ஈரானில் உள்ள இந்தியர்களே உஷார்! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இதை செய்யாதீங்க! | Indian Embassy Issues Urgent Advisory for Nationals in Iran: Stay Indoors for Next 48 Hours Amidst Rising Tensions

International

oi-Halley Karthik

தெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் மிகப்பெரிய தாக்குதலை நடத்தலாம் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது. இந்நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு, இந்திய தூதரகம் அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது.

ஈரானில் உள்ள இந்தியக் குடிமக்களை 48 மணி நேரத்திற்கு வீட்டிலேயே இருக்குமாறு இந்தியத் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. ஈரானில் உள்ள இந்தியக் குடிமக்கள் அடுத்த 48 மணி நேரத்திற்கு வீட்டிலேயே இருக்குமாறு தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

Indian Embassy

இன்று மாலை வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், குடிமக்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என்றும், அனைத்து மின்சார மற்றும் இராணுவத் தளங்களைத் தவிர்க்கவும், பல மாடிக் கட்டிடங்களின் மேல் தளங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், நெடுஞ்சாலைப் பயணம் மேற்கொள்ளும்போது, செல்லும்பாதை குறித்து தூதரகம் வெளியிட்டிருக்கும் அப்டேட்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது.

தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹோட்டல்களில் தங்கியிருப்பவர்கள் அங்கேயே இருக்குமாறும், அங்குள்ள தூதரகக் குழுவினருடன் தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஏதேனும் உதவி தேவைப்படின், இந்தியர்கள் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:

மொபைல் எண்கள்: +989128109115, +989128109109, +989128109102, +989932179359
மின்னஞ்சல்: [email protected]

அமெரிக்காவின் மிரட்டல்

போர் நிறுத்தம் குறித்து, அமெரிக்கா முன் வைத்திருக்கும் வலியுறுத்தல்களை ஈரான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் கேட்டிருக்கிறார். ஒருவேளை ஈரான் இதை ஏற்கவில்லை எனில், முழு போர் தொடங்கப்படும் என்றும் டிரம்ப் கூறியிருக்கிறார். இதற்காக அவர் விடுத்திருந்த காலக்கெடு நாளை அதிகாலை 5.30 மணியுடன் நிறைவடைகிறது. எனவே ஈரானில் உள்ள இந்தியர்கள் குறித்து, இந்திய தூதரகம் அறிவுறுத்தல்களை கொடுத்திருக்கிறது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/indian-embassy-issues-urgent-advisory-for-nationals-in-iran-stay-indoors-for-next-48-hours-amidst-r-787953.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo