தோனியை பார்த்துதான் எல்லாமே.. இந்த வெற்றியை அவருக்கு அர்ப்பணிக்கிறேன்.. முகுல் சவுத்ரி நெகிழ்ச்சி! | MS Dhoni: I used to watch how MS Dhoni would finish games and want to dedicate this win to him says LSG Player Mukul Choudhary

Cricket

oi-Yogeshwaran Moorthi

கொல்கத்தா: கொல்கத்தா அணிக்கு எதிரான வெற்றியை தோனிக்கு அர்ப்பணிப்பதாக லக்னோ அணியின் வீரர் முகுல் சவுத்ரி தெரிவித்துள்ளார். தோனியின் நம்பர் 7 பேட்டிங் வரிசையிலேயே தனும் ஆடுவதாக கூறிய முகுல் சவுத்ரி, தோனியின் ஃபினிஷிங்கை பார்த்து வளர்ந்ததாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு அசலான (Raw) திறமை கொண்ட வீரராக முகுல் சவுத்ரி அறியப்பட்டுள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஒற்றை ஆளாக நின்று ஆட்டத்தை முடித்திருக்கிறார் முகுல் சவுத்ரி. கேகேஆர் அணியின் வெற்றி உறுதி என்று வர்ணனையாளர்கள் பேசத் தொடங்கிய போது, அடுத்த 4 ஓவர்களில் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் மாற்றிவிட்டார்.

MS Dhoni

அதிலும் கடைசி ஓவரின் 5வது பந்தில் அடிக்கப்பட்ட சிக்சர் சர்வதேச வீரர்களையும் வியக்க வைத்துள்ளது. ஏனென்றால் ஒய்டு யார்க்கர் பந்தை ஆஃப் சைடில் சிக்ஸ் அடித்து மிரள வைத்துவிட்டார். 21 வயதாகும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான முகுல் சவுத்ரியை லக்னோ அணி ஐபிஎல் ஏலத்தில் ரூ.2.6 கோடிக்கு போட்டி போட்டு வாங்கியது. முதல் 2 போட்டிகளில் முகுல் சவுத்ரி பெரிய சிக்சர்களை ஒன்றும் அடிக்கவில்லை.

ஆனால் தோனி ஸ்டைலில் அடித்த ஹெலிகாப்டர் ஷாட் நேற்றைய ஆட்டத்தில் யார் இந்த பையன் என்று திரும்பி பார்க்க வைத்தது. முகுல் சவுத்ரியின் ஆட்டத்தை பார்த்து மிட்சல் மார்ஷ், மார்க்ரம், பூரன் உள்ளிட்ட வீரர்களும் கூட வியப்பில் இருந்தனர். இந்தப் போட்டிக்கு பின் முகுல் சவுத்ரி பேசுகையில், 12, 13 வயதில் தான் கிரிக்கெட் விளையாட தொடங்கினேன். எங்கள் ஊரில் பெரிய அகாடமிகள் இல்லை.

அதனால் தொடர்ச்சியாக வேறு வேறு அகாடமிகளுக்கு செல்ல வேண்டிய தேவை இருந்தது. சமீபத்தில் குருகிராமில் உள்ள அகாடமியில் 3, 4 மாதங்களாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். அது எனக்கு அனுபவப் பூர்வமாக உதவியாக இருந்தது. உத்தரப் பிரதேச யு19 அணிக்காக விளையாடிய போது, எங்கள் அணியில் எந்த பேட்ஸ்மேனும் ரன்களே சேர்க்கவில்லை. அப்போது நான் மட்டும் தனியாக ரன்களை சேர்த்தேன்.

அந்த போட்டிக்கு பின்னர் தான் என் தந்தைக்கு நான் பெரிய கிரிக்கெட் வீரராக வருவேன் என்ற நம்பிக்கை வந்தது. ஒரு பவுலராக் தொடர்ந்து 4 தரமான பந்துகளை வீச முடியும். ஆனால் அதில் எனக்கு ஒரு பந்து மட்டும்தான் தேவை. என்னுடைய ஹிட்டிங் ஜோனில் இருந்தால் நிச்சயம் அடித்துவிடுவேன். அதற்காகவே காத்திருந்தேன். நான் இரவு லைட்ஸ்க்கு கீழ் விளையாடும் 2வது போட்டி இது.

சிறுவயதில் இருந்தே தோனியின் ஃபினிஷிங்கை பார்த்து வளர்ந்தவன். நானும் தோனியின் நம்பர் 7 பேட்டிங் வரிசையில் தான் விளையாடுகிறேன். என்னுடைய தொடக்க காலத்திலேயே தோனியின் தாக்கல் அதிகமாக இருந்தது. அவரின் ஆட்டத்தால் ஊக்கம் பெற்றவன் நான்.. கேகேஆர் அணிக்கு எதிரான வெற்றியை தோனிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/ms-dhoni-i-used-to-watch-how-ms-dhoni-would-finish-games-and-want-to-dedicate-this-win-to-him-says-788609.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo