
International
oi-Nantha Kumar R
டெஹ்ரான்: ஈரானில் உள்ள மொத்த மக்களையும் இன்று இரவு அழிப்போம். ஈரான் என்ற நாடே இருக்காது என ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் விமான நிலையம், கச்சா எண்ணெய் வர்த்தகத்துக்கு முக்கிய இடமாக இருக்கும் கார்க் தீவு, உலகிலேயே மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயல், குடியிருப்பு பகுதிகளில் இஸ்ரேல், அமெரிக்கா தாக்கி உள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா இடையேயோன போர் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை இன்று இரவு 8 மணிக்குள் திறக்காவிட்டால் ஈரான் என்ற நாடே இருக்காது. மொத்த மக்களும் அழிக்கப்படுவார்கள் என்று டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக டிரம்ப், ”இன்று இரவு ஒரு நாட்டின் (ஈரான்) நாகரிகமே (மக்கள்)அழிந்துவிடும். இதனை செய்ய நான் ஒருபோதும் விரும்பவில்லை. ஆனால் அது நடக்கும். உலகின் நீண்ட நெடிய வரலாற்றில் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றாக இன்றைய இரவு இருக்கலாம். 47 ஆண்டு கால அராஜகம், ஊழல், மரணங்கள் முடிவுக்கு வரும். ஈரான் மக்களுக்கு கடவுள் அருள் கொடுக்கட்டும்” மிரட்டல் விடுத்துள்ளார்.
இதற்கிடையே தான் ஈரான் மீது இன்று அமெரிக்காவும், ஈரானும் சேர்ந்து கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:
* ஈரானில்உள்ள கார்க் தீவு மீது அமெரிக்கா கொடூர தாக்குதல் நடத்தி உள்ளது. மொத்தம் 50 இடங்களை குறிவைத்து ‘அட்டாக்’ நடந்துள்ளது. இந்த கார்க் தீவு என்பது ஈரானுக்கு மிகவும் முக்கியமானது. இங்கிருந்து தான் 90 சதவீத கச்சா எண்ணெய் ஏற்றுமதி நடக்கும். இதனால் கார்க் தீவை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது.
* ஈரானில் உள்ள 3 விமான நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதல் என்பது ஈரானின் விமானங்கள், ஹெலிகாப்டர்களை அழிக்கும் வகையில் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஈரானின் மேற்கு பகுதியில் அமைந்து இருக்கும் கோரம்மபாத் சர்வதேச விமான நிலையம் மீதான தாக்குதலை ஈரான் உறுதி செய்துள்ளது.
* உலகிலேயே மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலாக தெற்கு பார்ஸ் கேஸ் வயல் உள்ளது. இதனை மையப்படுத்தி இயங்கி வரும் பெரிய பெட்ரோ கெமிக்கல் வளாகம் மற்றும் தென்மேற்கு ஈரானில் ஷிராஷ் எனும் பகுதியில் செயல்பட்டு வரும் பெட்ரோ கெமிக்கல் காம்பவுண்ட் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.
* ஈரானின் தெற்கு பார்ஸ் கேஸ் வயலுக்கு மின்சப்ளை வழங்கும் 2 யூனிட்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
* இஸ்ரேல் சார்பில் மத்திய ஈரானின் காஷன் நகரில் உள்ள யாக்யா அபாத் ரயில்வே மேம்பாலம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
* ஈரானில் உள்ள புஷர் அணு மின் நிலையம் அரகே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐநாவுக்கான சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் ஐஆர்ஜிசி எனும் இஸ்லாமிக் புரட்சிகர காவல் படையினர் உளவுத்துறை தலைவராக இருக்கும் மேஜர் ஜெனரல் மஜித் காடேமி உயிரிழந்துள்ளார்.
* அமெரிக்கா, இஸ்ரேல் சார்பில் குடியிருப்பு பகுதிகள் மீதான கொடூர தாக்குதலில் அப்போர்ஸ் மாகாணத்தி்ல 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
* ஈரானின் ஷாரியார் சநகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 9 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-war-how-many-places-attacked-by-us-and-israel-today-details-here-787967.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
