சிஎஸ்கே அணி இப்போ ரெடி.. பிரெவிஸ், தோனி கம்பேக் லோடிங்.. இனி 2 விஷயங்கள் மாறப்போகுது! | Dewald Brevis: MS Dhoni and Brevis to come back to CSK team for the Match against Delhi Capitals which will favour Chennai team at Chepauk in the IPL 2026

Cricket

oi-Yogeshwaran Moorthi

சென்னை: சென்னை அணிக்காக அடுத்தப் போட்டியில் டிவால்ட் பிரெவிஸ் மற்றும் தோனி ஆகிய இருவரும் களமிறங்குவது உறுதி என்று தகவல் கிடைத்துள்ளது. பிரெவிஸ் வருகை சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டரை கூடுதல் வலிமைப்படுத்தும் என்று பார்க்கப்படும் சூழலில், தோனியின் வருகை களத்தில் செய்யும் தவறுகளை குறைக்கும் என்றும் பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி விளையாடியுள்ள 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. முதல் போட்டியில் பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும், அடுத்த 2 போட்டிகளிலும் பவுலர்கள் கொடூரமாக செயல்பட்டனர். அதிலும் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் பவுலிங் வரலாற்று சிறப்புமிக்க இடத்தை பிடித்திருந்தது.

Dewald Brevis

இனி சிஎஸ்கே அணி இந்த அளவிற்கு ஒரு மோசமான பவுலிங்கை வீச முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி அடுத்ததாக சனிக்கிழமையன்று டெல்லி அணிக்கு எதிராக விளையாட உள்ளது. அதற்கு முன் சிஎஸ்கே வீரர்களுக்கு நல்ல ஓய்வும், திட்டமிடுவதற்கான நேரமும் இருக்கிறது. இதனால் அடுத்த போட்டியிலாவது சிஎஸ்கே அணி கம்பேக் கொடுக்கும் என்று பார்க்கப்படுகிறது.

அதற்கேற்ப சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான டிவால்ட் பிரெவிஸ் காயத்தில் இருந்து குணமடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாகவே பிரெவிஸ் ஓரளவிற்கு வலைப்பயிற்சியில் விளையாட தொடங்கி இருந்தார். தற்போது சென்னையில் முகாமிட்டுள்ள சிஎஸ்கே வீரர்கள் ஓய்வில் இருந்தாலும், பிரெவிஸ் கூடுதல் பயிற்சியை தொடங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதேபோல் தோனியும் அடுத்தப் போட்டியில் களமிறங்குவதற்கான சூழல் அமைந்திருக்கிறது. தசைபிடிப்பு காரணமாக ஓய்வில் இருக்கும் தோனி, நாளை ஃபிட்னஸ் டெஸ்டில் பங்கேற்க இருக்கிறார். அந்த சோதனையில் தோனி நன்றாக முன்னேற்றம் கண்டிருந்தால், அவர் டெல்லி அணிக்கு எதிராக களமிறங்க வாய்ப்புகள் உள்ளது.

டிவால்ட் பிரெவிஸ் சிஎஸ்கே அணிக்குள் வரும் பட்சத்தில் மிடில் ஆர்டரில் கூடுதல் நம்பிக்கை பிறக்கும். அதேபோல் அவரின் அனுபவம் சிஎஸ்கே பேட்டிங்கை வலிமைமிக்கதாக மாற்றும். அதேபோல் தோனி களத்தில் இருக்கும் போது சிஎஸ்கே வீரர்கள் செய்யும் தவறுகள் கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக சில ஃபீல்டிங் மாற்றங்கள் மிகப்பெரிய பலனளிக்கும் என்று பார்க்கப்படுகிறது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/dewald-brevis-ms-dhoni-and-brevis-to-come-back-to-csk-team-for-the-match-against-delhi-capitals-whi-787987.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo