ஒய்டு யார்க்கர் மட்டுமே திட்டம்.. 5 பவுலர்களின் எகனாமி 12க்கு மேல்.. கொடூரமாக பவுலிங் செய்த சிஎஸ்கே! | CSK: Except Khaleel Ahmed CSK Bowlers Economy is more than 12 in the Match against RCB at Chinnaswamy Stadium in IPL 2026

Cricket

oi-Yogeshwaran Moorthi

பெங்களூர்: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் 6 பவுலர்களில் ஒருவரை தவிர்த்து மீதமுள்ள 5 பவுலர்களின் எகனாமி 12க்கும் மேல் இருப்பது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் டெத் ஓவர்களை வீசிய அன்சுல் கம்போஜ் மற்றும் ஓவர்டனின் எகனாமி 13க்கு மேல் சென்றிருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 250 ரன்களை குவித்துள்ளது. அதிரடியாக ஆடிய டிம் டேவிட் 25 பந்துகளில் 8 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 70 ரன்களை குவித்தார்.

CSK

அதேபோல் தேவ்தத் படிக்கல் 29 பந்துகளில் 50 ரன்களையும், ரஜத் பட்டிதர் 19 பந்துகளில் 48 ரன்களையும் எடுத்தனர். ஆர்சிபி அணி முதல் 6 ஓவர்களில் 51 ரன்களையும், கடைசி 14 ஓவர்களில் 199 ரன்களையும் குவித்திருக்கிறது. ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இது பதிவாகி இருக்கிறது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.

சிஎஸ்கே அணி இந்தப் போட்டியில் 6 பவுலர்களை மொத்தமாக பயன்படுத்தியது. இதில் கலீல் அஹ்மத் மட்டுமே 10 ரன்களுக்கு கீழ் எகனாமியை வைத்துள்ளார். 4 ஓவர்களை வீசிய கலீல் அஹ்மத் 37 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார். மற்ற 5 பவுலர்களின் எகனாமியும் குறைந்தது 12ஆக இருக்கிறது. அன்சுல் கம்போஜ் எகனாமி 13ஆகவும், ஓவர்டனின் எகனாமி 14ஆகவும் இருக்கிறது.

சிஎஸ்கே அணியின் மோசமான பவுலிங்கில் உச்சத்தில் இந்தப் போட்டி அமைந்திருக்கிறது. அதேபோல் டெத் ஓவர்களில் ஓவர் தி விக்கெட்டில் இருந்து பவுலிங் செய்யாமல், அரவுண்ட் தி விக்கெட்டில் இருந்து பவுலிங் செய்வதை வாடிக்கையாக தொடர்ந்து வருகின்றனர். கலீல் அஹ்மத், அன்சுல் கம்போஜ், நூர் அஹ்மத், ஓவர்டன் என்று யாரும் இதற்கு விதிவிலக்கு இல்லை.

இதனால் அடுத்தப் போட்டியில் சிஎஸ்கே அணி புதிய திட்டத்துடன் களமிறங்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதேபோல் ஒய்டு யார்க்கரை தவிர்த்து வேறு எந்த திட்டத்தையும் செயல்படுத்த சிஎஸ்கே அணி விரும்பவில்லை. இதனால் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர்கள் ஒவ்வொரு வீரருக்கும் பிரத்யேக திட்டத்துடன் வர வேண்டும் என்று ரசிகர்கள் அறிவுறுத்த தொடங்கி இருக்கின்றனர்.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/csk-except-khaleel-ahmed-csk-bowlers-economy-is-more-than-12-in-the-match-against-rcb-at-chinnaswam-787405.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo