காலத்தை சரியாக கணிக்க தெரிந்தாலும் உங்களால் செல்வந்தராக முடியும். அதாவது உழைக்காமலேயே உட்கார்ந்த இடத்திலேயே சம்பாதிக்க மன தைரியமும், நம்பிக்கையும், சரியான நேரத்தில் முதலீடு செய்து காத்திருக்கவும் தெரிய வேண்டும். உங்களால் 100 சதவீதம் கணிக்க தெரியாது என்றாலும் ஓரளவு கணித்து அதனை நம்பி பயணித்தாலே பெரிய கோடீஸ்வரன் ஆகிவிட முடியும்.. அப்படி பெரிய ஆட்களாக மாறியவர்கள் அதிகம்.
ஒரு பிரபல நகைக்கடை இன்று உள்ளது. அதன் உரிமையாளர் ஒரு காலத்தில் அந்த நகைக்கடையை தனது பழைய ஓனரிடம் கடும் கடனுடன் வாங்கினார். சரியாக காலத்தை முதலீடு செய்தார். இன்று தென்னிந்தியாவில் அவருக்கு நகைக்கடை இல்லாத ஊரே இல்லை..

கோவை ஆர்எஸ்புரத்தில் குண்டுவெடிப்பு சமயத்தில் இடத்தை பலரும் விற்றார்கள். அந்த நேரத்தில் இடம் வாங்கியவர்கள், இன்று மிகப்பெரிய கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். அதேபோல் பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிகளில் 2005, 2006களில் நிலம் வெறும் 50 ஆயிரத்தில் வாங்க முடிந்தது. இன்று அங்கு கோடிகளில் போகிறது. அவர்களும் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். இவை எல்லாம் காலத்தை கணித்ததால் அல்லது காலம் பற்றி ஓரளவு அறிந்ததால் வந்தவை.
தங்கம் vs பங்கு சந்தை குறித்து இரண்டு ஒப்பீடுகளை இப்போது 2006ம் ஆண்டில் தங்க நகைள் 100 பவுன் வாங்கியிருந்தால் இன்று அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? ‘
2006-ல் முதலீடு:
ஒரு பவுன் விலை: ₹6,500
வாங்கப்பட்ட அளவு: 100 பவுன்கள்
மொத்த முதலீடு: 100 × ₹6,500 = ₹6,50,000 (6.5 லட்சம் ரூபாய்)
2026-ல் தற்போதைய மதிப்பு:
தற்போதைய ஒரு பவுன் விலை: ₹1,11,000
மொத்த மதிப்பு: 100 × ₹1,11,000 = ₹1,11,00,000 (1 கோடியே 11 லட்சம் ரூபாய்)
லாப விவரம்: மொத்த வளர்ச்சி: உங்கள் முதலீடு சுமார் 17.07 மடங்கு அதிகரித்துள்ளது.
லாபத் தொகை: ₹1,11,00,000 – ₹6,50,000 = ₹1,04,50,000 (1 கோடி 4.5 லட்சம் ரூபாய் லாபம்). அதாவது 20 வருடங்களில் 17 மடங்கு லாபம் கிடைத்திருக்கிறது.
அதேநேரம் 2020 மார்ச் மாதம் கொரோனா லாக்டவுன் சமயத்தில் இந்தியன் வங்கி பங்குகளை 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால், இன்று இன்று மதிப்ப்பு 17 மடங்கு உயர்ந்துள்ளது. இன்றைக்கு அவர் கையில் 1.7 கோடி ரூபாய் கிடைத்திருக்கும். நம்ப முடியவில்லையா.. வாருங்கள் பார்ப்போம். அதற்கு முன்பு முக்கியமான ஒரு விஷயம்.. பங்கு சந்தை என்பது முதலீட்டு அபாயங்களுக்கு உள்பட்டது. சொந்தமாக முடிவெடுங்கள்.. அல்லது செபி அங்கீகாரம் பெற்றவர்களிடம் ஆலோசனை செய்து, நீங்களே முடிவெடுங்கள். ஏனெனில் பங்கு சந்தையில் போட்டால் பணம் கண்டிப்பாக உயரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. ஏறலாம்.. ஏறாமல் போகலாம்.. இறங்கவும் செய்யலாம்..எனவே இது முழுக்க முழுக்க சந்தை அபாயங்களுக்கு உள்பட்டது.
இப்போது விஷயத்திற்கு வருவோம்.. 2020 மார்ச்சில் இந்தியன் வங்கி பங்குகளை 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று மதிப்ப்பு 17 மடங்கு உயர்ந்துள்ளது. இன்றைக்கு அவர் கையில் 1.7 கோடி ரூபாய் எப்படி கிடைத்திருக்கும். கணக்கீட்டை பாருங்கள்
முதலீட்டுக் கணக்கீடு:
முதலீடு செய்த ஆண்டு: 2020 (கொரோனா சரிவின் போது)
முதலீடு செய்த தொகை: ₹10,00,000 (10 லட்சம்)
2020 மார்ச் விலை (சுமார் ₹40-50) ஆக இருந்தது.
2026 ஏப்ரல் விலை (சுமார் ₹880-900) ஆக இருக்கிறது
வளர்ச்சி விகிதம்: 17 மடங்கு (17x)
இன்றைய மதிப்பு: ₹10,00,000 × 17 = ₹1,70,00,000 (1 கோடியே 70 லட்சம் ரூபாய்)
இது எப்படிச் சாத்தியமானது? (சந்தை நிலவரம்):
வாங்கிய விலை: 2020 மார்ச் மாதத்தில் இந்தியன் வங்கியின் (Indian Bank) ஒரு பங்கின் விலை மிகக் கடுமையாகச் சரிந்து சுமார் ₹45 – ₹55 என்ற அளவில் இருந்தது.
இன்றைய விலை: தற்போது (2026 ஏப்ரல் நிலவரப்படி), இந்தியன் வங்கியின் ஒரு பங்கின் விலை சுமார் ₹880-க்கு மேல் வர்த்தகமாகிறது.
லாபம்: நீங்கள் ₹50 விலையில் 10 லட்சத்திற்குப் பங்குகளை வாங்கியிருந்தால், உங்களிடம் சுமார் 20,000 பங்குகள் இருந்திருக்கும். இன்று அதன் மதிப்பு ₹880 எனில், மொத்தம் 1.76 கோடி ரூபாய் கிடைத்திருக்கும்.
கூடுதல் லாபம்
இந்த 6 ஆண்டுகளில் வங்கி வழங்கிய பங்கு லாபத் தொகையை (Dividends) மட்டும் கணக்கிட்டால், அதுவே சில லட்சங்கள் வரை கூடுதலாகக் கிடைத்திருக்கும். 2020-ல் இந்தியன் வங்கியில் போடப்பட்ட 10 லட்சம் ரூபாய், இன்று ஒரு சிறிய சொத்தாக மாறி 1.7 கோடி ரூபாய்க்கும் மேல் வளர்ந்திருக்கும். இது பங்குச்சந்தையில் பொறுமையாகக் காத்திருப்பவர்களுக்குக் கிடைக்கும் “கூட்டு வட்டி” சக்தியின் ஒரு சிறந்த உதாரணமாகும்.
எச்சரிக்கை “பங்குச்சந்தை முதலீடு அபாயத்திற்கு உட்பட்டது” எனவே கவனமாக சுயமாமாக முடிவெடுங்கள்
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/if-you-had-invested-10-lakhs-in-2020-it-would-be-worth-1-7-crores-today-the-magic-of-indian-bank-786465.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

