நாளை மறுநாள் முக்கியமான மீட்டிங்! களத்தில் அமெரிக்க அதிகாரிகள்! வளைகுடா எதிர்காலமே இதில்தான் இருக்கு | Iran US Talks Set To Begin In Pakistan On April 10, How middle east crisis is nearing to its end

International

oi-Vigneshkumar

தெஹ்ரான்: அமெரிக்கா ஈரான் மோதலில் இரு வாரங்களுக்கு போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய இந்த மோதல் ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது. இதற்கிடையே நிரந்தர போர் நிறுத்தம் தொடர்பாக இருதரப்பிற்கும் இடையேயான பேச்சுவார்த்தை வரும் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் அமெரிக்கா- ஈரான் இணைந்து இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கியது. இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் முதலில் எடுத்த முயற்சிகள் தோல்வியை தழுவியது. இந்தச் சூழலில் தான் கடந்த சில காலமாக அமெரிக்காவின் டோனிலேயே மாற்றம் தெரிந்தது. போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் தொடர்ந்து காலக்கெடுவை விடுத்தார்.

Iran US Pakistan

இந்தச் சூழலில் தான் இப்போது போர் நிறுத்தம் தொடர்பாக முக்கியமான அறிவிப்புகள் வெளியானது. அதாவது இரு வாரங்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். தொடர்ந்து ஈரானும் இதை உறுதி செய்தது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியும் திறக்கப்படுவதாக ஈரான் அறிவித்தது.

இதற்கிடையே அடுத்த கட்டமாக இரு தரப்பிற்கும் இடையே நிரந்தர போர் நிறுத்தத்தை ஏற்படுத்த பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது. ஈரான் – அமெரிக்கா இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைகள் வரும் வெள்ளிக்கிழமை, அதாவது ஏப்ரல் 10ம் தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் தரப்பு அளித்த 10 அம்ச திட்டத்தின் அடிப்படையிலேயே அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது. பேச்சுவார்த்தைக்கு இணங்கவே இரு நாடுகளுக்கு இடையே இரு வார போர் நிறுத்தமும் அமலுக்கு வருகிறது.

முன்னதாக ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்கள் மீதான குண்டுவீச்சுகளை நிறுத்த போவதாகவும் அந்நாட்டின் மீதான தாக்குதலை இரு வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். மேலும், ஈரானின் 10 அம்ச திட்டத்தை அமெரிக்கா பெற்றிருப்பதாகவும், அது பேச்சுவார்த்தைக்கு ஒரு நல்ல அடிப்படையாக அமையும் என்று நம்புவதாகவும் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையே இருந்த கிட்டத்தட்ட அனைத்து கருத்து வேறுபாடுகளும் நீக்கப்பட்டதாகவும் இந்த இரு வார கால அவகாசத்தை பயன்படுத்தி நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார். ஈரானும் இதை உறுதி செய்தது. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படுகிறது. இதன் மூலம் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி சிக்கல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-us-talks-set-to-begin-in-pakistan-on-april-10-how-middle-east-crisis-is-nearing-to-its-end-788015.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo