
Business
oi-Prasanna Venkatesh
மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இன்று 10 மணியளவில் தனது நாணய கொள்கை முடிவுகளை அறிவிக்க உள்ளது. ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான நாணய கொள்கை குழு (MPC) ஏப்ரல் 6 முதல் 2 நாட்கள் நடத்திய கூட்டம் நிறைவடைந்து இன்று MPC கூட்டத்தின் முடிவுகளை வெளியிட உள்ளது.
ஆர்பிஐ ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் ஒருமுறை சந்தித்து, நாட்டின் பொருளாதார நிலவரத்தை ஆராய்ந்து, வட்டி விகிதங்கள் குறித்த முடிவுகளை எடுக்கிறது. இந்த வகையில் ஈரான் போர் நிறுத்தம் அறிவித்திருக்கும் வேளையில் ரெப்போ விகிதம் குறைப்பு குறித்து முக்கியமான முடிவை இக்கூட்டத்தில் எடுத்துள்ளது.

இந்த முறை கொள்கை அறிவிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மேற்கு ஆசியாவில் அதிகரித்து வந்த போர் பதற்றம் அமெரிக்க – ஈரானின் இந்த முடிவால் தனிந்தாலும் முதலீட்டு சந்தையிலும், பொருளாதாரத்திலும் ஏற்பட்ட தாக்கம் குறையவில்லை. இத்தகைய முக்கியமான காலக்கட்டத்தில் ஆர்பிஐ தனது நாணய கொள்கையை நடத்தியுள்ளது.
பிப்ரவரி மாதத்தில் நடந்த நாணய கொள்கை கூட்டத்தில், ஆர்பிஐ தனது ரெப்போ விகிதத்தை 5.25% ஆக மாற்றாமல் வைத்தது. 2025ஆம் ஆண்டு முழுவதும் 125 அடிப்படை புள்ளிகள் குறைத்த பிறகு, ரிசர்வ் வங்கி wait and watch என்ற அணுகுமுறையை எடுத்தது. இந்த நிலையில் இன்றைய கூட்டத்தில் எப்படிப்பட்ட முடிவை எடுக்கும் என்பது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ரெப்போ விகிதம் குறைந்தால் வட்டி ஹோம் லோனுக்கான வட்டி விகிதம் குறையும், இதேபோல் புதிதாக கார், பைக் வாங்குவோருக்கு குறைந்த வட்டியிலும், குறைந்த ஈஎம்ஐ-யிலும் கடன் கிடைக்கும். இதனால் இன்றைய கூட்டத்தில் ரெப்போ விகிதம் குறையுமா என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பொருளாதார நிபுணர்கள் கணிப்பு
பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள், ரிசர்வ் வங்கி இந்த முறையும் ரெப்போ விகிதத்தை மாற்றாமல் நிலையாக வைத்திருக்கும் என்று கணித்துள்ளனர். தற்போது ரெப்போ விகிதம் 5.25 சதவீதத்தில் உள்ளது. கடைசியாக டிசம்பர் 2025-ல் ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டது.
உலக அளவில் ஏற்பட்டுள்ள பதற்றம் மற்றும் எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்தால், வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாமல் இருப்பதே பாதுகாப்பான முடிவாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
ரூபாய் மதிப்பு 50 பைசா உயர்வு
நாணய கொள்கை கூட்டத்துக்கு முன்பாக, ஈரான் போர் நிறுத்தம் காரணமாக அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 50 பைசா உயர்ந்து 92.56 என்ற அளவில் வர்த்தகமானது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இரண்டு வாரங்களுக்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதே இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.
ரியல் எஸ்டேட் துறை நம்பிக்கை
ரியல் எஸ்டேட் துறை இந்த MPC கூட்டத்தின் முடிவுகளை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது. ஆரைஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநரும் நிறுவனருமான அமன் ஷர்மா கூறுகையில், ஆர்பிஐ இந்த நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை மாற்றாமல் நிலையாக வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இது ரியல் எஸ்டேட் துறைக்கு நல்ல சிக்னலாக அமையும் என கூறியுள்ளார்.
வட்டி விகிதம் குறையாமல் இருந்தாலும், நிலைத்தன்மை தொடர்ந்தாலும் புதிதாக ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வோருக்கு கடன் வாங்கும் செலவு கட்டுப்பாட்டில் இருக்கும். இது ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று துறை வல்லுநர்கள் நம்புகின்றனர்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/rbi-monetary-policy-decision-today-april-8-will-repo-rate-be-cut-amid-iran-us-ceasefire-and-falling-788063.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
