Bumrah: அடிச்சதே அண்ணனை தான்யா.. பும்ரா வீசிய முதல் பந்து.. தூக்கி சிக்சர் அடித்த வைபவ் சூர்யவன்ஷி! | Bumrah: 15 Year old Vaibhav Suryavanshi hits 2 Sixes against Mumbai Indian Bowler Jasprit Bumrah which surprises fans across the world

Cricket

oi-Yogeshwaran Moorthi

கவுகாத்தி: மும்பை அணியின் நட்சத்திர வீரர் பும்ரா வீசிய முதல் பந்திலேயே 15 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி சிக்ஸ் அடித்திருப்பது பலரையும் வியக்க வைத்திருக்கிறது. அந்த ஓவரிலேயே 2 சிக்சர்களை விளாசிய வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தால், ஒரு நிமிடம் பும்ராவும் சிரித்து ரியாக்சன் கொடுத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டி மழைக் காரணமாக 11 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்தப் போட்டிக்கு முன்பு இருந்தே பும்ராவின் பந்தை வைபவ் சூர்யவன்ஷியால் எதிர்கொள்ள முடியுமா என்ற கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்தது. உலகின் நம்பர் 1 பவுலரான பும்ராவை சூர்யவன்ஷியால் எதிர்கொள்ள முடியுமா என்ற விவாதம் நடந்து வந்தது.

Bumrah

இதன்பின் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் தீபக் சஹர் வீசிய முதல் ஓவரில் ஜெய்ஸ்வால் ருத்ர தாண்டவம் ஆடினார். அந்த ஓவரில் மட்டும் ஒரு சிக்ஸ், 4 பவுண்டரி விளாசப்பட்டது. இதன்பின் 2வது ஓவரில் பும்ரா அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். இந்தப் பக்கம் வைபவ் சூர்யவன்ஷி பேட்டிங்கிற்கு தயாரானார்.

பும்ரா வீசிய முதல் பந்திலேயே வைபவ் சூர்யவன்ஷி ஒய்டு லாங் ஆன் திசையில் தூக்கி சிக்சர் அடித்தார். இதனை பார்த்த பும்ரா சிரித்துக் கொண்டே நடந்து சென்றார். இது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து பும்ரா வீசிய 4வது பந்திலும் மீண்டும் வைபவ் சூர்யவன்ஷி சிக்சர் அடித்தார். பும்ராவின் ஓவரில் 2 சிக்சர்களை வைபவ் சூர்யவன்ஷி விளாசி இருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் ஷர்துல் தாக்கூர் வீசிய முதல் பந்திலும் சிக்சர் விளாசினார். ஏற்கனவே சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அன்சுல் கம்போஜ், கலீல் அஹ்மத் உள்ளிட்ட பலரையும் வைபவ் சூர்யவன்ஷி விளாசி தள்ளி இருக்கிறார். இதனால் வைபவ் சூர்யவன்ஷியை சர்வதேச டி20 கிரிக்கெட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.

தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் பவுலர்களின் முகமாக இருக்கும் பும்ராவையும் விளாசி இருப்பது சர்வதேச அளவில் திரும்பி பார்க்க வைத்துள்ளது. 15 வயதே ஆனாலும் சிக்சர் அடித்துவிட்டு அடுத்த பந்திலேயே வைபவ் சூர்யவன்ஷி சிங்கிள் ஓடிவிடுகிறார். இதனால் ரன்கள் சேர்க்கும் தெளிவுடன் 15 வயதிலேயே செயல்படுவதாகவும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/bumrah-15-year-old-vaibhav-suryavanshi-hits-2-sixes-against-mumbai-indian-bowler-jasprit-bumrah-whi-787979.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo