
Business
oi-Prasanna Venkatesh
ஈரான் போர் காரணமாக தங்கம், வெள்ளி விலையில் பெரும் தடுமாற்றம் இருந்து வரும் நிலையில் மத்திய அரசு முக்கியமான இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தியாவின் வர்த்தக சந்தையை பாதுகாக்கும் நோக்கில், மத்திய அரசு தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் தொடர்பான அனைத்து வகை இறக்குமதிகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு முக்கியமான காரணம், வர்த்தக ஒப்பந்தங்கள் (FTA) மூலம் வழங்கப்படும் வரி சலுகைகளை சில இறக்குமதியாளர்கள் தவறாக பயன்படுத்தியதாக அரசாங்கம் கண்டறிந்ததுள்ளது. இதன் காரணமாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) மூலம் அறிவிக்கப்பட்ட இந்த புதிய விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. குறிப்பாக, வர்த்தக சட்டம் பிரிவு 71 கீழ் வரும் முத்துக்கள், மதிப்புமிக்க ரத்தின கற்கள், விலைமதிப்புள்ள உலோகங்கள், போலி நகைகள் மற்றும் நாணயங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் இந்த கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த புதிய விதிகளில் முக்கியமான நெருக்கடி என்னவென்றால், இந்திய வர்த்தகர்கள் ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தங்கள், லெட்டர் ஆஃப் கிரெடிட், முன்பணம் செலுத்துதல் அல்லது கப்பல் அனுப்பும் நிலை போன்ற எந்த காரணத்தையும் அடிப்படையாகக் கொண்டு விதிவிலக்கு வழங்கப்படாது என மத்திய அரசு கூறியது தான்.
FTA ஒப்பந்தங்கள்
இந்திய அரசு உலக நாடுகளுடன் செய்துள்ள வர்த்தக ஒப்பந்தங்கள் (FTA) மூலம் பலதரப்பட்ட வரி சலுகைகள் கிடைத்து வருகிறது. சில இறக்குமதியாளர்கள் இந்த சலுகையை தவறாக பயன்படுத்தி மத்திய அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுத்தி வருவது கண்டறிந்ததுள்ளது.
குறிப்பாக, 2010 முதல் அமலில் உள்ள இந்தியா – ஆசியான் (ASEAN) வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், தாய்லாந்து போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து “கற்கள் பொருத்தப்படாத நகைகள்” (unstudded jewellery) என்ற வகையின் கீழ் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் பொருட்கள் கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த முறையில் இறக்குமதி செய்வதன் மூலம் இறக்குமதியாளர்கள் அதிக இறக்குமதி வரிகளை தவிர்த்து குறைந்த வரியில் பொருட்களை இறக்குமதி செய்து, உள்ளூர் சந்தையில் விற்பனை செய்து அதிக லாபம் பெற்று வருகின்றனர்.
தற்போது மத்திய தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் தொடர்பான அனைத்து வகை இறக்குமதிகளுக்கும் Free என்ற நிலையில் இருந்து Restricted பிரிவாக மாற்றப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு இறக்குமதியாளர்களும் தனிப்பட்ட உரிமம் பெற வேண்டும். மேலும் இந்த கட்டுப்பாடுகள் சாப்டர் 17 கீழ் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் பொருந்தும்.
கட்டுப்பாடுகள் விரிவாக்கம்
2025 செப்டம்பர் மாதத்திலும், 2026 தொடக்கத்திலும் சில குறிப்பிட்ட வகை பிளாட்டினம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது அந்த கட்டுப்பாடுகள் அனைத்து வகை தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் பொருட்களுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எந்தவொரு சலுகையைும் இல்லாமல் முழுமையான கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் Chapter 17 கீழ் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். மேலும் FTA மூலம் கிடைக்கும் சலுகைகள் நீக்கப்பட்டு உள்ளது.
மக்களுக்கு என்ன பாதிப்பு?
இந்த கட்டுப்பாடுகள் காரணமாக, தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் நகைகளின் விலைகள் குறுகிய காலத்தில் உயரக்கூடும். இறக்குமதி குறைவதால் சந்தையில் சப்ளை பாதிக்கப்படலாம், இதன் வாயிலாகவும் விலை உயர கூடும்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/gold-silver-platinum-import-curbs-tightened-by-india-to-stop-fta-misuse-will-jewellery-prices-r-786781.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
