
International
-Halley Karthik
தெஹ்ரான்: ஈரான் எல்லைக்குள் வைத்து இன்று இரண்டு அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கின்றன. இதில் F-35 விமானத்தின் விமானி உயிரிழந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் F-15E ரக விமானத்திலிருந்து தப்பித்த 2 பேரில், ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையினரால் (IRGC) சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15E போர் விமானத்தில் இருந்த விமானி மற்றும் ஆயுத அமைப்புகள் அதிகாரி (WSO) இருவரும் ஈரானிய வான்பரப்பில் தங்கள் இருக்கைகளில் இருந்து வெளியேறினர். இவர்களில் ஒருவர் ஏற்கனவே மீட்கப்பட்டுவிட்டார். ஆனால், மற்றொருவரின் நிலை குறித்த தகவல்கள் குழப்பமாக உள்ளன.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளின் கூற்றுப்படி, F-15E ஸ்ட்ரைக் ஈகிள் வகை போர் விமானத்தில் இருந்த இரு நபர்களில் ஒருவர் மீட்கப்பட்டு, தெற்கு ஈரானில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இருப்பினும், இரண்டாவது நபர் குறித்து பல்வேறு ஊடக அறிக்கைகள் மாறுபட்ட தகவல்களை வெளியிடுகின்றன. ஒரு சிலர் அவர் ஈரானியப் படைகளின் பிடியில் இருப்பதாகக் கூறுகின்றனர், மற்றவர்கள் அவருக்கான தேடுதல் பணிகள் இன்னும் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கின்றன.
ஈரான் அடைவதற்கு முன், உயிருடன் இருப்பவர்களை மீட்க அமெரிக்கப் படைகள் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கியதாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி ‘தி நியூயார்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க செய்தி வலைத்தளமான ஆக்சியோஸ், இந்த விமானத்தில் இரண்டு நபர்கள் இருந்ததாக ஆதாரங்கள் மூலம் தெரிவித்துள்ளது.
முன்புற இருக்கையில் விமானியும், பின் இருக்கையில் ஆயுத அமைப்புகள் அதிகாரியும் என இருவர் F-15E விமானத்தில் இருந்துள்ளனர். அமெரிக்க போர் விமானம் வீழ்த்தப்பட்டது மற்றும் பணியாளர்களைத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்வது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் CNN செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம், சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்திலிருந்து தப்பிய இருவரில் ஒருவரை, அமெரிக்கப் படைகள் ஈரானியப் பிரதேசத்திற்குள் நுழைந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டதற்கான கூறியிருக்கிறது.
இருப்பினும், தேடப்பட்டு வரும் நபர் ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டிருக்கலாம் என தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த போர் விமானம் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையினரால் (IRGC) கடந்த இன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/f-15e-downed-one-us-crew-member-rescued-hunt-on-for-second-pilot-in-iran-011-786929.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
