ரேஷன் கடைக்கு போனா இதெல்லாம் நடக்கும்.. 4 முக்கிய மாற்றம்.. என்ன பாதிப்பு? எதை உடனே செய்ய வேண்டும்? | Tamil Nadu Ration Card Major Changes- What everyone Must know – Who will affect? What Ration Card holders must to do next?

Tamilnadu

oi-Prasanna Venkatesh

தமிழ்நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்காற்றும் ரேஷன் கார்டு மற்றும் பொது விநியோக அமைப்பில் (Public Distribution System) மிகப் பெரிய மாற்றங்கள் அறிமுகமாகின்றன. உணவுத் தானியங்கள் பெறும் முறையில் இருந்து, பயனாளர்கள் சரிபார்ப்பு வரை பல்வேறு நிலைகளில் இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது. குறிப்பாக, ஏப்ரல் 2026 முதல் அமலுக்கு வந்துள்ள இப்புதிய விதிமுறைகள், நகர்ப்புறம் மட்டுமல்லாமல் கிராமப்புற மக்களுக்கும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

இந்த மாற்றங்கள் மூலம், அரசு வழங்கும் சலுகைகள் சரியான நபர்களிடம் சரியான நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்ய முயற்சியாக திகழ்கிறது. இதே நேரத்தில், தேர்தல் சூழ்நிலையும் இந்த மாற்றங்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

இந்த நிலையில், என்ன மாற்றங்கள்?, யாருக்கு என்ன பாதிப்பு?, எதை உடனே செய்ய வேண்டும்? என்ற கேள்விகளுக்கான தெளிவான புரிதல் அவசியமாகிறது.

3 e-KYC e-POS Tamil Nadu Ration Card Changes 2026 3 Months Ration at Once Ration e-KYC Mandatory New Ration Card Hold Tamil Nadu Tamil Nadu PDS Updates April 2026 Tamil Nadu ration card changes April 2026 3 months ration grains single installment Tamil Nadu ration e-KYC mandatory e-POS Aadhaar verification ration new ration card issuance on hold Tamil Nadu assembly election ration card ration card apply online now rice wheat 3 months supply PDS clear old stocks ration Tamil Nadu fake ration card removal drive ration supply issues if no e-KYC May 4 new ration card distribution ration card lost apply online Tamil Nadu PDS reforms Tamil Nadu 2026 what to do for ration card Tamil Nadu 2026 3 e-KYC e-POS 3 e-KYC 4

3 மாத உணவுத்தானியம்
ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்ட மாற்றங்களில் மிக முக்கியமானது, மூன்று மாதங்களுக்கு தேவையான உணவுத் தானியங்களை ஒரே முறையில் வழங்கும் திட்டம். இதன்படி ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஒரே நேரத்தில் வழங்கப்படும்.

இந்த முடிவு, மத்திய அரசின் கிடங்குகளில் உள்ள பழைய கோதுமை இருப்புகளை காலி செய்ய வேண்டியும், மாதந்தோறும் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்களை பெற வேண்டிய மக்களின் சிரமத்தை குறைக்கும் முயற்சியாகவும் இது அமைந்துள்ளது. வேலைக்குச் செல்லும் மக்கள் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

e-KYC கட்டாயம்
புதிய மாற்றங்களில் அடுத்த முக்கிய அம்சம் e-KYC கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து பயனாளர்களும் தங்களது ஆதார் விவரங்களை சரிபார்த்து e-KYC செயல்முறையை நிறைவு செய்ய வேண்டும்.

இந்த நடைமுறை நிறைவேற்றப்படாததால், இனி வரும் மாதங்களில் ரேஷன் பொருட்கள் பெறுவதில் சிக்கல்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் தாமதிக்காமல் இந்த செயல்முறையை முடிக்க வேண்டும் என்பது முக்கிய அறிவுறுத்தலாக உள்ளது.

e-POS விநியோக முறை
ரேஷன் விநியோகத்தில் டிஜிட்டல் முறை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. e-POS சாதனங்கள் மூலம் ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு செய்யப்பட்ட பின்னரே பொருட்கள் வழங்கப்படும் நடைமுறை வலுப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் போலியான ரேஷன் கார்டுகள் மற்றும் தகுதி இல்லாத பயனாளர்களை நீக்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உண்மையான பயனாளிகளுக்கு உரிய அளவில் உதவி கிடைப்பதை உறுதி செய்வதே இந்த மாற்றத்தின் நோக்கமாகும்.

புதிய ரேஷன் கார்டு விநியோகம்
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் காரணமாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதனால் புதிய ரேஷன் கார்டுகளை அச்சிட்டு வழங்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

ஆனால், புதிய ரேஷன் கார்டுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை வழக்கம்போல நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் எந்த தடையும் இன்றி விண்ணப்பிக்கலாம்.

தேர்தல் முடிந்த பின் விநியோகம்
தேர்தல் அதிகாரிகள் கூறுகையில் தேர்தல் முடிவுகள் வெளியான பின், குறிப்பாக மே 4-ஆம் தேதிக்கு பின்னர் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் மீண்டும் தொடங்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் சராசரியாக 2000 விண்ணப்பங்கள் வருவதால், அவை அனைத்தும் தேர்தலுக்குப் பிறகு பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு கார்டுகள் வழங்கப்படும்.

இப்போதே விண்ணப்பிக்க வேண்டியது ஏன் முக்கியம்?
ரேஷன் கார்டு தொலைந்தவர்கள் அல்லது புதிய கார்டு தேவைப்படுவோர் உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பித்து வைப்பது சிறந்தது. தேர்தல் முடிவுக்குப் பிறகு விண்ணப்பிப்பதால் அதிக நெரிசல் மற்றும் தாமதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

அதனால், முன்கூட்டியே விண்ணப்பித்தால், செயல்முறை விரைவாக முடிவடைய வாய்ப்பு அதிகம்.

தமிழகத்தில் ரேஷன் விநியோக முறையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மாற்றங்கள், பொதுமக்களின் வசதியையும், விநியோகத்தின் வெளிப்படைத்தன்மையையும் அதிகரிக்கும் நோக்கத்துடன் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

மூன்று மாத விநியோகம், e-KYC கட்டாயம், டிஜிட்டல் சரிபார்ப்பு, தேர்தல் காரணமான தற்காலிக நிறுத்தம் போன்ற அம்சங்களை சரியாக புரிந்து கொண்டு செயல்பட்டால், பொதுமக்கள் எந்த சிக்கலும் இல்லாமல் அரசின் நலதிட்டங்களின் பலன்களை பெற முடியும்.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/tamilnadu/tamil-nadu-ration-card-major-changes-what-everyone-must-know-who-will-affect-what-ration-card-ho-787675.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo