மகாபிரபு நீங்க இந்த அணிக்கும் வந்துட்டீங்களா.. கேகேஆர் அணியில் ஒரு சுப்மன் கில்.. பாவம் ரஹானே! | Shubman Gill: Raghuvanshi scored a 45 runs off 33 balls in Shubman Gill Style of innings against Lucknow which got heavy criticism among fans in IPL 2026

Cricket

oi-Yogeshwaran Moorthi

கொல்கத்தா: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணியின் இளம் வீரரான ரகுவன்ஷி 33 பந்துகளில் 45 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். இவரின் ஆட்டம் சுப்மன் கில்லின் ஆட்டத்தை போலவே ஆமை வேகத்தில் இருந்ததால், பின் வந்த பேட்ஸ்மேன்களுக்கு கூடுதல் அழுத்தம் ஏற்பட்டது.

ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.

Shubman Gill

சிறப்பாக ஆடிய ரஹானே 24 பந்துகளில் 41 ரன்களையும், பவல் 24 பந்துகளில் 39 ரன்களையும் சேர்த்துள்ளனர். அதேபோல் இளம் வீரரான ஆங்ரிஷ் ரகுவன்ஷி 33 பந்துகளில் 2 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 45 ரன்களை சேர்த்துள்ளார். பவுண்டரி மற்றும் சிக்சரை கணக்கிட்டாலே, 32 ரன்கள் வந்துவிடும். இதில் 7 பந்துகளை கழித்துவிட்டு பார்த்தால், மீதமுள்ள 26 பந்துகளுக்கு வெறும் 13 ரன்களை மட்டுமே ரகுவன்ஷி சேர்த்துள்ளார்.

கேகேஆர் அணிக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. ஏனென்றால் லக்னோ அணியின் பவுலர்கள் மொத்தமாக இணைந்து 43 டாட் பால்களை ஆடி இருக்கின்றனர். அதில் ரகுவன்ஷி மட்டும் சுமார் 13 பந்துகளை டாட் பாலாக ஆடி இருக்கிறார். டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை ஒரு பேட்ஸ்மேன் குறைந்தது 28 பந்துகளில் அரைசதம் எட்டிவிட வேண்டும்.

அப்போது தான் அது அந்த அணிக்கு பயனுள்ள இன்னிங்ஸாக அமையும். நம்பர் 3 பேட்டிங் வரிசையில் பவர் பிளே ஓவர்களிலேயே விளையாடிவிட்ட ரகுவன்ஷி இப்படியொரு மோசமான இன்னிங்ஸை சுப்மன் கில் ஸ்டைலில் ஆடி இருக்கிறார். இதனால் ரகுவன்ஷிக்கு மாற்றாக கேகேஆர் அணி வேறு வீரர்களை தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால் டி20 கிரிக்கெட்டில் ஆங்கர் இன்னிங்ஸ் ஆடும் வீரர்களின் தேவை குறைந்துவிட்டது. 37 வயதாகும் ரஹானேவே 170 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடும் போது, 21 வயதாகும் ரகுவன்ஷி 130 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடுவது நியாயமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் கேகேஆர் அணியின் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் உடனடியாக இந்த சிக்கலை களையாவிட்டால், அது கேகேஆர் அணியின் தோல்விகளுக்கு காரணமாக அமையும்.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/shubman-gill-raghuvanshi-scored-a-45-runs-off-33-balls-in-shubman-gill-style-of-innings-against-luc-788537.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo