
Business
oi-Velmurugan P
டெல்லி: அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தும் போர் காரணமாக கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு மட்டுமின்றி, காண்டமிற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய காண்டம் உற்பத்தியாளரான இந்தியாவில் திடீரென ‘காணடம்’ தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முதலில் கச்சா எண்ணெய் விலை விண்ணைத் தொட்டது… இப்போது காண்டம் விலையும் உயரப்போகிறது. இதுகேட்க சற்று விசித்திரமாக இருக்கும். ஆனால் எதார்த்தமான உண்மைகளை பார்ப்போம்.
இந்தியா உலகிலேயே காண்டம் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடுகளில் ஒன்று. இந்தியா ஆண்டுக்கு 400 கோடிக்கும் அதிகமான கான்டம்களை உற்பத்தி செய்கிறது. ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியா அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறது. போரினால் ஹார்முஸ் நீரிணையில் போக்குவரத்துப் பாதை பாதிக்கப்பட்டதால் மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் காண்டம் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக உற்பத்திச் சங்கிலியில் தேக்கம் ஏற்படும்.

காண்டம் தயாரிப்புக்குத் தேவையான மிக முக்கியமான இரண்டு மூலப்பொருட்கள் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது: சிலிகான் ஆயில் (Silicone Oil) மற்றும் அம்மோனியா (Ammonia). இவை இல்லாமல் தரமான, உறுதியான காண்டம்களைத் தயாரிக்க முடியாது. இதுதான் எதார்த்தம்!
சிலிகான் ஆயில்: இது காண்டம் மென்மையாகவும், பயன்படுத்த எளிதாகவும் இருக்கத் தேவைப்படும் உராய்வு நீக்கியாக இருக்கும்.
அம்மோனியா: இது ரப்பரின் அடிப்படை ஆதாரமான ‘இயற்கை லேடெக்ஸ்’ (Latex) கெட்டுப்போகாமல் இருக்கச் சேர்க்கப்படும் ஒரு முக்கியப் பொருள். இந்த ரசாயனங்களை இந்தியா வளைகுடா நாடுகளில் இருந்துதான் பெருமளவில் இறக்குமதி செய்கிறது. ஆனால், தற்போது அந்த நாடுகளிலிருந்து வரும் சரக்குக் கப்பல்களைத் தடுப்பது எது தெரியுமா? ஹார்முஸ் ஜலசந்தி . இது தற்போது ஈரான்-இஸ்ரேல் போர் நடக்கும் பிராந்தியத்தின் மிக முக்கியமான கடல் வழிப் பாதையாகும்.
கப்பல் போக்குவரத்து முடக்கம்
இதுதான் மிக முக்கியமான காரணம். ஈரான்-இஸ்ரேல் போர் நடக்கும் பகுதி ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) மற்றும் செங்கடல் பகுதிக்கு அருகில் உள்ளது. இந்தியா தனது தயாரிப்புகளை ஐரோப்பா மற்றும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்தப் பாதையைத்தான் பயன்படுத்துகிறது.
போர் சூழலால் கப்பல்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதால், போக்குவரத்துச் செலவு பல மடங்கு உயர்ந்து உள்ளது. இதனால் காண்டம் உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி செய்ய முடியாமல் தடுமாறி வருகின்றன. காண்டம் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டதால் உலக நாடுகள் வித்தியாசமான சிக்கலை எதிர்கொள்ள போகின்றன.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/it-is-not-just-oil-and-gas-israel-iran-war-is-disrupting-indias-condom-production-786497.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

