
Cricket
oi-Prasanna Venkatesh
பெங்களூரு: டாடா குழுமத்திற்கு சொந்தமான பிக் பேஸ்கட், 2026 T20 லீக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியுடன் தனது கூட்டாணியை மேலும் வலுப்படுத்தியுள்ளது. மூன்றாவது ஆண்டாக ஆர்சிபி அணியில் முக்கிய விளம்பரதாரராக பிக் பேஸ்கட் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் குவிக் காமர்ஸ் வர்த்தக துறையில் பெரிய அளவில் வளர்ச்சி அடைய முடியாமல் தினறி வருது மட்டும் அல்லால் பெரும் இழப்புகளை சந்தித்து வருகிறது பிக் பேஸ்கட். இந்த வர்த்தக மந்த நிலையில் இருந்து மீண்டு வர மார்கெட்டிங் பிரிவில் பெரும் முதலீட்டை செய்து வாடிக்கையாளர்களை அதிகம் கவர்வதே பிக் பேஸ்கட்-ன் தற்போதைய திட்டமாக உள்ளது.

பிக் பேஸ்கட் தற்போது 60க்கும் மேற்பட்ட நகரங்களில் செயல்பட்டு, 10 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. காய்கறிகள், பழங்கள், மருந்துகள், அழகு பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் என 30,000க்கும் மேற்பட்ட பொருட்கள் பல பிரிவுகளில் நாடு முழுவதும் மக்களுக்கு சேவை அளித்து வருகிறது. மேலும், 850க்கும் மேற்பட்ட ‘டார்க் ஸ்டோர்கள்’ மூலம் வேகமான டெலிவரி தளத்தையும் பிக் பேஸ்கட் உருவாக்கியுள்ளது.
இந்த வருட ஐபிஎல்-க்காக ஸ்பெஷலாக செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், பிக் பேஸ்கட் ‘க்விக் காமர்ஸ்’ (Quick Commerce) அதிகாரப்பூர்வ பார்ட்னராக செயல்படும். RCB அணியின் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற டிஜிட்டல் தளங்களில் பிக் பேஸ்கட் பிராண்டின் முன்னிலைப்படுத்தப்படும். மேலும் ரசிகர்களுக்காக behind the scenes காட்சிகள், இன்டர்ஆக்டிவ் அனுபவங்கள் வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் ஸ்டேடியத்தில் ரசிகர்களுக்காக ‘Selfie Kiosk’ அமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன. இதன் மூலம் ரசிகர்கள் தங்கள் விருப்பமான வீரர்களுடன் விர்ச்சுவல் செல்ஃபி எடுக்க முடியும். இது டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் ரசிகர் ஈடுபாட்டை உயர்த்தும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.
டாடா குழுமத்தில் பிரச்சனை:
வர்த்தக போட்டி, ஐபிஎல்-க்கு மத்தியில் டாடா குழுமத்தின் டாடா டிஜிட்டல் நிறுவனத்தின் முக்கிய நிர்வாக மாற்றமும் கவனத்தை பெற்று வருகிறது. பிக் பேஸ்கட் நிறுவனர்களான ஹரி மேனன் மற்றும் விபுல் பரேக் தங்களது பொறுப்புகளில் இருந்து விலகத் திட்டமிட்டுள்ளனர். டாடா டிஜிட்டல் நிறுவனம் புதிய சிஇஓ-வை நியமிக்க திட்டமிட்டு வரும் வேளையில் இதன் கீழ் இருக்கும் பிக் பேஸ்கட்-ன் நிறுவனர்கள் மொத்தமாக வெளியேற முடிவு செய்துள்ளனர்.
ஹரி மேனன் மற்றும் விபுல் பரேக் மிகவும் சிறிய அளவிலான பங்குகளை மட்டுமே வைத்திருந்தாலும் இவர்கள் வெளியேற்றத்தால் நிறுவனத்தின் இயக்கம் பாதிக்கப்படும் என கருத்து நிலவுகிறது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/bigbasket-strengthens-partnership-with-rcb-for-2026-t20-league-official-quick-commerce-partner-for-787077.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
