இனி ஜென்மத்துக்கும் டி20 கிரிக்கெட் பக்கமே வர முடியாது.. குஜராத் அணியின் முதல் வில்லன் சுப்மன் கில்! | Shubman Gill: Shubman Gill Scored 70 runns off 45 balls against Delhi Capitals and becomes the first villain of Gujarat Titans in IPL 2026

Cricket

oi-Yogeshwaran Moorthi

டெல்லி: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் 45 பந்துகளில் 5 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 70 ரன்களை சேர்த்துள்ளார். 33 பந்துகளில் சுப்மன் கில் அரைசதம் அடித்திருப்பது விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், இனி சுப்மன் கில் ஜென்மத்திற்கு இந்திய டி20 அணி பக்கமே வர முடியாது என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக குஜராத் அணியின் கேப்டன் 45 பந்துகளில் 5 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 70 ரன்களையும், பட்லர் 27 பந்துகளில் 52 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 32 பந்துகளில் 55 ரன்களையும் சேர்த்தனர்.

Shubman Gill

குஜராத் அணி நல்ல ஸ்கோரை பதிவு செய்தாலும், சுப்மன் கில்லின் ஆட்டம் ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்று வருகிறது. ஏனென்றால் டி20 கிரிக்கெட்டில் 40 பந்துகளுக்கு மேல் ஒரு வீரர் விளையாடினால், அவர் குறைந்தபட்சம் 90 ரன்களையாவது சேர்த்திருக்க வேண்டும். சமீப காலங்களில் 50 பந்துகளுக்கு மேல் சதமடிக்க எடுத்துக் கொள்ளும் வீரர்களால், அந்த அணிக்கு பின்னடைவு ஏற்படுகிறது.

இந்தப் போட்டியிலும் கூட சுப்மன் கில் 33 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். இவரை விடவும் வாஷிங்டன் சுந்தர் 29 பந்துகளிலும், ஜாஸ் பட்லர் 24 பந்துகளிலும் அரைசதம் விளாசி இருக்கின்றனர். இவர்களுக்கு பின் கிளென் பிலிப்ஸ், ராகுல் டிவாட்டியா, ரஷித் கான் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் இருந்த போது, சுப்மன் கில் நிதான ஆட்டத்தையே விளையாடி இருக்கிறார்.

இது இந்திய ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படி விக்கெட்டை பாதுகாக்க வேண்டும் என்று விளையாடினால், சுப்மன் கில் கடைசி வரை இந்திய டி20 அணியில் இடம்பெறவே முடியாது என்று ரசிகர்கள் விவாதிக்க தொடங்கியுள்ளனர். ஏற்கனவே சுப்மன் கில் 2024 மற்று 2026 ஆகிய இரு டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை.

இதனால் 150 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினால், அதிலும் தொடக்க வீரராக ஆடினால், சுப்மன் கில் இன்னும் சில ஆண்டுகளில் ஐபிஎல் தொடரிலேயே நீடிக்க முடியாது என்றும் பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் குஜராத் அணியின் வெற்றி, தோல்வியை கடந்து, சுப்மன் கில் கொஞ்சம் கூடுதல் ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் செய்வதை அந்த அணி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று பலரும் அறிவுறுத்த தொடங்கியுள்ளனர்.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/shubman-gill-shubman-gill-scored-70-runns-off-45-balls-against-delhi-capitals-and-becomes-the-first-788261.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo